Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
எந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்? அதற்குமேல் வைத்தால் என்னவாகும்?
பெண்கள் தலையில் பூக்கள் வைப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் எவ்வளவு வகையான பூக்கள் இருக்கின்றன என்பது தெரிந்தால் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்துவிடுவீர்கள். அதிலும் அவற்றின் நன்மைகளைத் தெரிந்து கொண்டால் எவ்வளவு ஆச்சர்யங்கள் இருக்கும்.

அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்களைச் சூடினார்கள். நாம் நினைக்கிறோம் அவர்கள் மலர் சூடியது வெறும் அழகுக்காகவும் வாசனைக்காகவும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் அற்புதங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் பூக்களோடு தான் விளையாடுவீர்கள். அதைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

பூக்களின் வகைகள்
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கும் மேல் பூக்களின் வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் ஆயிரம் கோடி மலர்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் இருக்கிறதாம். அந்த ஆயிரம் கோடி மலர்களில் 500 கோடி பூக்கள் மருத்துவப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில பெரும்பாலான மலர்கள் மணமூட்டிகளாகவும் பர்ஃபியூம் மற்றும் ஸ்பிரே தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

எந்த பூவை எவ்வளவு நேரம் தலையில் வைக்கலாம்?
பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் அணிவதில் உள்ள மருத்துவப் பயன்கள் தெரியாமல் லேசாக வாடியதும் எடுத்து கீழே வீசிவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் ஒவ்வொரு பூக்களையும் சில குறிப்பிட்ட கால அளவு வரையிலும் தலையில் சூடியிருக்க வேண்டும். அதன் விவரங்களைப் பார்ப்போம்.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாட்கள்
தாழம்பூ - 5 நாட்கள்
ரோஜாப்பூ - 2 நாள்
மல்லிகைப்பூ - அரை நாள்
செண்பகப்பூ - 15 நாள்
சந்தனப்பூ - 1 நாள் மட்டும்
மகிழம்பூ - சாப்பிடும்போது மட்டும்
குருக்கத்திப்பூ - சாப்பிடும்போது மட்டும்
மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - வாசனை இருக்கும்வரை மட்டும்

பயன்கள்
ஒவ்வொரு பூக்களுக்கும் எப்படி வாசனை வேறுபடுகிறதோ அதேபோல் அதனுடைய ஆரோக்கிய மற்றும் மருத்துவ குணங்களும் பயன்களும் வேறுபடுகின்றன. அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு நாம் பூக்களைத் தலையில் சூடுவதோ அல்லது மற்ற மருந்துப் பொருளாகப் பயன்படுத்தினாலோ கூடுதல் பலன்களை அடைய முடியும். அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரோஜாப்பூ
தலைசுற்றுதல், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ரோஜாப்பூ சிறந்த தீர்வாக அமையும். சருமப் பராமரிப்பிலும் முக அழகையும் நிறத்தையும் கூட்டுவதிலும் தோஜாவுக்கு மிக முக்கியப் பங்குண்டு.

மல்லிகைப்பூ
மல்லிகைப் பூ மன அழுத்தத்திலிருந்து சிறந்த விடுதலை தரும். மன அமைதிக்கு வழிவகுக்கும். கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

செண்பகப்பூ
பக்கவாதத்தைக் குணப்படுத்தக்கூடிய மாபெரும் ஆற்றல் இந்த செண்பகப்பூவுக்கு உண்டு. அதோடு பார்வைத் திறனை மேம்படுத்தவும் பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தீர்க்கும் ஆற்றல் உண்டு.

பாதிரிப்பூ
காதில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்ய பாதிரிப்பூ சிறந்த மருந்து. ஜீரண சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல் மற்றும் கண் எரிச்சலை சரிசெய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.

செம்பருத்தி
உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றல் செம்பருத்தி மலருக்கு உண்டு. தலைக்கு சிறந்த கண்டிஷ்னராக செயல்படுகிறது. பொடுகு, முடி உதிர்தல் போன்ற தலைமுடி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதன்மையான இந்த செம்பருத்தி.

மகிழம்பூ
தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சரும வடுக்கள், தலை வடுக்களை சரிசெய்யும்.
பல் சொத்தை மற்றும் பல் வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வில்வப்பூ
தீராத காச நோயையும் சரிசெய்யும். சுவாசக் கோளாறுகளைப் போக்கி சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கும் இந்த வில்வ மலர் சிவனுக்கு பூஜைக்குரிய பொருளாகவும் விளங்குகிறது.

சித்தகத்திப் பூ
தலைவலி, ஒற்றைத் தலைவலியையை குணப்படுத்தும். மூளை நரம்புகளைத் தூண்டிவிட்டு மூளை மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட உதவும்.

தாழம்பூ
தாழம்பூ வாசனை ஊரெல்லாம் மணக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நறுமணம் வீசுவதோடு உடல் சோர்வைப் போக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.

தாமரைப்பூ
தலை மற்றும் நெற்றிப்பகுதியில் உண்டாகும் எரிச்சல், தலை சுற்றல், போன்றவற்றை சரிசெய்யும். மன அலைச்சலைப் போக்கி மன அமைதிக்கு வழிவகுக்கும். அதேபோல் தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்து ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.

கனகாம்பரம்
இதில் வாசனை அதிகமாக இருக்காது. ஆனால் தலைவலி மற்றும் தலை பாரத்தைப் போக்கும்.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ ஆகியவை வாதம் மற்றும் கபத்தைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை.

பூக்கள் சூடும் முறை
பூக்களை காதின் மேல் மற்றும் கீழ்புறத்துக்கு நடுவில் தான் சூட வேண்டும்.
உச்சந்தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூக்கள் படும்படி சூடுவது கூடாது.
வாசனை உள்ள மலர்களை வாசனையில்லாத பூக்களோடு சேர்த்து சூடுதல் கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும்.
ஜாதிமல்லி, செவ்வந்தி, பாதிரிப்பூ. மகிழம்பூ, செண்பகப்பூ. ரோஜாப்பூ, சந்தனப்பூ ஆகியவற்றை கனகாம்பரத்துடன் சேர்த்து சூடிக்கொள்ளலாம்.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன்னால் சூடிக்கொள்வது நல்லது ஆனால் முல்லை மற்றும் வில்வ மலர்களை குளித்தபின் தான் சூட வேண்டும்.
உடம்பில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறபோது தாழம்பூ சுடுவது நன்மை தரும்.

ஏன் பூக்களைச் சூட வேண்டும்?
பூக்களில் உள்ள பிராண ஆற்றலானது மூளையால் ஈடுக்கப்பட்டு நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைக் கொடுக்கிறது.
எண்ண ஓட்டங்களைச் சீராக்கும். உடலுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications











