உங்க குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு இருக்கா? அப்ப உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா.. உடனே கைவிடுங்க..

Heart Attack In Tamil: இதய நோய் என்பது மிகவும் தீவிரமான ஒரு ஆரோக்கிய நிலை. இந்த இதய நோய் தான் உலகளவில் ஏராளமானோரின் மரணத்திற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாகும். ஒருவருக்கு இதய நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் சில காரணிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதில் வயது, குடும்ப வரலாறு போன்றவை குறிப்பித்தக்கவை.

ஆனால் உணவு முறைகள் அல்லது வேறு சில பழக்கங்களின் மூலமாக அதிகரிக்கும் இதய நோயின் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம். சில வகையான இதய நோய்கள் பரம்பரையாகவோ அல்லது மரபணுக்கள் வாயிலாகவோ ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன:

Heart Attack Worst Habits To Avoid If You Have A Family History Of Heart Attacks

* அரித்மியா
* கார்டியோமயோமதி
* குடும்ப ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா

எனவே ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வதோடு, அதைப் பற்றி மருத்துவரிடமும் பகிரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் ஒருவரது குடும்பத்தில் இதய நோய் வரலாறு இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருசில பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும். இந்த பழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அவை ஒருவரது இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இப்போது குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு இருந்தால் எந்த மாதிரியான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது

பலரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து நாளை தொடங்குகின்றனர். இப்படி குடிக்கும் போது, அது உடலுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, செரிமானத்திற்கும் உதவும். இருப்பினும், இந்த ஆரோக்கியமான பழக்கம் குறித்து மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இது ஒருவரது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவை சட்டென்று அதிரிக்கலாம். எனவே இதய ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க விரும்பினால், இந்த பழக்கம் உகந்தல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவுக்கு பின் இனிப்பு உணவுகள்

நிறைய பேருக்கு உணவு உண்ட பின் இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் எப்போதாவது இருந்தால் பரவாயில்லை. ஆனால் தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை உட்கொள்வது நல்லதல்ல. நிபுணர்களின் படி, உணவுக்கு பின் இனிப்புகளை உண்பது இன்சுலினை சட்டென்று அதிகரிப்பதோடு, உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகள் தூண்டப்படும். எனவே உணவுக்கு பின் இனிப்பு உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

இரவு தாமதமாக உண்பது

குடும்பத்தில் இதய நோய் வரலாற்றினைக் கொண்டவர்கள், உணவுப் பழக்கத்தில் மட்டுமின்றி, எப்போது சாப்பிடுகிறோம் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் மிகவும் தாமதமாக உட்கொள்வது செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை சட்டென்று உயர்த்தி, அதன் விளைவாக இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே எப்போதும் இரவு உணவை இரவு 7 மணிக்குள் முடித்துவிடுங்கள். இதனால் தூங்க செல்லும் முன் உணவுகளை ஜீரணமாக போதுமான நேரம் கிடைக்கும். மேலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ட்ரான்ஸ் கொழுப்புக்கள், சர்க்கரை, உப்பு போன்ற இதய நோய்களைத் தூண்டும் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு மாற்றாக சீசன் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மீன், குறைவான கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள், நட்ஸ், விதைகள், ஆலிவ் ஆயில் மற்றும் கனோலா எண்ணெய் போன்ற சாச்சுரேட்டட் கொழுப்பு குறைவான எண்ணெய்களை சமையலில் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது

ஒருகூர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மெதுவாக்கி, தமனிகளில் கொழுப்புக்கள் தேங்க செய்து, பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்க்கும் வழிவகுக்கும். மேலும் உட்கார்ந்திருக்கும் போது, தசைகளால் இரத்தத்தை இதயத்திற்கு அழுத்த முடியாமல், அதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு போன்றவற்றிற்கு வழிவகுத்து, இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

போதுமான தூக்கம் மேற்கொள்ளாமை

இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தாலோ அல்லது போதுமான தூக்கத்தை ஒருவர் பெறாமல் இருந்தாலோ, அது உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, நாளடைவில் மாரடைப்பைத் தூண்டிவிடும். எனவே தூக்கத்தை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

FAQs
மாரடைப்பிற்கான பொதுவான அறிகுறிகள் என்ன?

மாரடைப்பிற்கான பொதுவான அறிகுறிகளில் மார்பு வலி அல்லது அசௌகரியம், மூச்சுத் திணறல், வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை அடங்கும்.

ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதாக சந்தேகித்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதாக சந்தேகித்தால், உடனடியாக அவசர சேவைகளை அழைத்து, உதவி வரும் வரை, அந்த நபர் அமைதியாகவும், உட்கார்ந்தோ அல்லது படுத்துக்கொண்டோ இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாரடைப்பிற்கான ஆபத்து காரணிகள் யாவை?

மாரடைப்பிற்கான ஆபத்து காரணிகளில் உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, புகைபிடித்தல், உடல் பருமன், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் குடும்ப வரலாற்றில் இதய நோய் ஆகியவை அடங்கும்.

இதய நோய்களைத் தடுக்க முடியுமா?

ஆம், இதய நோய்களை ஆரோக்கியமான உணவுமுறை, தவறாமல் உடற்பயிற்சி, புகைபிடிப்பதை நிறுத்துதல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பெரும்பாலும் தடுக்க முடியும்.

BoldSky Lifestyle

Desktop Bottom Promotion