Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
உங்க இருமலை வெச்சே உடம்புல எந்த உறுப்புல பிரச்சினைனு கண்டுபிடிக்கலாம்? எப்படினு தெரியுமா?
உங்களுடைய இருமலுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பைப் பற்றி இங்கே விளக்கமாகக் குறிப்பிடுகிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இருமல் வருவதை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
நம்ம இருமலுக்கும் இதயத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுவரை இருமல் என்பது சுவாச பாதையில், நுரையீரலில் ஏற்படும் தொற்று என்றே அறிவோம். ஆனால் உண்மையில் இருமல் என்பது இதயம் செயலிழப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது எப்படி ஏற்படுகிறது என்பதை கீழ்க்கண்டவாறு காணலாம்.

இதயம் செயலிழப்பு
இதயம் செயலிழப்பு என்பதற்கு இதயம் நின்று விட்டது, இயங்காது என்று அர்த்தம் இல்லை. இதயத்தின் பம்ப்பின் செயல்திறன் குறைந்து போய் விடும். இதனால் உடலுறுப்புகளுக்கு இரத்தத்தை சரி வர கொண்டு செல்ல இயலாது.
இதயம் செயலிழப்பு என்பது இதய நோய்கள், கரோனரி தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், ஹைபர்டிராஃபிக் கார்டியோமையோபதி, டைஸ்டோலிக் டிஸ்பங்சன், இதய வால்வு அடைப்பு போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த இதய நோயால் பாதிப்படைகின்றனர்.

இதய செயலிழப்பு அறிகுறிகள்
பலவீனம், சோர்வு, உடற்பயிற்சி செய்ய முடியாமல் போதல், உடற்பயிற்சியின் போது மூச்சு விட சிரமம், கீழே விழுதல் (ஆர்த்தோபினா), கால்களில் வீக்கம், இருமல்

தீவிர பிரச்சினை
இதயம் செயலிழப்பின் போது இதயம் பம்ப் செய்யும் திறனை இழந்து விடும். இதனால் நுரையீரலில் இருந்து வெளியேறும் இரத்தம் திரும்பி வந்து நுரையீரலுக்கு நெரிசலை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தத்தால் நுரையீரல் உள்ள திரவமும், இரத்தமும் அங்குள்ள காற்று பைகள் வழியாக கசியத் துவங்கும். இதனால் தான் நமக்கு இருமல் உண்டாகிறது. இப்பொழுது ஏற்படும் இருமல் சுவாச பாதையையும், காற்று பையையும் சுத்த செய்ய முற்படும்.

கார்டியாக் இருமல்
இதய செயலிழப்பால் வருகின்ற இருமல் நிறைய வகைகளில் ஏற்படுகிறது. இரத்தத்துடன் இருமல் வெளிப்படுதல், கடுமையான மூச்சு திணறல், இருமல், இதயத்தில் எரிச்சல் போன்ற உணர்வு, நுரையீரலில் விசில் போன்ற இளைப்பு சத்தம் கேட்டல் போன்ற பல வடிவங்களில் இருமல் தென்படும். இதெல்லாம் இதயம் செயலிழப்பு மோசமாகி விட்டது என்பதன் அறிகுறியாகும்.

அறிகுறிகள்
டிஸ்பீனா, ஆர்த்தோபீனா, எடிமா, பாராக்ஸிமல் நோச்சல் டிஸ்பீனா (இரவில் தூங்கும் போது இடையில் இரும்புதல்) இந்த மாதிரியான அறிகுறிகள் உங்கள் இதயம் சீக்கிரம் செயலிழக்க போகிறது என்பதை காட்டுகிறது.

தீவிரம்
கார்டியாக் இருமலை அவ்வளவு சாதரணமாக நினைக்க வேண்டாம். எரிச்சலூட்டும் வகையில், நாள்பட்ட இருமல், வறண்ட இருமல், வெள்ளை மற்றும் இரத்தத்துடன் சளி போன்றவை தீவிரத்தை தருகிறது.

மருத்துவரை அணுகுங்கள்
இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டு விட்டால் அது இதயம் செயலிழப்பிற்கு கொண்டு வந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே இருமல் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்.

மருந்துகள்
எனவே இந்த மாதிரியான தொடர்ச்சியான இருமலுக்கு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். ஆஞ்சியோடென்ஸின்-மாற்றும் நொதி (ACE) தடுப்பான்கள் போன்றவை இதய செயலிழப்பு ஏற்படாமல் இருக்க உதவியாக இருக்கும். இது இரத்த குழாய்களை விரிவடையச் செய்து இரத்தத்தை எளிதாக பம்ப் செய்ய உதவுகிறது.
இது போக ஸ்டெராய்டல் அல்லாத அழற்சியற்ற மருந்துகள் (NSAID கள்), ஆஞ்சியோடென்சின் II ஏற்பி தடுப்பூசிகள் (ARB) போன்றவை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது தொடர்ச்சியான இருமலை குறைத்து விடும்.

முடிவுரை
எனவே உங்களுக்கு தேவையில்லாத இருமல் அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியமாக விட்டு விடாதீர்கள். அது கார்டியாக் இருமலாக கூட இருக்கலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவது உங்கள் இதயம் செயலிழப்பை தடுக்கலாம். உயிரை காக்கலாம்.



Click it and Unblock the Notifications
