Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!
மாரடைப்பு வந்தபின் மரணம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?
மாரடைப்பு உண்டாவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் மாரடைப்பு வந்தால் இறந்து போகாமல் தடுப்பது பற்றி இங்கு விரிவாக்க குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பேர் உயிரிழக்க முக்கிய காரணம் சரியான நேரத்தில் அவர்களுக்கு முதலுதவி செய்யாதே காரணம். அந்த வகையில் பார்க்கும் போது நிறைய வயதானவர்கள் பக்கவாதம் போன்ற நோயால் திடீரென்று பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு நம் உடனடி உதவி தேவைப்படுகிறது.

அமெரிக்க போன்ற நகரங்களில் பக்கவாதம் தான் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதனால் அமெரிக்காவில் நிறைய பேர்கள் பாதிப்படைகின்றனர்.

பக்கவாதமும் மாரடைப்பும்
ஒவ்வொரு வருடத்திற்கும் கிட்டத்தட்ட 795,000 பக்கவாத நோயாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த பக்கவாதத்திற்கு சரியான சிகச்சையை மேற்கொண்டாலே போதும் பக்கவாத இழப்பை தடுக்கலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் சிகச்சை மேற்கொள்கிறமோ அவ்வளவு சீக்கிரம் நிரந்தர உடல் செயலிழப்பை தடுக்கலாம்.

விழிப்புணர்வு
பக்கவாதம் மூளையில் ஏற்படும் ஒரு வித பாதிப்பு என்பதால் இதைப் பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுவதில்லை.

அவசர அழைப்பு
உங்களுக்கு அருகில் இருக்கும் நபரிடம் பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். வேண்டும் என்றால் அவசர எண் 911 க்கு அழைப்பை கொடுக்கலாம்.

அறிகுறிகள்
பக்கவாத அறிகுறிகள் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் பாதிப்பை பொருத்து உள்ளது. இந்த பக்கவாதம் ஆண் மற்றும் பெண் இருபாலரையுமே பாதிக்க கூடியது.
உணர்வற்ற நிலை, வலுவின்மை, ஒரு பக்கம் மட்டும் கை, கால், முகம் இவற்றை அசைக்க முடியாத நிலை
குழப்பம்
பேச்சு குழறல், பேசுவது புரியாமல் இருத்தல்
பார்வை மங்குதல்
மயக்கம், நடக்க சிரமப்படுதல், சமநிலையை இழத்தல்
திடீரென தாங்க முடியாத தலைவலி
மூச்சு விட சிரமப்படுதல்
உணர்வை இழத்தல்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
அவரின் புன்னகை சீராக இருக்கிறதா என்பதை முதலில் அறியுங்கள்.
இரு கைகளையும் தூக்க முடிகிறதா? ஒரு கையை அசைக்க முடியாமல் இருக்கிறதா என்பதை சோதித்து கொள்ளுங்கள்.
பேச்சில் ஒரு வித குழப்பம் இருக்கிறதா, அவர்கள் பேசுவது சரிவர புரியாமல் போகிறதா என்பதை கவனியுங்கள். உதாரணமாக அவரிடம் சில வாக்கியங்களை பேச சொல்லலாம். " வானம் நீல நிறத்தில் இருக்கும்" இது போன்ற வாக்கியங்களை அவர் எப்படி சொல்ல முயலுகிறார் என்பதை வைத்து கவனியுங்கள். இந்த அறிகுறிகள் யாரிடமும் தென்பட்டால் உடனே அவசர உதவியை அழைக்க முற்படுங்கள்.

பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்
பக்கவாதத்தை பொருத்த வரை இதில் பெண்கள் தான் அதிக பாதிப்புகளை சந்திக்கின்றனர். பக்கவாத இறப்புகளின் பட்டியலில் பெண்கள் மூன்றாவது இடத்தையும் ஆண்கள் 5 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வருடத்திற்கும் 55,000 பெண்கள் ஆண்களை விட பக்கவாதத்தால் பாதிப்படைகின்றனர் என்று தேசிய பக்கவாத மையம் தெரிவிக்கிறது.
மயக்கம்
மூச்சு விட சிரமம்
நடத்தையில் திடீர் மாற்றம்
மாயை
குமட்டல் அல்லது வாந்தி
வலிப்பு
விக்கல்கள்
இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் மூலம் அறிதல்
பக்கவாத நிலையை இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் கண்டறிகின்றனர்.
மூளை சிடி ஸ்கேன் மூலம் மூளையின் வரைபடத்தை எடுத்து அதன் மூலம் பாதிப்பை கண்டறியலாம். மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமும் மூளையில் திசுக்களில் ஏற்படும் மாற்றத்தை கண்டறியலாம். கரோயிட் அல்ட்ரா சவுண்ட், கரோயிட் ஆஞ்சியோகிராபி மூலம் இரத்த குழாய் தமனிகளின் வழியாக மூளைக்கு இரத்தம் சரியாக செலுகிறதா என்பதை அறிதல்.
எலெக்ட்ரோ கார்டியோகிராம் போன்றவை இதயத்தில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா அதன் மூலம் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிய பயன்படுகிறது. இரத்த பரிசோதனையும் பக்கவாதத்தை பற்றி அறிய உதவுகிறது.

பக்கவாதத்தின் வகைகள்
மூளைக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பாதை தடைபடுவதால் தான் பக்கவாதம் ஏற்படுகிறது. இதில் இரண்டு வகையான பக்கவாதம் உள்ளது

இஸ்கெமிக் பக்கவாதம்
இந்த பாதிப்பால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட பாதையில் இரத்தம் உறைந்து தடையை ஏற்படுத்துகிறது. இந்த வகையான பக்கவாதம் 87% வரை ஏற்படுகிறது. இரத்த தமனிகளில் ஏற்படும் இந்த அடைப்பு இரத்த குழாய் பாதையை குறுக்கி ஆக்ஸிஜனேற்ற இரத்தம் மூளைக்கு செல்ல விடாமல் தடுக்கிறது. இதில் படிந்துள்ள ப்ளக் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலால் ஆனது.

ஹெமரோஜிக்
இந்த வகை பக்கவாதத்தில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. 13%மக்கள் இந்த வகை பக்கவாதத்தால் பாதிப்படைந்துள்ளனர்.
மூளையில் உள்ள வலுவிழந்த இரத்த குழாய்கள் கிழிந்து இரத்தம் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவால் மூளையில் அதிக அளவில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மூளைச் செல்கள் பாதிப்படைகின்றன. இரண்டு விதமான வலுவிழந்த இரத்த குழாய்களை பக்கவாதத்தை ஏற்படுத்தும்

அனர்ஷியம்
அசாதாரண வடிவம் உடைய வலுவிழந்த இரத்தக் குழாய்களால் உண்டாகிறது.
ஆர்டரிவீனஸ் மால்ஃபார்மேசன் கொழுப்பு படலம் போன்றவை இரத்த குழாய்களில் தங்கி விடுவதால் இந்த பக்கவாதம் ஏற்படுகிறது.

காரணிகள்
பரம்பரை கூட பக்கவாதம் வர முக்கிய காரணமாக அமைகிறது. உங்கள் தாத்தா, பாட்டி உடன் பிறந்தவர்கள் போன்ற வர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டால் உங்களுக்கும் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு பக்கவாதம் வருவது உண்டு. ஆனால் இப்பொழுது பக்கவாதம் 55 வயதில் இருப்பவர்களுக்கே வந்து விடுகிறது என்று அமெரிக்க பக்கவாதம் மையமும் கூறுகிறது.
ஆண்களை விட பெண்களே இதில் அதிகளவு பாதிப்படைகின்றனர்.
ஆப்பிரிக்கா - அமெரிக்கன், ஹிஸ்பானியர்கள் - அ மெரிக்க இந்தியர்கள் போன்றவர்களுக்கு பக்கவாதம் அதிகளவில் ஏற்படுகிறது.
பக்கவாத நோயாளியை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தமும் பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். இந்த உயர் இரத்த அழுத்தத்தால் இரத்தத்தை ஏந்திச் செல்லும் தமனிகளில் அடைப்பு, வலுவிழப்பு ஏற்படுகிறது.
அதிக கொலஸ்ட்ரால் இரத்த குழாய்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடைசெய்கிறது.

இதய நோய்கள் (கரோனரி தமனி நோய்)
இதய நோய்கள் தமனிகளில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் மாரடைப்பு நோய் கூட ஏற்படலாம்.

டயாபெட்டீஸ்
டயாபெட்டீஸ் மட்டுமே பக்கவாதம் ஏற்பட காரணமில்லை. ஆனால் டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு அதிக இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் உள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிக்கில் செல் அனிமியா
ஆக்ஸிஜனேற்ற இரத்தத்தை எடுத்துச் செல்ல போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத நிலை தான் இது. இதனால் இந்த சிக்கில் செல் மூளைக்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுத்து பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் இதனை குழந்தைகளிடம் கண்டறிகின்றனர். வழக்கமான. இரத்த பரிமாற்றங்கள் பக்கவாதம் ஏற்படுவதை குறைக்கிறது.

இதர காரணங்கள்
புகைப் பழக்கம்
ஆரோக்கியமற்ற உணவு முறை
உடல் பருமன்
குறைந்த உடற் செயல்களை செய்தல்
மன அழுத்தம்
அதிகமான ஆல்கஹால்
கோகொய்ன் மருந்துகள், இல்லிசிட், ஆம்மெட்டோமைன் போன்ற மருந்துகளும் பக்க வாதத்தை ஏற்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications