Latest Updates
-
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்...! -
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் உருவாகும் கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது...! -
கருப்பான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப கடலை மாவை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
கல்யாண பந்தி உருளை பட்டை மசாலா ரெசிபி... இதை செஞ்சு பாருங்க... சாம்பார், ரசம் சாதத்துக்கு பட்டாசா இருக்கும்...
இந்த இடத்துல வலிக்குதா? அப்ப உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்குதுன்னு அர்த்தம்.. உஷார்...
High Blood Pressure Symptoms In Tamil: தற்போது சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாக ஏராளமானோர் அவதிப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது உயர் அழுத்தம் தான். உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர் டென்சன் என்றும் அழைப்பர். இந்த உயர் இரத்த அழுத்தத்தை ஒருவர் கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், விரைவில் மாரடைப்பால் மரணத்தை தழுவக்கூடும்.
உலகளவில் நிறைய பேரின் மரணத்திற்கு இந்த உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 30-79 வயதிற்குட்பட்ட சுமார் 1.28 பில்லியன் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதில் 46 சதவீதம் பேருக்கு தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறியாமலும் உள்ளனர்.

உயர் இரத்த அழுத்தம் தான் அமைதியாக ஒருவருக்கு மாரடைப்பை தூண்டிவிடுகின்றன. எப்படி சர்க்கரை நோயை அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மிகுந்த தாகம், காரணமின்ற எடை இழப்பது போன்ற அறிகுறிகளைக் கொண்டு யூகிக்க முடிகிறதோ, அதேப் போல் உயர் இரத்த அழுத்தத்தையும் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு யூகிக்கலாம். இப்போது உயர் இரத்த அழுத்தத்தின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
விவரிக்க முடியாத தீவிரமான தலைவலி
ஒருவருக்கு தலைவலி பல காரணங்களால் வரலாம். அதில் அதிகமாக டென்சன் ஆவது, அதிகமாக யோசிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் சில சமயங்களில் தலைவலியானது காரணமின்றி வரக்கூடும். அதுவும் அந்த தலைவலியானது மிகவும் கடுமையாக, விவரிக்க முடியாத அளவில் இருக்கும். முக்கியமாக காலையில் இந்த மாதிரியான தலைவலியை ஒருவர் உணர்ந்தால், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம். மேலும் இந்த வகையான தலைவலியை குறைப்பது என்பது கடினமாக இருக்கும். எனவே இதைக் கொண்டும் ஒருவருக்கு உள்ள உயர் இரத்த அழுத்தத்தை அறியலாம்.
நெஞ்சு வலி
நெஞ்சு பகுதியில் வரும் வலியை பலரும் மாரடைப்பாக கருதலாம். ஆனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தாலும் இந்த மாதிரியான அறிகுறி தெரியும். எப்போது ஒருவரது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு குறைகிறதோ, அப்போது அது நெஞ்சு பகுதியை பிசைவதோடு, அழுத்தத்தையும், பாரததையும் அதிகரித்து, வலியை உண்டாக்கும்.
மங்கலான பார்வை
உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது ஒருவரது பார்வையையும் பாதிக்கும். உடலில் உள்ள இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, அது கண்களில் உள்ள இரத்த நாளங்களை சேதமடையச் செய்யும். எனவே உங்களுக்கு திடீரென்று பார்வை மங்கலாகிறது என்றால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து பாருங்கள்.
உடல் களைப்பு
உடல் களைப்பும் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. நீங்கள் திடீரென்று எந்த ஒரு காரணமும் இல்லாமல் மிகுதியான உடல் சோர்வை சந்திக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலை கவனிக்க வேண்டியுள்ளது என்று அர்த்தம். அதுவும் நீங்கள் வேலை செய்யும் நேரத்தில், அந்த வேலையை செய்ய முடியாத அளவில் உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
பிற அறிகுறிகள்
உயர் இரத்த அழுத்தத்தின் பிற அறிகுறிகளாவன:
* மூக்கில் இரத்தம் வடிதல்
* சீதற்ற இதயத் துடிப்பு
* காதுகளில் ரீங்காரம்
* வாந்தி
* குமட்டல்
* குழப்பமான மனநிலை
* பதற்றம்
* நாள்பட்ட கழுத்து வலி
உயர் இரத்த அழுத்தத்தை கவனிக்காவிட்டால் என்ன நடக்கும்?
உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக ஆளைக் கொல்லக்கூடிய ஒன்று. இதை சரியாக கவனித்து சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டால், அது உடலினுள் பலவிதமான பாதிப்பை ஏற்படுத்தி, நிலைமையை மோசமாக்கிவிடும். முக்கியமாக உயர் இரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் மாரடைப்பை சந்திக்கக்கூடும். இது தவிர, உயர் இரத்த அழுத்தமானது மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் தமனிகளை வெடிக்கச் செய்து பக்கவாதத்தை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











