Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
எக்காரணம் கொண்டும் இந்த 5 உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க.. அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க...
Health Tips In Tamil: ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் காலை உணவானது நீண்ட நேர இடைவெளிக்கு பின் உண்ணக்கூடிய உணவு. காலை உணவை தவிர்த்தால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் காலை உணவை தவறாமல் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுவாக காலை உணவின் போது இட்லி, தோசை, உப்புமா என்று தான் சாப்பிடுவோம்.

ஆனால் தற்போதைய அவசர உலகில் காலை உணவை சாப்பிட நேரமில்லாமல் ஜூஸ், சாலட் என்று சாப்பிடுகிறோம். இவைகளும் ஆரோக்கியமானவை தான். ஆனால் இவற்றை வெறும் வயிற்றில் உண்பது நன்மைக்கு பதிலாக தீங்கையே விளைவிக்கும். இப்போது எந்த உணவுகளை காலை வெறும் வயிற்றில் இருக்கும் போது சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
1. பழ ஜூஸ்கள்
பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியவை தான். ஆனல் அந்த பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்கும் போது, அதன் விளைவாக கணையத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பழங்களை ஜூஸ் வடிவில் எடுக்கும் போது அதில் உள்ள ஃபுருக்டோஸ் வடிவிலான சர்க்கரை, கல்லீரலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகின்றன.
மேலும் பழங்களை ஜூஸாக எடுக்கும் போது அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. ஏனெனில் பழங்களின் தோலில் தான் அந்த நார்ச்சத்துள்ளது. பழச்சாறுகளை தயாரிக்கும் போது அந்த நார்ச்சத்து வடிகட்டி பிரித்தெடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக பழ ஜூஸ்களை குடிக்கும் போது இரத்த சர்க்கரை அளவு சட்டென்ஸ அதிகரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
2. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற பழங்களில் உள்ள அமிலங்கள் குடலில் அமில உற்பத்தியை அதிகரித்து, அல்சர், இரைப்பை அழற்சி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஃபுருக்டோஸ் உள்ள பழங்களை உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மெதுவாக்கும். எனவே இந்த மாதிரியான பழங்களை உட்கொள்ளக்கூடாது.
3. காபி
உலகில் 90 சதவீத மக்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கப் காபியை குடிக்கும் பழக்கத்தையே கொண்டிருப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் காபி குடித்தால், அது அசிடிட்டியை ஏற்படுத்தும். ஏனெனில் காபியானது செரிமான மண்டலத்தில் ஹைட்ரோகுளோரிக் அமில உற்பத்தியை தூண்டிவிட்டு, இரைப்பை அழற்சியை ஏற்படுத்திவிடும். எனவே காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
4. தயிர்
என்ன தான் தயிர் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், தயிரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள லாக்டிக் அமில பாக்டிரியாக்கள், லயிற்றில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் பயனற்றதாகும். மேலும் அதிகப்படியான அமிலத்தன்மை காரணமாக வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்யப்பட்டு, அசிடிட்டி பிரச்சனையை வரவழைத்துவிடும்.
5. காய்கறி சாலட்
பொதுவாக சாலட்டுகள் மிகவும் ஆரோக்கியமானவை. ஆனால் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காய்கறி சாலட்டை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அதை காலையில் உட்கொள்ளும் போது, வயிற்றை முழுவதுமாக நிரப்பிவிடும்.
இதன் விளைவாக வயிற்று உப்புசம், அடிவடியிற்று வலியை அனுபவிக்கக்கூடும். அதுவும் சாலட்டில் தக்காளியை சேர்த்தால், அதில் உள்ள டானிக் அமிலம், லயிற்றில் செரிமான சாற்றுடன் தொடர்பு கொண்ட வயிறு எரிச்சலை ஏற்படுத்தும்.
எனவே காலையில் எழுந்ததும் உட்கொள்ளும் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால், அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். காலையில் பழங்களை உண்பதாக இருந்தால், தர்பூசணி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications