Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மாரடைப்பு போன்ற இதய பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஏற்கனவே இருக்கும் இதய நோய் தீவிரமாகாமல் இருக்கவும் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் போதும்.
இன்று இதய நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் இளம் வயதிலேயே பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமது மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். எனவே இதய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டிய கட்டாயத்தில் அனைவருமே உள்ளோம். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோயின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

இதய பிரச்சனைகளானது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்கள், கால்சியம் மற்றும் பிற பொருட்களால் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் பிளேக்குகள் உருவாகி, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் இடையூறு ஏற்படுவதால் உண்டாகிறது. ஆனால் இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஏற்கனவே இருக்கும் இதய நோய் தீவிரமாகாமல் இருக்கவும் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் போதும். இப்போது ஆரோக்கியமான இதயத்திற்கு சாப்பிட வேண்டிய அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளான பசலைக்கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இந்த பச்சை இலைக் காய்கறிகள் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கிறது மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது. குறிப்பாக இவற்றில் உள்ள வைட்டமின் கே, தமனிகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. குறிப்பாக பெர்ரிப் பழங்களில் இதய நோய்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வீக்கத்தைத் தடுக்கும் அந்தோசயனின்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே இதய நோய் உள்ளவர்கள் அடிக்கடி பெர்ரிப் பழங்களை சாப்பிடுவது நல்லது.

விதைகள்
ஆளி, சியா போன்ற விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை வளமான அளவில் உள்ளன. இவை அனைத்தும் இதயத்திற்கு நன்மை பயக்கும். அதுவும் ஆளி விதை புற்றுநோய் மற்றும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது இரைப்பை குடல் ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் பயனளிக்கும். அன்றாட உணவில் விதைகளை சேர்ப்பதனால், வீக்கம், இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்ற பல இதய நோய்களின் ஆபத்து காரணிகளைக் குறைக்கலாம்.

தக்காளி
தக்காளி இதய நோயாளிக்ளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் இதில் ப்ளேவோனாய்டுகள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற எலும்புகளுக்கு நன்மையளிக்கும் சத்துக்கள் உள்ளன. குறிப்பாக தக்காளியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

பீன்ஸ்
பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள் இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பீன்ஸில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்றும். மேலும் பீன்ஸில் பாலிபினால்கள், டெர்பெனாய்டுகள் மற்றும் அந்தோசயனின் போன்ற பல பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், இதய நோயின் அபாயத்தையும் குறைக்கும்.



Click it and Unblock the Notifications