Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கிட்டா விபரீதங்களை சந்திக்க நேரிடும்.
மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை இதய நோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நோய் பாதிப்பு இல்லாமல் மாத்திரைகளை பயன்படுத்தும் போது எண்ணற்ற விள
மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை இதய நோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நோய் பாதிப்பு இல்லாமல் மாத்திரைகளை பயன்படுத்தும் போது எண்ணற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் பெப்டிக் அல்சர். குடலில் புண் ஏற்பட்டாலே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது இதில் பெப்டிக் அல்சர் என்றால் சொல்லவா வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆஸ்பிரின் இரத்தம் உறைதலையும் தடுக்கிறது. பின்விளைவுகளை சந்தித்த பிறகாவது மருத்துவரை அணுகுங்கள்

அமெரிக்காவில் இருக்கும் இளைஞர்களிடம் நடத்திய ஆய்வில் இதய நோய்க்காக ஆஸ்பிரின் மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. இளைஞர்களின் இந்தச் செயல் மிக ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என ஆராய்ச்சியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

நாம் மருத்துவரா ?
6.6 மில்லியன் இளைஞர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் இதய பாதிப்புக்காக ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் மருத்துவர்கள் ஆலோசனைகளை எல்லாம் யாரும் பெறுவதில்லை. காய்ச்சலுக்கு இந்த மாத்திரை, சளிக்கு இந்த மாத்திரை என நாமாகவே முடிவு செய்து கொண்டு சாப்பிடுகிறோம். நிச்சயம் சளியிலிருந்து அது கண்டிப்பாக விடுதலை அளிக்கும் ஆனால் பின்னால் வரக்கூடிய பின்விளைவுகளைக் குறித்து ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கும். நோயின் தன்மைகளை ஆராய்ந்து அந்த மருந்துகளைக் கொடுத்தாலும் பக்கவிளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு துணை மருந்துகளையும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

ஆஸ்பிரின்
ஆஸ்பிரின் இரத்தத் தட்டுகள் ஒட்டுவதைக் குறைத்து இரத்தம் உறைப்புத் தன்மையை குறைக்கிறது. அதே பிரச்சினையைத் தான் இரத்தப்போக்கின் போதும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டது போல் குறைந்த டோஸ் கொண்ட ஆஸ்பிரின் மருந்துகளை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுப்பதற்காக தினந்தோறும் பயன்படுத்துவது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

எந்த வயதினருக்கு ஆபத்து அதிகம்
புதிய வழிகாட்டுதல்களின் படி 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் தினந்தோறும் குறைந்த டோஸ் ஆஸ்பிரின் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. (குறைந்த டோஸ் என்பது 75-100 மிகி) அதுமட்டுமில்லாமல் எந்த வயதினரும் ஆஸ்பிரின் மாத்திரைகளை பயன்படுத்தினால் இரத்தப்போக்கு உள்ளிட்ட ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்களின் புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே மாரடைப்பு, பக்கவாதம், இருதய அருவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த பரிந்துரை பொருந்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கன் இருதய சங்கத்தின் வழிகாட்டுதலின் படி மருத்துவர்களின் ஆலோசனை வழங்கினால் மட்டுமே ஆஸ்பிரின் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

நோயே இல்லை ஆனா 23 % பேர் ஆஸ்பிரினை பயன்படுத்துறாங்க
ஆஸ்பிரின் மருந்துகளைப் பயன்படுத்துவதுக் குறித்த ஆய்வில் 40 வயதிற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது. அதில் 23.4 % பேர் தங்களுக்கு இருதய சார்ந்த நோய்கள் இல்லாமல் இருதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்வதாக மருத்துவர் ஓ பிரையன் மற்றும் அவரது குழுவின் மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதவீதம் மக்கள் தொகையில் 29 மில்லியனைத் தொடும். அதில் 6.6 மில்லியன் பேர் மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை உட்கொள்வதாக அவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
இதே குழு 70 வயதிற்கும் மேற்பட்டவர்களை ஆய்வுக் குட்படுத்தியல் 50 % பேர் இருதய நோய்க்கான எந்த அடையாளமும் இல்லாத போதும் வந்துவிடாமல் தடுப்பதற்காக ஆஸ்பிரின் மாத்திரைகளை உண்கிறார்கள்.

பெப்டிக் அல்சர்
அதுமட்டுமில்லாமல் மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல் பயன்படுத்தும் ஆஸ்பிரின் மாத்திரைகளால் பெப்டிக் அல்சர் அதிகமாக ஏற்படுகிறது. இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆசைப்பட்டு கூடுதல் நோய்களை உள்வாங்கிக் கொள்ள விரும்புகிறோமோ என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

பெப்டிக் அல்சரின் பாதிப்புகள்
வயிறு மற்றும் சிறுகுடலில் ஏற்படக்கூடிய திறந்த புண்கள் பெப்டிக் அல்சர் என அழைக்கப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் வலியோடு கூடிய இரத்தப் போக்கை அனுபவிக்கிறார்கள். மேலும் 10 சதவீத மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகை ஆபத்தில் இருப்பவர்கள் வயதானவர்கள் வயிற்றுப் புண் உள்ளவர்களாகவோ அல்லது இல்லாதவர்களாகவோ இருக்கிறார்கள்
இந்த நோயிக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும்
துளை: வயிற்றுப் பகுதியில் துளை ஏற்பட்டு நோய்த் தொற்றுக்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமட்டுமில்லாமல் அடிவயிறில் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அளிக்கும்

உள்-இரத்தப்போக்கு
இரத்தப்போக்கை உண்டாக்கும் அல்சர்கள் இரத்த இழப்பை ஏற்படுத்தும். இதனால் தலைசுற்றல், லேசான தலைவலி, கருப்பு மலம் ஆகிய பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும்.

திசு
இந்த வகையான திண்மையான திசு அடிப்பட்ட பிறகு அந்த இடத்தில் வளரும். இந்த திசுக்கள் உங்கள் செரிமானப் பாதையில் உணவுகள் செல்வதை தடுத்து நிறுத்துகிறது. இதனால் வாந்தி மற்றும் உடல் எடை இழப்பு போன்றவையும் நடைபெறுகிறது.



Click it and Unblock the Notifications