Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
அடிக்கடி இந்த அறிகுறிகளை சந்திச்சா அசால்ட்டா இருக்காதீங்க... உயிரைப் பறிக்கும் நோய் இருக்க வாய்ப்பிருக்கு..
Health Problems In Tamil: தற்போதைய அவசர உலகில் நிறைய பேர் தினந்தோறும் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இப்படி சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பலர் மருத்துவரிடம் செல்லாமலேயே சுயமாக மருந்து மாத்திரைகளை எடுத்து சாதாரணமாக விட்டுவிடுகின்றனர். ஆனால் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஏனென்றால், அது நமது உடலில் உள்ள தீவிர பிரச்சனையை நமக்கு உணர்த்த நமது உடல் நமக்கு உணர்த்த வெளிகாட்டும் அறிகுறியாக இருக்கலாம். கீழே ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

1. தலைவலி
நிறைய பேர் அடிக்கடி தலைவலியை சந்திக்கின்றனர். ஒருவருக்கு தலைவலியானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் உடல் வறட்சி, மன அழுத்தம் அல்லது போதுமான ஓய்வில்லாமை போன்றவை அடங்கும். ஆனால் இந்த தலைவலியை ஒருவர் இன்னும் தீவிரமாக அனுபவித்தால், அது ஒற்றை தலைவலியாக இருக்கலாம். ஒற்றை தலைவலியை ஒருவர் சரியான நேரத்தை கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது நாள்பட்ட ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு மாதத்தில் 15 முறைக்கு அதிகமாக தலைவலியை அனுபவித்தால், நிலைமை மோசமாவதற்குள் மருத்துவரை அணுகுங்கள்.
2. மோசமான குடலியக்கம்
உடலில் இருந்து கழிவுகளை தினமும் வெளியேற்ற வேண்டியது அவசியம். இதில் சிலர் தினமும் பலமுறை கழிவறை சென்று தவறாமல் கழிவுகளை வெளியேற்றிவிடுவர். ஆனால் இன்னும் சிலர் வாரத்திற்கு ஒருமுறை அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவர். எப்படி கழிவுகளை வெளியேற்றினாலும், நீங்கள் வெளியேற்றும் கழிவின் நிறத்தை கவனிக்க வேண்டும். மலமானது இரத்தம் கலந்திருந்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனெனில் இரத்தம் கலந்த மலமானது மலச்சிக்கல் அல்லது மூலநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர கிரோன் நோய், குடல் கட்டிகள் அல்லது குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே இந்நிலையில் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
3. உடல் களைப்பு
நிறைய பேர் தொலைதூரம் பயணம் மேற்கொண்டு வேலைக்கு செல்கிறார். இப்படி நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதால், பலர் மிகுந்த உடல் சோர்வை சந்திப்பது சாதாரணம். ஆனால் எந்த ஒரு கடினமான வேலையையும் செய்யாமல், ஒருவர் மிகுந்த உடல் சோர்வை நீண்ட நாட்களாக சந்தித்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனெனில் உடல் களைப்பானது வைட்டமின் அல்லது கனிமச்சத்து குறைபாடு, மன இறுக்கம், இரத்த சோகை, தைராய்டு பிரச்சனை, இதய பிரச்சனை ஆகியவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
4. நாள்பட்ட இருமல்
இருமலானது வைரல் அல்லது பாக்டீரியா தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ஒருவேளை நோய்த்தொற்று கிருமிகள் இருமலை ஏற்படத்தாமல் இருந்தால், உங்களின் வாழ்க்கை முறை அல்லது குடும்ப வரலாறு காரணமாக இருக்கலாம். அதுவும் நீங்கள் புகைப்பிடிக்கும் இடத்தில் அதிக நேரம் செலவழித்தால், புகைமூட்டமான இடத்தில் இருந்தால், நுரையீரலில் கட்டிகள் இருந்தால் இப்படியான இருமல் வரலாம். இதுதவிர ஆஸ்துமா, ஆசிட் ரிப்ளக்ஸ், COPD ஆகியவற்றினாலும் நாள்பட்ட இருமலை சந்திக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.
5. உடலில் ஆற்றல் இல்லாமை
உங்கள் உடலில ஆற்றல் இல்லாதது போன்று உணர்கிறீர்களா? அப்படியானால் அது உடல் ரீதியான சீரழிவின் அறிகுறியாகும். இது உடல் ஒரு குறிப்பிட்ட அளவிலான செயல்பாட்டிற்குப் பழக்கப்படாதபோது இது நிகழ்கிறது. நீண்ட நேரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று கடினமான உடற்பயிற்சியைத் தொடங்கினால், அவர்கள் இதுவரை சந்திக்காத அளவில் உடலில் ஆற்றல் இல்லாததை உணர்வார்கள். இருப்பினும், உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது இதய நோய் அல்லது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
