Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
துளசி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
துளசி சாப்பிடுவதால் மிதமான முதல் கடுமையான பாதிப்புகள் வரை ஏற்படுகிறது. மூலிகைகளின் ராணி என்றழைக்கப்படும் இது சளி, காய்ச்சல், ஆஸ்த்துமா என பல நோய்களுக்கு மருந்தாக இருந்தாலும் சில சமயங்களில் இவை சிலருக்
பழங்காலம் முதலே இந்தியாவில் மருந்து பொருளாக பயன்படுத்தபட்டு வரும் ஒரு மூலிகை நாம் தினசரி பார்க்கும் துளசி ஆகும். மனிதர்களுக்கு எண்ணற்ற பயன்களை வழங்கக்கூடியது துளசி. அதனால்தான் கோவில்களில் கூட அதனை பிரசாதமாக கொடுக்கின்றனர்.ஆனால் " அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்பது துளசிக்கும் பொருந்தும். துளசி சாப்பிடுவதாலும் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.

உண்மைதான் துளசி சாப்பிடுவதால் மிதமான முதல் கடுமையான பாதிப்புகள் வரை ஏற்படுகிறது. மூலிகைகளின் ராணி என்றழைக்கப்படும் இது சளி, காய்ச்சல், ஆஸ்த்துமா என பல நோய்களுக்கு மருந்தாக இருந்தாலும் சில சமயங்களில் இவை சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.துளசியால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

ஈரல் பாதிப்பு
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அசெட்டமினோஃபென் போன்ற மருந்துகள் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து துளசியை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அசெட்டமினோஃபென் மற்றும் துளசி இரண்டுமே வலி நிவாரணிகளாகும். இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும்போது அவை கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல
கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக துளசி எடுத்துக்கொள்ளக்கூடாது. இது தாயின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.சிலசமயம் கருச்சிதைவு கூட ஏற்படலாம். இது கருப்பையை சுருக்குவதால் பிரசவ காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி மாதவிடாயிலும் இது சிக்கல்களை ஏற்படுத்தும்.

அசெட்டமினோஃபென் தயாரிப்புகள் தொடர்பு
நீங்கள் அசெட்டமினோஃபெனுக்கு மருந்துகளை எடுத்துக் கொண்டால், இந்த மூலிகை உங்களின் மருந்துகளின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே சிகிச்சையில் இருக்கும்போது துளசி சாப்பிடுவதற்கு மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.

இரத்தத்தை மெல்லியதாக்கும்
இந்த குறிப்பிட்ட மூலிகை இரத்தத்தை மெல்லியதாக்குகிறது. சிலர் இதற்காவே இதனை பயன்படுத்துவார்கள், ஆனால் இது எல்லாருக்கும் பொருந்தாது. இரத்தத்தை மென்மையாக்க ஏற்கனவே மருந்து சாப்பிடுபவர்கள் துளசியை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கருவுறுதல் பிரச்சினை
அதிகளவு துளசி சாப்பிடுவது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை குறைத்து கருவுறுதல் தன்மையை குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதற்காக முயல் மீது நடத்தப்பட்ட ஆய்வில் துளசி அவற்றின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது கண்டறியப்பட்டது. இதே முடிவுகள்தான் மனிதர்களுக்கும். இது ஒரு தற்காலிகமான நிலைதான்.

சர்க்கரை அளவை குறைத்தல்
பொதுவாக மக்கள் சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இதனை சாப்பிடுகின்றனர். இதன் முக்கியமான பயனே இதுதான். ஆனால் இதனை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களும், சர்க்கரை அளவை குறைக்க மருந்து எடுத்துக்கொள்பவர்களும் இதனை தவிர்ப்பது நல்லது. உங்கள் மருந்தில் உள்ளதும் இதில் உள்ளதும் ஒரே சத்துக்கள்தான். எனவே இது மாத்திரைகளின் மீது வினைபுரிவதால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். சர்க்கரை அளவு திடீரென அதிகம் குறைவது திடீர் மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அறுவைசிகிச்சைக்கு பின் சாப்பிடக்கூடாது
சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் துளசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் இரத்தத்தை மெல்லியதாக்கும் பண்பு இருப்பதால் இரத்தத்தை ஒன்றிணைய அனுமதிக்காது. எனவே குணமடைய நிறைய காலம் தேவைப்படும். மேலும் வலியும் அதிகமாய் இருக்கும்.

அதிகளவு யூஜெனோல்
துளசியில் இருக்கும் முதன்மையான பொருள் யூஜெனோல் ஆகும். யூஜெனோல் ஒரு ஹெபடோடாக்சிக் ஆகும், அதாவது கல்லீரலை பாதிக்கக்கூடியது. இதனை அதிகளவு உடலில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமானதல்ல. சுவாசக்கோளாறுகள், இருமலின் போது இரத்தம், சிறுநீரில் இரத்தம், தொண்டை மற்றும் வாயில் புண் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்கவும்.

புற்றுநோய்
துளசியில் உள்ள முக்கியமான ஒரு பொருள் எஸ்ட்ராகல். இது எந்தவித்திலும் ஆபத்தானதல்ல. ஆனால் துளசியிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது இது அதிகளவு சேர்க்கப்படுகிறது. அதிகளவு எஸ்ட்ராகல் உடலில் சேர்வது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. புற்றுநோயை எவ்வளவு ஆபத்தானது என நாம் நன்கு அறிவோம். எனவே துளசியை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications