Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப காலையில இந்த பழக்கங்களை வெச்சுக்கோங்க போதும்..
High Cholesterol: தற்போது அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையின் காரணமாக மாரடைப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கொலஸ்ட்ரால் முற்றிலும் ஆபத்தானது அல்ல. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாகும் போது தான், அது உயிரைப் பறிக்கும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த கொலஸ்ட்ரால் நமது உடல் செல்களில் காணப்படுகின்ற ஒரு வழுவழுப்பான பொருளாகும்.
நமது உடல் இதைக் கொண்டு புதிய செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்குகின்றன. ஆனால் இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகம் போது, அது இரத்தக் குழாய்களின் சுவர்களின் படிந்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்துகின்றன. இப்படி இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது, இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கிறது.

சரி, இதயம் ஆரோக்கியமாக இருக்கவும், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் இருக்கவும் ஒருவர் எந்த மாதிரியான பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று பலரும் கேட்கலாம். கீழே உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க ஒருவர் காலையில் கொண்டிருக்க வேண்டிய சில பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. காலையில் சுடுநீர் குடிக்கவும்
உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். அதில் ஒன்று தான் கொலஸ்ட்ராலை சரியான அளவில் பராமரிப்பது. ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுநீரில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை கலந்து, சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், செரிமான பாதைகள் சுத்தமாவது மட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலும் கரைந்து வெளியேறும்.
2. ஆரோக்கியமான காலை உணவு
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமானால், காலை உணவு மிகவும் இன்றியமையாதது. அதுவும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை உண்ண வேண்டும். இப்படி உண்ணும் போது உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களும் கிடைக்கும். அதுவும் காலை உணவின் போது கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளான பழங்கள், நட்ஸ், சிறுதானியங்கள், ஓட்ஸ் போன்றவற்றை உட்கொள்வது நல்லது. இப்படி உண்ணும் போது கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் மற்றும் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
3. க்ரீன் டீ குடிக்கவும்
க்ரீன் குடிப்பதால் உடல் எடை மட்டும் குறைவதில்லை, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலும் குறையும். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் க்ரீன் டீயைக் குடிக்கும் போது உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான பிரச்சனைகள் நீங்கும் மற்றும் இதய ஆரோக்கியமும் மேம்படும். கூடுதலாக, க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ராலை திறம்பட குறைக்கு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
4. உடற்பயிற்சியில் ஈடுபடவும்
கெட்ட கொலஸ்ட்ரலைக் குறைக்க காலையில் ஒருவர் அவசியம் வைத்திருக்க வேண்டிய பழக்கங்களுள் ஒன்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது. அதற்காக கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக வாக்கிங், யோகா போன்ற எளிமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும், இரத்த ஓட்டம் மேம்படும். இதன் விளைவாக இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
5. யோகாவில் ஈடுபடவும்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க மன அழுத்தமும், பதட்டமும் மறைமுகமாக காரணமாக இருக்கின்றன. எனவே கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமானால், முதலில் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க வேண்டும். அதற்கு காலையில் எழுந்ததும் மனதை ரிலாக்ஸடைய உதவும் யோகாவில் ஈடுபட வேண்டும். இப்படி ஈடுபடும் போது, அது கெட்ட மற்றும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட உதவும்.
6. நல்ல தூக்கத்தை மேற்கொள்ளவும்
கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைத்தால், அதற்கு முதலில் இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. நல்ல தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், ஹார்மோன்கள், மெட்டபாலிசம், கொலஸ்ட்ரால் போன்றவற்றின் சமநிலை பாதிக்கப்படும். எனவே கொலஸ்ட்ராலை சரியான அளவில் பராமரிக்க நினைத்தால், தினமும் 7-9 மணிநேர தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
