Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா? நீங்க ஏன் வாழைத்தண்டு சாறு அருந்த வேண்டும் என தெரியுமா?
குழந்தை பிறந்தபின் உண்டாகும் பருமனை தடுக்க வாழைத்தண்டு சாறை அருந்துவதால் உண்டாகும் நன்மைகள், மற்றும் குடிக்கும் முறையையும் இங்கே தரப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டலைப்பதை பொழுது போக்காகவே அக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்வது வழக்கம்.
முதலில் ஒன்றை தெரிந்து கொள்லுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்கள் சோம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள்.
உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம்... உங்களுக்கு உதவும் வகையில் வாழைத்தண்டைக் கொண்டு எப்படி உங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழைத்தண்டின் நன்மைகள் :
கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.
ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.

வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை :
தேவையானவை :
வாழைத்தண்டு
மிளகு ,
சீரகம்,
பூண்டு
எலுமிச்சை சாறு
சிறிது உப்பு

செய்முறை :
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும்.

வாழைத்தண்டு மோர்:
தேவையானவை :
வாழைத்தண்டு
மோர்
இஞ்சி சாறு
பெருங்காயத் தூள்

செய்முறை :
வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும்.

தொடர்ந்து குடிக்க வேண்டும் :
இவ்வாறு குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.



Click it and Unblock the Notifications
