Latest Updates
-
'இனிப்புகளின் ராஜா' என்று அழைக்கப்படும் ஸ்வீட் எது தெரியுமா? எதுனா சொன்ன நம்பவே மாட்டிங்க -
ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிந்தால் உண்மையில் விந்தணு பாதிக்கப்படுமா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க.. -
பச்சை மிளகாயை வைச்சு இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா நச்சுனு இருக்கும் -
Vijayadashami 2026: விஜய தசமியில் இந்த பொருட்களை வாங்குங்க.. ஆண்டு முழுவதும் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்! -
ஒரு விஷப்பாம்பு இன்னொரு விஷப்பாம்பை கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க..
பெண்களுக்கு மாரடைப்பு வருவதைத் தடுக்க அவங்க இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதுமாம்...!
மாரடைப்பு ஏற்படும் போது, ஆண்களுக்கு இருப்பது போன்ற அறிகுறிகளே பெண்களுக்கும் இருப்பதில்லை. பல சமயங்களில் பெண்கள் அவர்கள் தெளிவற்ற அல்லது ‘அமைதியான’அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
மாரடைப்பு ஏற்படும் போது, ஆண்களுக்கு இருப்பது போன்ற அறிகுறிகளே பெண்களுக்கும் இருப்பதில்லை. பல சமயங்களில் பெண்கள் அவர்கள் தெளிவற்ற அல்லது 'அமைதியான'அறிகுறிகளை அனுபவிக்கலாம். மாரடைப்பு ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பெண்கள் சில அறிகுறிகளை அனுபவிப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டால் அதற்கு பின் அடுத்த மாரடைப்பை தடுக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சாப்பிடுவது உங்கள் இதயம் உட்பட உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பாதிக்கிறது. உணவுப் பழக்கத்தை மாற்றுவது மற்றொரு மாரடைப்பு அபாயத்தைத் தடுக்க உதவும். ஆரோக்கியமான மற்றும் வலிமையான இதயத்திற்கு உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய இதயத்தை பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான ஆற்றல் மையமாகும். குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்துக் காரணமாக அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க பீன்ஸ், பட்டாணி, உளுத்தம்பருப்பு மற்றும் கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் நிறைவுறாத கொழுப்புகள் அதிகம் உள்ளது, இது இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தவும், இதயத் துடிப்பை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் நுகர்வு இருதய நிகழ்வுகளின் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

முழு தானியங்கள்
முழு தானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன, இது ஊட்டச்சத்துக்களின் முழுமையான தொகுப்பாக அமைகிறது. அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

நட்ஸ்
நட்ஸ் மற்றும் விதைகளில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது இதயம் உட்பட ஒட்டுமொத்த உடலுக்கும் அவசியம். ஆரோக்கியமான இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வைட்டமின் ஈ- ன் நல்ல ஆதாரங்களாகவும் இவை இருக்கிறது.

பொட்டாசியம் உள்ள உணவுகள்
ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் பொட்டாசியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் இதய தசை சுருக்கங்களை நிர்வகிக்கிறது மற்றும் இதய தாளத்தை சீராக வைத்திருக்கிறது. வாழை, அவோகேடா மற்றும் பூசணி போன்றவை பொட்டாசியம் அதிகமிருக்கும் பொருட்களாகும்.

பூண்டு
பூண்டு அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பண்புகளுக்குபெயர் பெற்றது. இது இயற்கையான இரத்தத்தை மெலிக்கும் பொருளாகவும் செயல்படுகிறது.

ஆர்கானிக் டீ
ஆர்கானிக் டீ வகைகளில் உயர் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளது. மேலும், இது ஆற்றல்மிக்க கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுக்கும் என்றும் ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளது.



Click it and Unblock the Notifications
