Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
உங்க காலில் இப்படி வீக்கம் இருக்கா? அப்ப இந்த ஆபத்தான இதய நோய் உங்களுக்கு இருக்கலாமாம்... ஜாக்கிரதை!
உங்கள் கால்களில் வீக்கம் பல காரணங்களால் ஏற்படலாம். ஆனால் அந்த காரணம் எப்போதும் ஆபத்தில்லாததாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, சிலசமயங்களில் மோசமான நோய்களின் அறிகுறியாகவும் கால் வீக்கங்கள் இருக்கலாம்.
கால்களில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் மற்ற பல உறுப்புகளுடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்புடையது, எனவே உங்கள் கால்களின் வீக்கத்தில் அலட்சியம் கூடாது.

உண்மையில் இதயக் கோளாறை உங்கள் கால்களில் ஏற்படும் வீக்கம் மூலம் அறிந்து கொள்ளலாம். இது ஏன் நிகழ்கிறது மற்றும் உங்கள் வீக்கம் இதய நோயால் ஏற்பட்டதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமென்பதை மறந்து விடாதீர்கள்.
இதய செயலிழப்பு
இதய செயலிழப்பு ஒரு நீண்ட கால ஆரோக்கிய பிரச்சினையாகும். உங்கள் இதயம் மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாதபோது இது நிகழ்கிறது. உங்கள் இதயம் இன்னும் வேலை செய்கிறது, ஆனால் இரத்தத்தின் அளவைக் கையாள முடியாததால், உங்கள் உடலின் மற்ற பகுதிகளில் இரத்த தேக்கம் உருவாகிறது. இரத்தம் மற்றும் திரவங்கள் உங்கள் நுரையீரல் மற்றும் கால்களில் காலப்போக்கில் சேகரிக்கப்படுகின்றன.
கால் மற்றும் பாதங்களில் வீக்கம்
இதய செயலிழப்பு ஏற்படும் போது, உங்கள் இதயத்தின் கீழ் அறைகளில் ஒன்று அல்லது இரண்டும் இரத்தத்தை சரியாக பம்ப் செய்வதை நிறுத்துகின்றன. இதன் விளைவாக, இரத்த ஓட்டம் மெதுவாக மற்றும் உங்கள் கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளில் பின்வாங்குகிறது. இது எடிமாவுக்கு வழிவகுக்கிறது. எடிமா என்பது உடலின் திசுக்களில் அதிகப்படியான திரவம் சிக்கியதால் ஏற்படும் வீக்கமாகும்.
இந்த வீக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
எடிமாவின் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொள்வது, சரியான நேரத்தில் கண்டறிதல், நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு உதவும். இதன் ஆரம்பநிலை அறிகுறிகள் என்னவெனில்,
- உங்கள் கால்களை மிகவும் கனமாகவோ உணர ஆரம்பிக்கலாம்
- உங்கள் கால்கள் மற்றும் பாதங்கள் வீங்கத் தொடங்கலாம்
- வீங்கிய தோலை அழுத்தும் போது பள்ளம் ஏற்படுவது
- சாக்ஸ் அணியும் போது இறுக்கமாக உணரலாம்
- உங்கள் தோல் இறுக்கமாக அல்லது சூடாக இருக்கலாம்
- உங்கள் கணுக்கால், கால்விரல்கள் அல்லது பாதங்களை அசைப்பது கடினமாக இருக்கலாம்
வயிறு மற்றும் நுரையீரலில் தாக்கம்
இதய செயலிழப்பு வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் திடீரென உங்கள் எடை அதிகரிப்பதை நீங்கள் உணரலாம். இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் திரவத்தை நுரையீரலில் உற்பத்தி செய்யலாம். மேலே கூறப்பட்ட அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
