Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா? இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க!!
பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா? தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும்.
பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா? தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும். அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பல் ஆடுவதற்கு என்ன காரணம் ?
உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். . எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம்.

மூலிகைப் பொடி-1 :
தேவையானவை :
நல்லெண்ணெய் - கால் கப்
நெல்லிக்காய் பொடி - கால் கப்
மஞ்சள்- 1 ஸ்பூன்
பட்டைப் பொடி - கால் ஸ்பூன்
கிராம்புப் பொடி - அரை ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்.

தயாரிக்கும் முறை :
மேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் மூலிகைப் பொடி. மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை :
1.இந்த எண்ணெயால் தினமும் காலையில் ஆயில் புல்லிங்க் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்து இருக்க வேண்டும். பின்னர் உமிழ்ந்து விடுங்கள். இப்படி தினமும் ஆயில் புல்லிங்க் செய்வதால் உங்கள் ஈறு பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.

பயன்படுத்தும் முறை :
தினமும் இந்த மூலிகைப் பொடியால் பல் துலக்க வேண்டும். ஆடும் பல்லின் மீதும் , அதன் ஈறின் மீதும் இந்த பொடியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி காலை மற்றும் இரவு தூங்கும்போது செய்தால் ஆடும் பல் கெட்டிப்பட்டுவிடும்.

நன்மைகள் :
நெல்லிக்காய் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலப்படுத்துகிறது. உப்பு கிருமி நாசினி மற்றும் அங்கிருக்கும் தொற்றுக்கலை நீக்குகிறது. நல்லெண்ணெய் பற்களின் நடுவே ஊடுருவி ஈறுகளை பலப்படுத்தும். பட்டை கிராம்பு, பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும்.

மூலிகைப் பொடி 2 :
இந்த மூலிகைப் பொடி சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் இல்லையென்றாலும், மூலிகைப் பொடி நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
தேவையானவை:
படிகார உப்பு - 6 ஸ்பூன்
மிளகு -1ஸ்பூன்
சாம்பிராணி - 1 ஸ்பூன்
இந்துப்பு - 1 ஸ்பூன்
ஓமம் - அரை ஸ்பூன்
கிராம்பு - 2.5 ஸ்பூன்
வேப்பம்பட்டை - 10 ஸ்பூன்

செய்முறை:
மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம். இவை பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.

மூலிகைப் பொடி - 3
தேவையானவை:
சுக்கு - 1 ஸ்பூன்
கடுக்காய் - 1 ஸ்பூன்
இந்துப்பு - 1 ஸ்பூன்.

செய்முறை :
இந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்துகொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியால் பற்களைத் துலக்கவும். பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும்.

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு :
தேவையானவை
உப்பு - 1 டீ ஸ்பூன்
கடுகு எண்ணெய்- சில துளிகள்.

செய்முறை :
கடுகு எண்ணெயில் உப்பை கலந்து பாதிக்கப்பட்ட பற்களின் மீது தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் உங்கள் வாயை கழுவ வேண்டும். இரு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

நன்மைகள் ;
கடுகு எண்ணெய் மற்றும் உப்பும் ஆடும் பற்களை பலப்படுத்துகிறது. தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும்போது ஈறு பலப்பட்டு ஆடும் பல்லை கெட்டிப்படுத்தும்.

பூண்டு :
பூண்டை நசுக்கி சாறு எடுத்து சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பற்களில் தேயுங்கள். லேசாக மசாஜ் செய்து பின்னர் பற்களை கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் பாதிக்கப்பட்ட ஈறுகள் குணமாகும்.

நன்மைகள் :
பூண்டு சிறந்த ஒரு கிருமி நாசினியாகும். உங்கள் பல் தொற்றினால் பாதிப்படைந்திருந்தால் நல்ல பலனைத் தரக் கூடியது. ஆடும் பற்களுக்கு சிறந்த மருந்தாகும்.

ஹைட்ரஜன் பெராக்சைட் :
3% ஹைட்ரஜன் பெராக்சைட் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் ஒரு கப் நீர் கலந்து பற்களில் படுமாறு கொப்பளிக்க வேண்டும். காலை மாலை செய்யுங்கள். நல்ல மாற்றம் தெரியும்.

நன்மைகள்
ஹைட்ரஜன் பெராக்சைட் உங்கள் பாதிக்கப்பட்ட பற்களைச் சுற்றிலும் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கிவிடும். இதனால் உங்கள் பற்கள் மேலும் சிதைவடையாமல் ஆடாம் இருக்கும். அதே சமயம் ஈறு பலப்படும்போது பற்கள் ஆடுவது நிற்கும்.

கால்சியம், விட்டமின் டி :
உங்களுக்கு கிருமித் தொற்றோ, பற்சிதைவோ, அல்லது ஈறு பாதிப்போ இல்லாமல் பற்கள் ஆடினால், அது உங்களின் கால்சியம் பற்றாக்குறையினால் எற்பட்டிருக்கலாம். ஆகவே கால்சியம் மாத்திரையும், விட்டமின் டி 3 யும் எடுத்துக் கொண்டால் பற்கள் மீண்டும் பலமாகும். ஆடுவது நிற்கும்.

ஆடும் பற்களை காக்கும் நமது பழங்கால அதிசய மூலிகைகள் :
கருவேலப்பட்டை :
கருவேலங்குச்சிகள் கிராமத்தில் கிடைக்கும். கருவேல மரத்தின் சிறு இளங்குச்சியை முறித்து அதனைக் கொண்டு பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. பற்களை பலப்படுத்தும்.

வேப்பங்குச்சி :
இன்றும் கிராமங்களில் வேப்பங்குச்சியால் பற்களை விலக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பற்கள் உறுதியாகின்றன. அதற்குக் காரணம், வேப்பங்குச்சியில் எண்ணற்ற ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபயாடிக் பொருட்கள் இருப்பதுதான். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும்.

ஆலங்குச்சி :
ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications