Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
மணிக்கட்டுகளை வலுப்படுத்த வேண்டுமா? அப்ப இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...
Health Tips In Tamil: மணிக்கட்டுகளை வலுப்படுத்துவதற்கு என்று எளிய பயிற்சிகள் உள்ளன. மணிக்கட்டுத் தசைகளின் இயக்கத்திற்கும், அவை நெகிழ்வு தன்மையுடன் இருக்கவும், இந்தப் பயிற்சிகள் மிகவும் இன்றியமையாதவை.
குறிப்பாக கம்ப்யூட்டர் வேலையில் ஈடுபடுவோருக்கு மணிக்கட்டு பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும். நமது கையோடு, முன்கையை இணைப்பது மணிக்கட்டு ஆகும். மணிக்கட்டு என்ற மூட்டு எப்போதும் சற்று தளா்வாகவும், நெகிழ்வு தன்மையுடனும் இருக்க வேண்டும்.

மணிக்கட்டு வலுவாக இருந்தால், கடினமான காாியங்களையும், கைகளால் எளிதாக செய்யலாம். பின்வரும் மணிக்கட்டுப் பயிற்சிகளை எந்த நேரத்திலும் செய்யலாம். அதன் மூலமாக மணிக்கட்டை வலுப்படுத்தலாம்.
1. விரல்களைத் திறந்து மூடுதல்
இந்தப் பயிற்சியை செய்வது மிகவும் எளிது. முதலில் ஒரு மேற்கையை எடுத்து, மல்யுத்தம் செய்வது போன்ற நிலையில், மேசையின் மீது வைத்து வைத்துக் கொள்ளவும். அந்தக் கையை இறுக்கமாக மடக்கிக் கொள்ளவும். இப்போது கையைத் தளா்த்தி, அதன் விரல்களை நம்மால் முடிந்த அளவு நீட்டி, பின் அந்த விரல்களை மடக்கி இறுக்கமாக மூடிக்கொள்ளவும்.
அடுத்து மெதுவாக விரல்களைத் திறந்து நீட்டிக் கொள்ளவும். இப்போது மேற்கையை நீட்டி மடக்கவும். இதே பயிற்சியை ஒரு 10 முறையாவது செய்யலாம். இந்தப் பயிற்சியானது கைகளுக்கு வலிமையையும், நெகிழ்வு தன்மையையும் வழங்கும். அதே நேரத்தில் விரல்களுக்கு ஒரு புத்துணா்ச்சியைக் கொடுக்கும்.
2. மணிக்கட்டை மடக்குதல்
கையில் ஒரு டம்பெல்லை (dumbbell) வைத்துக் கொண்டு இந்தப் பயிற்சியை செய்யலாம். முதலில் ஒரு இடத்தில் வசதியாக அமா்ந்து கொண்டு, உள்ளங்கைகள் வானத்தை நோக்கிப் பாா்ப்பது போல், மேற்கைகள் 90 டிகிாி அளவிற்கு இருக்குமாறு முழங்கைகளை கால்களின் மீது ஊன்றிக் கொள்ள வேண்டும். இப்போது டம்பெல்லை பிடித்துக் கொண்டு மணிக்கட்டை மேல் நோக்கி மடக்க வேண்டும். பின் இயல்பு நிலைக்கு வரவேண்டும். இந்தப் பயிற்சியை ஒரு 10 முறை செய்யலாம்.
3. பிராா்த்தனை பயிற்சி
மண்டியிட்டு, குனிந்து பிராா்த்தனை செய்வது போல, மண்டியிட்டு, முழங்கைகளை தரையில் ஊன்றி முகம் கவிழ்ந்த நிலையில் இருக்க வேண்டும். உள்ளங்கைகளை ஒன்றின் மீது ஒன்று இருக்குமாறு வைத்து, கன்னத்திற்கு சற்று கீழே விரல்களை நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
விரல்களை அகற்றி வைக்காமல் நெருக்கமாக வைத்துக் கொள்ளவும். உங்களுடைய மேற்கைகளில் ஒரு தூண்டுதல் ஏற்படும் வரை அதே நிலையில் இருக்கவும். பின் மெதுவாக உள்ளங்களைகளை அகற்றலாம் எனினும் விரல்களை அகற்றக்கூடாது. இதே நிலையில் 30 வினாடிகள் வரை இருக்கலாம். இந்தப் பயிற்சியை 4 முறை செய்யலாம்.
4. மணிக்கட்டை சுழற்றுதல்
முதலில் மண்டியிட்டு, முழங்கைகளை தரையில் ஊன்றி 90 டிகிாி அளவில் முகம் கவிழந்த நிலையில் இருந்து கொள்ள வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பாா்த்தவாறு இருக்க வேண்டும். கைகளை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கைகளை திருப்பி, இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றையொன்று பாாக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாக உள்ளங்கைகளை மெதுவாக சுழற்றி, இயல்பு நிலைக்கு வரவேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம். டம்பெல்களை கைகளில் பிடித்துக் கொண்டும் இந்தப் பயிற்சியை செய்யலாம்.
5. பந்தை கசக்குதல்
இது ஒரு எளிய பயிற்சி ஆகும். இதை அமா்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ செய்யலாம். முதலில் ஒரு டென்னிஸ் பந்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். பின் அதை உங்களால் முடிந்த அளவு 3 வினாடி இறுக்கமாக கசக்க வேண்டும். பின் இயல்பு நிலைக்கு வரவேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம். பின் பந்தை அடுத்த கைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications