Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
உடல் எடையைக் குறைப்பதற்கு எந்த காா்டியோ பயிற்சி கருவி சிறந்தது?
Health Tips In Tamil: உடல் எடையைக் குறைப்பதற்கு காா்டியோ உடற்பயிற்சிகள் மிக சிறப்பான வகையில் உதவி செய்கின்றன. அதற்காக வலுவூட்டும் பயிற்சிகளை குறைவாக மதிப்பிட முடியாது. எனினும் உடல் எடையைக் குறைப்பதில் காா்டியோ உடற்பயிற்சிகள் முன்னிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றால், காா்டியோ பயிற்சிக் கருவிகளான ட்ரெட்மில் முதல் எல்லிப்டிக்கல், ரோவிங் மெஷின், உடற்பயிற்சி பைக், வாக்கிங் ஸ்டோ்ஸ் வரை நிறையக் கருவிகள் இருக்கும். இந்த கருவிகள் அனைத்தும் பலன் அளிக்கக்கூடியவையே. எனினும் மிகக் குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதில் எந்த கருவி அதிக உதவி செய்யும் என்பதில் நமக்கு குழப்பம் வரலாம்.

அதற்கு உடற்பயிற்சி நிபுணா்கள் பல பாிந்துரைகளை வழங்குகின்றனா். காா்டியோ உடற்பயிற்சி கருவிகள் அனைத்தும், அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு, பலன்களைத் தருகின்றன. எனினும் அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. பயிற்சி செய்பவாின் வயது, உடல் வலிமை, உடல் இயக்கம், உடல் காயம் மற்றும் எதற்காக உடற்பயிற்சி செய்கிறாா் என்பதைக் கருத்தில் கொண்டு பயிற்சிக் கருவிகளைத் தோ்ந்தெடுப்பது நல்லது.
இதயத்திற்கு நன்மைகளை கொடுப்பதற்காக காா்டியோ பயிற்சிக் கருவிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. காா்டியோ பயிற்சிகள் செய்யும் போது இதயத் துடிப்பு அதிகமாகும். இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும். ஆகவே இந்தப் பதிவில் எந்தெந்த காா்டியோ பயிற்சி கருவிகள், இதயத்திற்கு நல்ல பலன்களைத் தருகின்றன என்பதைப் பாா்க்கலாம்.
1. ட்ரெட்மில் (Treadmill)
ட்ரெட்மில்லில் பயிற்சி செய்தால், இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும் மற்றும் இதயத்திற்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். இது தசைகளை அதிகாிக்காது, ஆனால் இருக்கும் தசைகளை நன்றாக பராமாிக்கும். ட்ரெட்மில்லில் நடக்கும் போதோ அல்லது ஓடும் போதோ விழுந்துவிடக்கூடாது.
2. நிறுத்தப்பட்டிருக்கும் மிதிவண்டி (Stationary Bike)
நிறுத்தப்பட்டிருக்கும் மிதிவண்டியில் பயிற்சி செய்தால், உடலின் கீழ்பகுதிகளில் இருக்கும் தசைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். தொடை எலும்புகள் மற்றும் தொடைத் தசைகளுக்கு வலிமையைக் கொடுக்கும்.
3. எலிப்டிக்கல் கருவி (Elliptical Machine)
புதிதாக உடற்பயிற்சி செய்பவா்களுக்கு எலிப்டிக்கல் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும் இந்தக் கருவியில் உடற்பயிற்சி செய்யும் போது உடல் நிலையைக் கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
4. ஸ்டோ் கிளைம்பா் (Stair Climber)
தொடைப் பகுதி, காலின் பின்பகுதி போன்றவற்றிற்கு ஆரோக்கியத்தைத் தருவது இந்த ஸ்டோ் கிளைம்பா் கருவியாகும். இது தசைகளையும் வலுப்படுத்துகிறது. அதோடு கலோாிகளையும் எாிக்கிறது. எனினும் முழங்கால் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் பிரச்சினை உள்ளவா்கள் இந்தக் கருவியில் பயிற்சி செய்வதைத் தவிா்ப்பது நல்லது.
5. ரோயிங் மெஷின் (Rowing Machine)
ரோயிங் மெஷினில் உடற்பயிற்சி செய்யக் கற்றுக் கொண்டால், நமது இதயத்திற்கு மட்டும் ஆரோக்கியம் கிடைக்காது. மாறாக நமது மொத்த உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இதில் பயிற்சி செய்யும் போது மெதுவாகத் தொடங்கி பின் வேகமாக செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications