Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பால் உணர்வு தூண்டும் கருவேலம் பிசின்

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தில் டேனின்கள் அதிக அளவில் உள்ளன. மியூசிலேஜ் மற்றும் ஃபிளோவனாய்டுகள் காணப்படுகின்றன. பட்டைகளில் பாலிஃபினோலிக் கூட்டுப்பொருட்கள் உள்ளன. கேட்டிசின்,எபிகேட்டில் எபிகெலோ கேட்டிசின் குயிர்சிடின், கெலிக் அமிலம் பிசினில் கெலக்டோஸ்,ரெம்னோஸ் போன்றவை உள்ளன. விதைகளில் அமினோ அமினங்கள் காணப்படுகின்றன.
புண்களை குணப்படுத்தும்
கருவேல மரத்தின் இலைகள், பட்டை, பிசின் மற்றும் கனிகள் மருத்துவ பயன் கொண்டவை.
துளிர் இலைகளின் வடிசாறு தசை இருக்கும் தன்மை கொண்டது. வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகிறது. பசையாக்கப்பட்டு புண்களின் மீது பூசப்படுகிறது. புண்களை ஆற்றப் பயன்படும் இந்த கசாயம் மலச்சிக்கலுக்கு இனிமாவாக பயன்படுகிறது.
பல்பொடியாகும் பட்டை
கருவேலம் பட்டையில் டேனின்கள் அதிகம் உள்ளது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் கசாயம் புற்றுநோய் மற்றும் சிஃபிலிஸ் பால்வினை நோய்களில் வாய் கழுவியாகவும், கொப்பளிப்பாகவும் உதவுகிறது. தொண்டைக் கம்மல் மற்றும் பல்வலியும் போக்கும். கோனோரியா, சிறுநீரகத்தின் கல், பெண்குறிநோய் மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றில் ஊசி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பட்டையின் கரியும், பாதம்கொட்டை ஓட்டின் கரியும் உப்புடன் கலந்து பல்பொடியாக உதவுகிறது.
பால் உணர்வு தூண்டும்
பிசின் நீரிழிவு நோய்க்கும் வயிற்றுப்போக்கு நிறுத்தவும் நீருடன் கலந்து தரப்படுகிறது. காய்ந்த பிசின் பொடியாக்கப்பட்டு கொய்னாவுடன் கலந்து வயிற்றுப்போக்குடனான காய்ச்சல் நீக்க உதவும். பிசினின் பொடி முட்டை வெண்கருவுடன் சேர்த்து தீப்புண் மற்றும் கொப்புளங்கள் மீது பூசப்படுகிறது. இரத்தபோக்கினை நிறுத்த வல்லது. நெய்யில் வறுத்து உபயோகித்தால் வலுவேற்றியாகவும் பால் உணர்வு தூண்டுவியாகவும் பயன்படும். பிசினின் மருத்துவ குணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது கணையத்தில் இருந்து இன்சுலின் சுரத்தலை ஊக்குவித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கனிகளின் கசாயம் சிறுநீர் இனப்பெருக்க உறுப்பு நோய்கள் தீர்க்க பயன்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
