பூக்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கீங்களா?

Written By:
Subscribe to Boldsky

பூக்கள் அழகு மற்றும் சூடுவதற்கு மட்டுமல்ல. அவற்றில் பல்வேறு மூலிகை குணங்களும், மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளன. இந்த பூக்களிலிருந்து எடுக்க்கும் தேன் மிகச்சிறந்த மருந்து. அப்படியெனில் பூக்களின் குணங்கள் எப்படியிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பூக்களுகும் ஒருவித குணம் உள்ளது. அவ்வகையில் இவை எந்த மாதிரியான உடல் பிரச்சனைகளை போக்குகின்றன என தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலென்றால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆவாரம் பூ :

ஆவாரம் பூ :

ஆவாரம்பூவைக் குடிநீரில் போட்டுக் குடித்து வந்தால் நீரிழிவு உப்பு படிதல், நீர் வேட்கை எடுத்தல் போன்றவற்றில் இருந்து குணம் கிடைக்கும்.

சர்க்கரை வியாதி குணமாகும். அதன் பொடியை உடலில் தேய்த்து குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும்

செம்பருத்திப்பூ :

செம்பருத்திப்பூ :

செம்பருத்திப்பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்தம் சுத்தி அடைவதுடன் விருத்தியும் அடையும். இதயமும் வலிமை அடையும். இப்பூவைக் கொண்டு காய்ச்சிய எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் குளிர்ச்சியும் தரும்.

அன்னாசிப்பூ:

அன்னாசிப்பூ:

அன்னாசிப்பூவைத் தூளாக்கி அரை கிராம் முதல் ஒரு கிராம் எடை வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டால் பசி உண்டாகும்.

ரோஜாப் பூ :

ரோஜாப் பூ :

வாய்ப்புண்ணுக்கு நல்லது.அவ்வபொழுது மென்று சாப்பிடுங்க. பாலில் கலந்து குடித்தால் ரத்த விருத்தி உண்டாகும். கபம் கரையும்.

 தாழம்பூ :

தாழம்பூ :

தாழம் பூவில் சர்பத் செய்து 1 மாதத்திற்கு 2 முறை குடிங்க அம்மை நோய் அண்டாது. இதய நோய்கள் நெருங்காது.

ஒற்றை நந்தியாவட்டை

ஒற்றை நந்தியாவட்டை

கண்ணுக்கு குளிர்ச்சி,இரவு தூங்கும் போது கண்ணில் வைத்து தூங்குங்க கண் எரிச்சல் இருக்காது. கண் பாதிப்புகள் நீங்கும்.

 தாமரை இதழ்

தாமரை இதழ்

தினம் ஒரு தாமரை இதழ் சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal properties of flowers and methods of using them.

Medicinal properties of flowers and methods of using them are described here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter