Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்!
ஒருவருக்கு எந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா?
Health Tips In Tamil: சிலருக்கு சுற்றுப்புறத்தில் இருக்கும் தூசிகள், மகரந்த தூள்கள் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் நிறைய பேர் தும்மல், இருமல் மற்றும் சோர்வு போன்ற பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கின்றனர்.
பொதுவாக சுற்றுச்சூழல் ஒவ்வாமை என்பது தூண்டுதல்கள் காரணமாக ஏற்படுகிறது. இந்த தூண்டுதல்கள் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு மூக்கு ஒழுகுதல், தும்மல், அரிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகளை அவர்கள் சந்திக்கின்றனர். எந்தெந்த சுற்றுப்புற காரணிகள் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என அறிந்து கொள்வோம்.

சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமை அறிகுறிகள்
சுற்றுச்சூழல் காரணிகள் நமக்கு வைரஸ் சளியை உண்டாக்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினையால் இந்த ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படுகின்றன. தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல், அரிப்பு, தலைவலி மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருந்தால் அது உயிருக்கு ஆபத்தானதாக அமையலாம். சிலருக்கு பருவகால ஒவ்வாமை இருக்கும் அதுவும் உங்கள் அறிகுறிகளை மோசமாக மாற்ற வாய்ப்பு உள்ளது.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் சில சுற்றுப்புற காரணிகள்
ஒவ்வாமை என்பது நோயெதிர்ப்பு அமைப்பு எதிர்வினையை தூண்ட காரணமாக அமைகிறது. ஒவ்வாமையை உண்டாக்கும் 5 காரணிகள் :
தூசிப் பூச்சிகள்
தூசிப் பூச்சிகள் உட்புற ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது. மெத்தைகளில் வாழும் நுண்ணிய இழைகளில் தூசிப் பூச்சிகள் காணப்படுகிறது. கோடை காலங்களில் இது அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது. தூசிப் பூச்சிகள் சூடான மற்றும் ஈரப்பதமான சூழலை அதிகம் விரும்புகின்றன.
மகரந்த தூள்கள்
மகரந்த தூள்களால் நிறைய பேருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. மகரந்த ஒவ்வாமை இருப்பவர்கள் தும்மல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் தொண்டை அரிப்பு போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் மகரந்த தூள்கள் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான சமயங்களில் உங்களுக்கு அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
செல்லப் பிராணிகள் வளர்ப்பு
செல்லப் பிராணிகளில் இருக்கும் பொடுகு, உமிழ்நீர் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனாலும் உங்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும். தும்மல், அரிப்பு, இருமல் மற்றும் படை நோய் போன்ற பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதை சுத்தமாக பராமரிப்பது மிகவும் அவசியம்.
பூஞ்சை தொற்று
சில பேருக்கு பூஞ்சை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மோல்டு போன்றவை கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும். மோல்டு ஒவ்வாமையின் அறிகுறிகள் பின்வருமாறு : மோல்டு ஒவ்வாமையால் நிறைய பேருக்கு இருமல், சுவாசிப்பதில் சிரமம், தும்மல் மற்றும் தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகிறது. ஈரமான சூழலில் தான் பூஞ்சை அதிகளவு வளர்கிறது. இந்த மோல்டு பூஞ்சை தொற்று பொதுவாக குளியலறைகள் மற்றும் மற்ற இடங்களிலும் காணப்படுகிறது.
சிகரெட் புகை
சிகரெட் புகை பலருக்கு ஒவ்வாமை அறிகுறிகளை உண்டாக்குகிறது. இது அறிகுறிகளை எரிச்சலூட்டுகிறது. மேலும் நிலைமையை மோசமாக்குகிறது. எனவே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் புகைப்பழக்கத்தை கைவிடுவது நல்லது.
சுற்றுச்சூழல் ஒவ்வாமையை எவ்வாறு கண்டறியலாம்?
உங்களுக்கு சுற்றுச்சூழல் ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். இதன் மூலம் மருத்துவர் உங்களுக்கு சில பரிசோதனைகளை மேற்கொள்ளுவார். தோல் குத்துதல் பரிசோதனை, இரத்த பரிசோதனை, அழற்சி தரும் உணவுப் பொருட்களை நீக்குவது போன்ற விஷயங்களை அவர் கூறுவார். உங்கள் அழற்சிக்கான காரணம் கண்டறிந்தவுடன் அதற்கான மருந்து மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
சிகிச்சை முறைகள்
அழற்சிக்கு எதிராக செயல்பட ஆண்டிஹிஸ்டமைன் போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். அழற்சிக்காக பயன்படுத்தும் மருந்து பொதுவாக தூக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். சிட்ரசின் (Zyrtec) மற்றும் லோராடாடைன் (Claritin) போன்ற ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகள் தூக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு. உங்களுக்கு ஒவ்வாமை அதிகமாக இருந்தது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அழற்சி ஷாட்ஸ் எனப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு சிகிச்சைகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications