For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்றாழைக்குள்ள இவ்ளோ பிரச்னை இருக்கா? இதயும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க...

|

அலோ வேராவை பற்றி உங்களுக்கு புதுசாக சொல்ல வேண்டியது இல்லை. இது அழகு மற்றும் சுகாதார நலன்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது. இதற்கு கரணம் இதிலுள்ள மருத்துவ பண்புகள் தான்.

8 Side Effects Of Aloe Vera

கற்றாழை அதனுடைய இலைகளில் தண்ணீரை சேமித்து வைப்பதனால் அது, தடிமனாகவும் மாமிசமாகவும், உள்ளது. நீங்கள் இதை வெட்டும்போது, ​​ஒரு புதிய ஒட்டும் கூலிங் ஜெல் உங்களுக்கு கிடைக்கும். இது தோல் மற்றும் முடி ஆகியவற்றிற்கு அத்தியாவசியமான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

அலோ வேராவின் அதிகபட்ச நன்மைகளை பெற, நீங்கள் அதை அப்படியே சாப்பிடவும் செய்யலாம். இது ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது என்ற உண்மையை நம்மால் மறுக்க முடியாது. எனினும், எதையும் அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்வது ஆபத்தானது. நம்மில் ஓர் சிலருக்கு அலோ வேராவை நமது உடலில் தலையில் மற்றும் ஸ்கின்னில் பயன்படுத்துவது ஒத்துக்கொள்ளாமல் போகலாம். அதனால் இது பக்க விளைவுகளுக்கு மேலும் வழிவகுக்கும்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

1. அலோ வேரா ஜெலில் லேடக்ஸ்/ மரப்பால் உள்ளது. இது தாவரத்தின் தோலின் கீழ் இருந்து வருகிறது. நம்மில் பலருக்கு அலோவேராவின் லேடக்ஸ் ஒத்துக்கொள்ளாது, அதாவது அதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படும். இது எரிச்சல், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் குறைந்த பொட்டாசியம் அளவு போன்ற வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெளிப்படையாக, நல்ல முறையில் பயன்படுத்தினால், லேடக்ஸ்/மரப்பால் பாதுகாப்பானது தான். இருப்பினும், இதற்கு அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

2. பெரும்பாலான மக்களுக்கு அலோவேரா ஜெல் அலர்ஜி ஏற்படுத்துகின்றது. இது கண்களில் சிவத்தல், தோல் தடிப்புகள், எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு ஏற்படுத்துகின்றது.

3. கற்றாழை சாறு சாப்பிடுவதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறைக்கிறது.

4. இது லாக்செட்டிவ் விளைவுகளை கொண்டிருக்கிறது. இது நீரிழிவு நோய்க்குரிய மின்னழுத்த ஏற்றத்தாழ்வு வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், கற்றாழை சாற்றை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

5. கற்றாழையில் உள்ள எரிச்சலூட்டும் குணங்கள் காரணமாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அலோவேரா சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது கர்ப்பிணி பெண்களில் கருப்பை சுருக்கங்களை ஊக்குவிக்கும். இதன்மூலம், பிறப்பு சிக்கல்களை ஏற்படுத்தும்.

6. கற்றாழை உடலில் பொட்டாசியம் அளவைக் குறைக்கலாம். மேலும் ஒழுங்கற்ற இதய துடிப்பு, பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படுகிறது. முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள் பொதுவாக அதை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

7. அலோவேரா உள்ள உயிர்-செயல்பாட்டு கலவைகள் கல்லீரலின் நச்சுத்தன்மையற்ற செயல்முறையில் குறுக்கிடலாம். இது மேலும் உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.

8. அலோவேரா சாறு குடிப்பதன் மிகவும் பொதுவான பக்க விளைவு வயிறு சரியின்மை தான். லேடக்ஸ்/மரப்பால் அதிகப்படியான பிடிப்புகள் மற்றும் வலி ஏற்படுத்தக்கூடும். நீங்கள் வயிற்று பிரச்சினைககளால் அவதிப்பட்டால், காற்றாலை சாறு பருகுவதை தவிர்க்கவும்.

நன்மைகள்

நன்மைகள்

1. அலோவேராவில் உள்ள ஆன்டி இனபிலம்மாட்டோரி பண்புகள் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் சேதத்தை குறைக்க உதவும். மேலும், ஜெல்லில் இருக்கும் ஆக்சிடன்ட்ஸ், வாதம் மற்றும் வாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.

2. அலோவேரா சாறு செரிமானத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஒரு கப் சாறு. மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சினைகளை விடுவிக்க உதவும்.

3. அலோவேரா நைட்ரிக் ஆக்சைடு மற்றும் சைட்டோகீன்களை உற்பத்தி செய்ய செல்களை உருவாக்குகிறது. அது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.

4. அலோவேரா உங்கள் உணவின் வளர்ச்சியை மேம்படுத்தவும், உங்கள் எடை இழப்புத் திறன் அதிகரிக்க பயன்படுவதாக கூறப்படுகிறது.

5. அலோவேரா ஆயுர்வேத தயாரிப்பில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது, இது இரத்த சோகை போன்ற சீர்குலைவுகளை சரிசெய்ய உதவும்.

6. இது உங்கள் ஹீமோகுளோபின் அளவுகளை சரியாக வைத்திருப்பதற்கு, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுவதாக அறியப்படுகிறது.

தலைமுடிக்கு

தலைமுடிக்கு

1. அலோவேரா ஜெல் வைட்டமின் A, பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் E போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கொண்ட புரதத்துடன் செறிவூட்டப்பட்டிருக்கிறது. இவை தோலினின் ஆரம்ப அறிகுறிகளைத் தடுப்பதன் மூலம் உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்ள உதவுகிறது.

2. தோல் மீது அலோவேரா ஜெலை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தோலுக்கு ஒரு பாதுகாப்பான அடுக்காக இது செயல்படுகிறது. மேலும், எரிந்த தோல் மீது குளிர்ந்த அலோவேரா ஜெலை உடனடி பயன்படுத்துவது உங்கள் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க வல்லது.

3. அலோவேரா உள்ள அழற்சி எதிர்ப்பு குணங்கள், ஸ்கின் ராஷஸ் மற்றும் பூச்சி கடிக்கு உதவுகிறது. பெரும்பாலான மக்கள், ஷேவ் லோஷன அல்லது வாக்ஸிங் ஆக பயன்படுகிறது. இது ஸ்கின்னை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

4. அலோவேரா ஒரு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது புரோட்டியோலிடிக் நொதிகளின் முன்னிலையாகும், அவை உங்கள் முடிகளின் வேர்களை வலுப்படுத்த மற்றும் மென்மையாக்க பயன்படுத்துகிறது.

5. நமது உச்சந்தலையின் சிறந்த pH சமநிலை ஆகும்.

அந்த சமநிலை பாதிக்கப்படும் போது, ​​அது பல்வேறு முடி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அலோ வேரா உங்கள் உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இது மேலும் மென்மையான தோற்றத்தை தருகிறது.

6. உங்கள் உச்சந்தலை வறண்டு மற்றும் சீரற்றதாக இருந்தால், அதை சரிசெய்ய அலோவேரா பயன்படுத்துங்கள். அலோவேராவின் ஈரப்பதமான பண்புகள், இறந்த சரும செல்களை அகற்ற உதவும், இதனால் ஈரப்பதம் உச்சந்தலையில் நுழைய அனுமதிக்கிறது.

குறைந்த அளவு அலோவேரா சாறு உட்கொள்வது நன்றாக இருந்தாலும், இதன் பக்க விளைவுகள் உங்கள் உடலில் ஊடுருவக் கூடாது என்பதை உறுதிப்படுத்த ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Side Effects Of Aloe Vera: Here's Why Anything In Excess Is Bad

here we are talking about aloevera and their side effects. read this and take perfect quantity.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more