Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த உணவுகளுக்கு உடனே குட்-பை சொல்லுங்க.. இல்லன்னா கொழுப்பு தேங்கி சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்...
நீங்கள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இதய நோயால் ஏராளமான மக்கள் இறந்து வருகிறார்கள். சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்தியாவில் 4 இல் 1 இறப்பு இதய நோயால் ஏற்படுகிறது. அதுவும் இதய செயலிழப்பால் தான் பலர் இறக்கிறார்கள். உலகில் உள்ள இதய செயலிழப்பு நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளதால், இந்திய மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.

மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடலுழைப்பு இல்லாமை போன்றவை பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக இவை இரத்தக் குழாய்களில், அதாவது தமனிகளில் கொழுப்புக்களை தேங்க வைத்து அடைப்புக்களை ஏற்படுத்தி, ஆந்ரோகிளிரோசிஸை உண்டாக்குகிறது. தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால், அது இதயம் மற்றும் உடலின் பிற உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும். நீங்கள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரெஞ்சு ப்ரைஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் பிரெஞ்சு ப்ரைஸ். ஆனால் இது எண்ணெயில் ஆழமாக வறுத்தெடுத்த உணவுப் பொருள். இந்த பிரெஞ்சு ப்ரைஸ் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும் கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பியவை என்பது தெரியுமா?அதுமட்டுமின்றி, இவற்றில் உப்பு மற்றும் கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டால், இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கி அடைப்பு ஏற்படும்.

ஐஸ் க்ரீம்
யாருக்கு தான் ஐஸ் க்ரீம் பிடிக்காது. ஆனால் இந்த ஐஸ் க்ரீம்மில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. இவை உடல் எடை அதிகரிப்பதற்கும், இதய ஆரோக்கியம் மோசமாவதற்கும் வழிவகுக்கும். எனவே இதய நோய் வரக்கூடாது என்று விரும்பினால், ஐஸ் க்ரீம்மை தவிர்த்திடுங்கள்.

பிட்சா
இன்று பலரும் அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் பிட்சா. ஆனால் இந்த பிட்சா தான் உலகிலேயே இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் நிரம்பிய ஓர் மோசமான உணவுப் பொருள். ஒருவேளை இதை சாப்பிட விரும்பினால், ஒரு துண்டிற்கு மேல் சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால் விரைவில் இதய நோயால் அவதிப்பட நேரிடும்.

கார்போனேட்டட் பானங்கள்
சோடா எந்த வடிவத்தில் இருந்தாலும் அது ஆபத்தானது. ஏனெனில் இது உடல் ஆரோக்கியத்தில் சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக இது இன்சுலின் அளவை அதிகரிக்கும், உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். எனவே நீங்கள் தாகத்தை தணிக்க விரும்பினால், சோடவிற்கு பதிலாக நீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து குடியுங்கள்.

இறைச்சி
மாட்டிறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமற்ற உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவை. ஏனெனில் இந்த இறைச்சியில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. இந்த வகையான இறைச்சியை இதய பிரச்சினைகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது இதய செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்.

ஃப்ரைடு சிக்கன்
சிக்கனில் உள்ள புரோட்டீன் எடை இழப்பிற்கு சிறந்தது. ஆனால் இந்த சிக்கனை எண்ணெயில் ஆழமாக வறுத்தெடுத்தால், அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, இரத்த குழாய்களில் கொழுப்புக்களை தேங்க வைத்து, இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே வயது அதிகரிக்கும் போது ஃப்ரைடு சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications