For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கிட்னிய இப்படி சுத்தமா வெச்சுக்கணுமா? இந்த இலைய தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...

சிறுநீரகத்தை சுத்தப்படுத்த அற்புதமான செடி ஒன்றைப் பற்றி இங்கே விவாதிக்கிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.

|

உங்கள் சிறுநீரகங்களை இயற்கையாகவே இதைக் கொண்டு மற்றும் பிற கலவைகளைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். உங்கள் உடல் அதன் வேலையை சிறப்பாக செய்வதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு இருமுறை இதைச் செய்ய பரிந்துரைக்கிறோம்.

Make an Infusion from this Plant and Clean your Kidneys

உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் உடலின் நச்சுத்தன்மையைக் குறைகின்றன எனவே அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்,
உங்கள் உடம்பைத் தூய்மையாக்குவது உங்கள் உடல் நலத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. இது உங்களின் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரக அசுத்தம்

சிறுநீரக அசுத்தம்

நமது சிறுநீரகங்கள்தான் நம் இரத்தத்தை வடிகட்டி, அதிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதற்கு உதவும் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். அனைத்துவித வடிகட்டியைப் போலவே, உங்கள் சிறுநீரகங்களையும் அடிக்கடி சுத்தம் செய்வது மிக அவசியம்.

உடலில் சுத்திகரிக்கும் வேலையைச் செய்யும்போது, ​​சிறுநீரகங்கள் நச்சுப் பொருட்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டுள்ளன, எனவே நீங்கள் அவைகளுடன் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை சுத்தப்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒரு சிறந்த வழிமுறை வோக்கோசுக் (parsley) கலவையாகும்.

MOST READ: பிறவியிலேயே பெரிய தலைவராகப் போகும் ஐந்து அதிஷ்ட ராசிகள் இவைதான்... உங்க ராசியும் இருக்குபோல...

பார்சிலி

பார்சிலி

வோக்கோசு (பார்சிலி) என்பது பொதுவாக நமது உணவில் ஒரு கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், உண்மை என்னவென்றால், இந்த மூலிகையைச் சேர்ப்பதால் நமது உணவுக்கு சுவையும் கூடுகிறது. வோக்கோசு infusions உங்கள் சிறுநீரகங்களை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

ஊட்டச்சத்து உள்ளடக்கம்:

ஊட்டச்சத்து உள்ளடக்கம்:

வோக்கோசு, வைட்டமின்கள் மற்றும் உடலைக் குணப்படுத்தும் பண்புகளுடன் கூடிய மற்ற உறுப்புகளையும் கொண்டிருக்கிறது. அதன் ஊட்டச்சத்தைப் பார்க்கும் போது அது மிகவும் முழுமையான உணவாகிறது.

இதில் என்ன இருக்கிறது?

இதில் என்ன இருக்கிறது?

• வைட்டமின்கள் (A, B, C மற்றும் D)

• கனிமங்கள் (கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், சல்பர்)

• நார்ப்பொருள்

• ஃபிளவனாய்டுகள்

வைட்டமின் "A" நோயெதிர்ப்பு செயல்பாட்டில் ஈடுபடும், அதே நேரத்தில் C மற்றும் E சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். ஃபிளவனாய்டுகளில் டையூரிடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளது. இதற்கிடையில் கால்சியம் நம் எலும்புகளுக்கும், ஃபைபர் செரிமான அமைப்புக்கு உதவும் ஒரு முக்கியமான பங்கைத் தருகின்றன. எனவே ஒரு கப் வோக்கோசுக் கலவையால் நிறைய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்க முடியும்

நீங்கள் அதை ஒரு infusion ஆக மட்டும் எடுத்துக் கொள்வதோடு ஒரு smoothie ஆக அல்லது அதைச் சாப்பாட்டோடு சேர்த்து ஒரு உணவாகவும் உண்ணலாம்.

இந்த மூலிகை பல வழிகளில் உங்கள் உடலுக்கு உதவுகிறது, எனவே உங்கள் உணவில் இதை நீங்கள் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

MOST READ: ஆணும் பெண்ணும் நிர்வாணமாக மாறிமாறி செய்துகொள்ளும் தாந்திரீக மசாஜ் பற்றி தெரியுமா? இதுதான் அது...

வோக்கோசின் நன்மைகள்:

வோக்கோசின் நன்மைகள்:

வோக்கோசின் பல நன்மைகளில், பின்வருவனவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அது:

• உங்கள் உறுப்புகளை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது.

• ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்.

• உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

• ஒரு டையூரிடிக்

• அழற்சி எதிர்ப்பான்.

• கரி மற்றும் சிறுநீரகக் கற்கள் தோற்றத்தை தடுக்கிறது (கட்டுப்படுத்துகிறது , நீக்காது).

• செரிமானம் மற்றும் செரிமான அமைப்புகளின் பொதுவான செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

• உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்கிறது.

• ஆஸ்டியோபோரோசிஸை எதிர்க்கிறது.

• எடையை இழக்க உதவுகிறது.

• சோர்வைத் தடுக்கும்.

• இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.

எப்படி சாப்பிடலாம்?

எப்படி சாப்பிடலாம்?

இந்த ருசியான வோக்கோசு infusion னைப் பயன்படுத்தி உங்கள் சிறுநீரகங்களை சுத்தம் செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:

• 1 தேக்கரண்டி புதிய அல்லது உலர்ந்த வோக்கோசு (8 கிராம்)

• 1 கப் தண்ணீர் (250 மிலி)

இதை எப்படிச் செய்வது?

இதை எப்படிச் செய்வது?

புதிய மற்றும் உலர்ந்த வோக்கோசு இடையே உள்ள வேறுபாடு சிறிய சுவை மாறுதல் மட்டுமே. எந்தவொரு விஷயத்திலும், இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

• முதலில், ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும் .

• தண்ணீர் கொதிக்கும்போது, ​ஒரு தேக்கரண்டி ​வோக்கோசை சேர்க்கவும். நீர் கொதிநிலையை அடையும் போது வோக்கோசுகளை சேர்க்க வேண்டும் என்பது முக்கியம், இல்லாவிடில் அதன் பண்புகள் சிலவற்றை இழக்க நேரிடும்.

•மேலும் 5 நிமிடங்களுக்கு இதைக் கொதிக்க விடவும்.

•சுடரை அணைத்து, வோக்கோசின் துணுக்குகளை நீக்க அதை நன்கு வடிகட்டி சில நிமிடங்கள் ஆறவிடவும்.

• நீங்கள் விரும்பினால் சர்க்கரை அல்லது சுவையூட்டிகளைச் சேர்க்கலாம். சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வீதம் வாரத்தில் 4 நாட்களுக்கு குடிக்க வேண்டும்.

MOST READ: அட்ட கருப்பா இருக்கீங்களா?... அட இது உங்களுக்குதாங்க... ட்ரை பண்ணுங்க... ஜொலிப்பீங்க...

இந்த infusion -னை நிறைய குடிப்பீர்களா?

இந்த infusion -னை நிறைய குடிப்பீர்களா?

அதிகப்படியான எதுவும் நல்லதல்ல, அந்த வகையில் இதுவும் அவ்வாறே. வோக்கோசில் காணப்படும் ஃபிளாவோனாய்டுகள் அதிக நீர் மற்றும் சோடியத்தை அகற்ற உதவுகின்றன, ஆனால் அவை பொட்டாசியத்தின் செறிவூட்டல் மற்றும் இரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கின்றன.

இரத்தத்தில் பொட்டாசியம் உயர்ந்தால் ஹைபர்காலேமியா என அழைக்கப்படுகிறது . அது உங்களுக்கு இதயத் துடிப்பு கோளாறுகள் அல்லது பிடிப்புகளை ஏற்படுத்தலாம்.

பெண்கள் இந்தக் கலவையை அதிகமாகக் குடிக்கக் கூடாது, ஏனெனில் இது கருப்பை சுருக்கங்களுக்கு காரணமாக அமையலாம். சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கும் இது நல்லதல்ல எனவே இது பரிந்துரைக்கப்படவில்லை.

ஆகவே, உங்கள் சிறுநீரகங்களை இயற்கையாகவே இந்தக் கலவை அல்லது பிற கலவைகளைக் கொண்டு சுத்திகரியுங்கள். உங்கள் உடல் அதன் வேலையை சிறப்பாக செய்வதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு இருமுறை இதைச் செய்ய பரிந்துரைக்கிறோம். உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் உடலின் நச்சுத்தன்மையைக் குறைகின்றன. எனவே அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்,

இந்த உறுப்புகளின் சரியான செயல்பாட்டின் காரணமாக, உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும், பல நோய்கள் தடுக்கப்படும்.

உங்கள் மருத்துவரிடம் வருடாவருடம் அல்லது வருடத்திற்கு இருமுறை முழுப் பரிசோதனை செய்து கொள்ள மறந்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Make an Infusion from this Plant and Clean your Kidneys

here we are discussing about one amazing plant for cleaning kidneys.
Story first published: Tuesday, November 20, 2018, 12:02 [IST]
Desktop Bottom Promotion