For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதையாவது மறந்து வெச்சிட்டு தேடிக்கிட்டே இருப்பீங்களா?... இந்த டீ குடிங்க... அந்த பிரச்னையே வராது

பல நூற்றாண்டுகளாக தமிழ் மருத்துவத்தில் அஸ்வகந்தா மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் குதிரையின் வாசனை என்பதாகும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டது.

|

அஷ்வகந்தா என்ற பெயரின் அர்த்தம் குதிரையின் வாசனை என்று பொருள். இந்த மூலிகை 100 ஆண்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் கூட இதை பயன்படுத்தி வருகின்றனர்.

health

அந்த அளவுக்கு இந்த மூலிகை மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. இந்த மூலிகையில் அழற்சி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளை போக்கும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி தயாரிப்பது?

எப்படி தயாரிப்பது?

அஷ்வகந்தம் இந்தியாவின் ஜின்ஜெங் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அஷ்வகந்த டீயை அதன் வேர்கள் மற்றும் இலைகளை கொண்டு தயாரிக்கலாம். இதனால் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. இந்த டீயை நீங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம். உலர்ந்த வேர்களை தண்ணீரில் போட்டு தண்ணீர் கால் பங்காக வற்றும் வரை கொதிக்க விடவும். பிறகு அதை வடிகட்டி விடுங்கள்.

இந்த அஷ்வகந்தம் வேரை 3 கிராமிற்கு குறைவாக எடுத்து பயன்படுத்துங்கள். உங்களுக்கு 3-4 கப் தேநீர் கிடைக்கும். இந்த தேநீரில் நிறைய ப்ளோனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த தேநீரை ஆராய்ச்சி செய்த போது மூளையின் நரம்பியல் கடத்தலுக்கு இது உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேநீர் நல்ல ஞாபக சக்தியையும், நல்ல அறிவாற்றலையும் தருகிறது. எனவே இதை தினசரி காலையில் எடுத்துக் கொண்டு பலன் பெறலாம்.

அல்சைமர் நோய்

அல்சைமர் நோய்

இந்த தேநீர் அல்சீமர் நோயை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஊட்டச்சத்து நிபுணரான ஃபைலிஸ் பெல்கின் கூற்றுப்படி நினைவு இழப்பை தடுத்து வேதியியல் பொருளான அசிடைல்கோலைனை சரியாக பயன்படுத்திக் கொள்ள மூளைக்கு உதவுகிறது. இந்த வேதியியல் பொருள் தான் மூளையிலிருந்து நரம்புக்கும் நரம்புகளிலிருந்து மூளைக்கும் செய்திகளை கொண்டு சேர்க்கிறது. இந்த மூலிகை தான் மூளையில் உள்ள இறந்த செல்களை மூளையே சுயமாக அழிக்கச் செய்து அதன் மூலம் ஏற்படும் நினைவிழப்பை தடுக்கிறது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

இந்த தேநீர் கர்ப்ப கால தாய்மார்களுக்கு பரந்துரைக்கப்படுகிறது. தாயுடைய இரத்தத்தை சுத்தம் செய்து அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

இதய மற்றும் கண் பிரச்சினைகள்

இதய மற்றும் கண் பிரச்சினைகள்

இந்த மூலிகை யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு கண்புரை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் புற்று நோய் வராமலும் தடுக்கிறது. இருப்பினும் இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சரியான அளவே நல்லது.

மன அமைதி

மன அமைதி

அது உங்களுக்கு மைல்டு மயக்க மருந்தாக இருப்பதால் நல்ல மன அமைதியை நிலவச் செய்யும். நல்ல தூக்கம் ஏற்படும். உங்கள் மன அழுத்தத்தை போக்குவதிலும் இது சிறந்து விளங்குகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஏஜிங் பொருட்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. கடந்த 2500 வருஷமாக அஷ்வகந்தாவை ஒரு அடாப்ஜென் மாதிரி பயன்படுத்தி வருகின்றனர். இது மன அழுத்தத்தை போக்கி உங்கள் நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் ஆக்குகிறது.

வலி நிவாரணி

வலி நிவாரணி

அஷ்வகந்தாவில் உள்ள ஸ்டீராய்டு பொருட்கள் நிறைய அழற்சி பாதிப்புகளை குணப்படுத்துகிறது. ஆர்த்ரிட்டீஸ், கைகளில் கால்களில் ஏற்படும் நமநமப்பு போன்ற அழற்சியை போக்குகிறது.

ஏகப்பட்ட நன்மைகளை அள்ளித் தரும் இந்த தேநீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் எடுத்துக் கொண்டு பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of ashwagandha tea

Ashwagandha, translated literally means horse's smell. It has been used as a herbal remedy for hundreds of years.
Desktop Bottom Promotion