Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
திப்பிலி பற்றி தெரியுமா? எந்தெந்த நோய்க்கெல்லாம் தி்ப்பிலியை சாப்பிடலாம்?
இங்கே திப்பிலி என்னும் அற்புத மூலிகையின் பயனுள்ள மருத்துவ நன்மைகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
சளி, இருமல் ஆகியவை வாழ்நாள் முழுக்க நம்மைத் தொடர்ந்து வருகின்ற ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆகும். இவற்றைச் சரி செய்வதற்கு நாமும் ஏதாவது மாத்திரையை வாங்கிப் போட்டு அதை அப்படியே அடக்கி வைத்து விடுகிறோம்.

அது உள்ளேயே தேங்கித் தேங்கி நெஞ்சு சளியாகவும் ஆஸ்துமாகவும் மாறிவிடும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

சளித்தொல்லை
சளி என்பது நம்முடைய உடலுக்குள் இருக்கின்ற அசுத்தங்களையும் சேர்த்தே வெளியேற்றும். அதனால் சளி பிடித்தால் அதை முழுமையாக வெளியேற்ற வழி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு நாமோ அதை அடக்குவதற்கான மாத்திரை போட்டு உள்ளே தள்ளிவிடுகிறோம். அது அப்படியே நம்முடைய உடலுக்குள் தேங்க ஆரம்பித்துவிடும்.

திப்பிலியின் அற்புதங்கள்
சளி, இருமல் மற்றும் இளைப்பு ஆகிய முக்கிய நோய்களுக்கு ஆங்கில மருந்துகளைக் காட்டிலும் இயற்கையாகக் கிடைக்கின்ற மூலிகைகள் தான் மிகச்சிறந்த நிவாரணமாக இருக்கும். சில முக்கிய மூலிகைகளின் வழியாக நாம் மிக எளிதாக நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திப்பிலி. இந்த திப்பிலி மிகவும் கொடிய நீண்ட நாள் சளியைக் கூட வெளியேற்றி விடும்.

எங்கு கிடைக்கும்?
திரிகடுகம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த திரிகடுகம் என்பது மூன்று மூலிகைகள் சேர்ந்தது. அந்த மூன்றில மிக முக்கியமானதும் வீரியம் மிக்கதும் தான் இந்த திப்பிலி. இந்த திப்பில் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் மிக எளிதாகவே கிடைக்கும்.
முழு மூலிகையாகவும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். திப்பிலிக்குள் எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெயைக் கொண்டுள்ளது. இது பல நோய்களைக் குணப்படுத்துகின்ற அரிய மருந்தாக இருக்கிறது.

நோய்கள்
திப்பிலி எனும் அற்புத மூலிகையானது மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், பித்த நீர்ப்பையில் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றை திப்பிலி குணப்படுத்தும்.

தாது இழப்பு
கொஞ்சம் திப்பிலியை எடுத்து வறுத்துப் பொடி செய்து, அதனுடன் கொஞ்சம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், இருமல், தொண்டைக் கமறல், உடல் வீக்கம், பசியின்மை, தாது இழப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

வயிற்றுப் பொருமல்
சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சரியான அளவில் கொஞ்சம் திப்பிலியை எடுத்து, அதை வறுத்துப் பொடியாக்கி, சிறிது தேனுடன் கலந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வர, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

இளைப்பு நோய்
திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, அதே சம அளவுக்கு கடுக்காய் பொடியையும் சம அளவும் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு தேன் விட்டுப் பிசைந்து, இலந்தை பழத்தின் அளவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் இருந்து வந்த இளைப்பு நோய் கூட தீரும்.

சுவையின்மை
திப்பிலி் பொடியை எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை அளவுக்கு சாப்பிட்டு வந்தால், சிலருக்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரையிலும் தொண்டை கட்டிக் கொண்டு இருத்தல், கோழைப்படுதல், குரலில் கம்மல் கொள்ளுதல், உணவில் சுவையில்லாமல் இருத்தல் ஆகியவை ஏற்படும்.

குடல் புழுக்கள்
திப்பிலி பொடியை எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அது குழந்தைகளின் குடலில் உள்ள புழுக்களை அகற்ற சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பாலூட்டும் தாய்மார்கள்
புதிதாகக் குழந்தை பெற்றுக் கொண்ட, பாலூட்டும் தாய்மார்கள் வெதுவெதுப்பான நீருக்குள் திப்பிலி பொடியினைக் கலந்து கொடுத்தால் அவர்களுக்கு உண்டாகும் ரத்தப் போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவை சரியாகும்.

பசியின்மை
மிளகுடன் சம அளவுக்கு திப்பிலி பொடியும் கலந்து சாப்பிட்டு வந்தால், மயக்கம் மற்றும் உணர்ச்சி இல்லாமல் இருக்கும்போது, உணர்வைத் தூண்டிவிடும் மருந்தாகப் பயன்படுகிறது.

சுவாசக் கோளாறுகள்
தொடர்ந்து சளித் தொல்லையினால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நாளடைவில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். அப்படி சுவாசப் பிரச்சினைகள் இருக்கின்ற பொழுது, திப்பிலிப் பொடியை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வர, சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும். இது எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.



Click it and Unblock the Notifications