For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு

By Mayura Akilan
|

Banana stem
விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகள்

தென்னிந்தியாவில் பல விதங்களில் வாழைத்தண்டு சமைக்கப்படுகிறது. வாழைத்தண்டை பச்சடியாகவும், சாறு எடுத்து ஜூஸ் போலவும் சூப் செய்தும் அருந்தலாம். உடல் எடையை குறைப்பதில் டயட் இருப்பவர்கள் அதிக அளவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்கின்றனர்.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் கோளாறுகள்

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்.

English summary

Medicinal Benefits of Banana Stem

Banana stem, appearing as a waste of the banana plant is supposed to be very good for health. One can use banana stem for its high nutritive value in different ways. It is also a source of energy and can be taken by one when he or she is fatigued or tired.
Desktop Bottom Promotion