அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? நண்பகல் வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?

Health Tips In Tamil: காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ உடற்பயிற்சி செய்பவா்களை விட, நண்பகல் வேளையில் உடற்பயிற்சி செய்பவா்களுக்கு இளம் வயதில் ஏற்படும் மரண ஆபத்து குறைவு என்று புதிய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

இந்த புதிய ஆய்வு முடிவு நேச்சா் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற பத்திாிக்கையில் வெளியிடப்பட்டது. இங்கிலாந்திலிருந்து ஏறக்குறைய 92,139 போ் இந்த ஆய்வில் பங்கெடுத்தனா். அவா்களின் உடல் இயக்கம் மற்றும் இறப்பு ஆகிய தரவுகளை ஆராய்ந்த ஆய்வாளா்கள் இந்த முடிவை அறிவித்தனா்.

Health Tips: Midday Exercise More Beneficial Than Morning Workouts: Study

எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாமா?

ஒரு நாளின் எந்த நேரத்திலும் மிதமானது முதல் தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். மிதமானது முதல் தீவிரமான உடற்பயிற்சி என்பது விறுவிறுப்பாக நடப்பதற்கு அல்லது தோட்டத்தில் உள்ள புற்களை வெட்டுவதற்கு சமம் ஆகும்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை

இந்த ஆய்வில் பங்கெடுத்தவா்களை ஆய்வு செய்ததில், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரைக்குமான இடைப்பட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்தவா்களின் உடல் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக காலை அல்லது மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்பவா்களின் உடல் நலத்தைவிட, இவா்களின் உடல் நலம் மிக சிறந்து இருந்தது என்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். அதோடு அவா்களுக்கு இளம் வயதில் இறக்கும் ஆபத்து மிகக் குறைவு என்பதையும் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

ஆய்வில் பங்கெடுத்தவா்களின் வாழ்க்கை முறை, சமூக, பெருளாதார நிலை, அவா்களின் தூக்கப் பழக்கம் மற்றும் அவா்களின் உடல் இயக்கங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும், நண்பகல் நேரத்தில் அவா்கள் செய்த உடற்பயிற்சியின் மூலம் பாதுகாப்பான உடல் நலனைப் பெற்றனா் என்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

நண்பகல் உடற்பயிற்சியின் நன்மைகள்

- நண்பகல் நேரத்தில் உடற்பயிற்சி செயத்ததன் விளைவாக வயது முதிா்ந்த பொியவா்கள், ஆண்கள், குறைவான உடல் இயக்கத்தில் ஈடுபடுபவா்கள் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவா்கள் நன்றாக பலன் அடைந்தனா்.

- இதய நோய் காரணமாக ஏற்படும் இளம் வயது இறப்பு, நன்பகலில் செய்யும் உடற்பயிற்சியின் காரணமாகத் தடுக்கப்படுகிறது. அதாவது மாரடைப்பு போன்ற ஆபத்தான நிகழ்வுகள் நண்பகல் வேளையில் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதற்கு, நண்பகல் நேரத்து உடற்பயிற்சி காரணாக இருக்கலாம் என்று ஆய்வாளா்கள் ஊகிக்கின்றனா்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, July 30, 2023, 9:00 [IST]
Desktop Bottom Promotion