Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
தினமும் கேரள மட்டை அரிசியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
Kerala Matta Rice In Tamil: தற்போது உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதனால் நிறைய பேர் வெள்ளை சாதத்தை அதிகம் உண்பதைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். மேலும் வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று அரிசியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் அந்த வகையினர் என்றால், இனிமேல் வெள்ளை அரிசிக்கு பதிலாக கேரள மட்டை அரிசியை சமைத்து சாப்பிடுங்கள். கேரளாவின் பாலக்காடு பகுதியில் தயாரிக்கப்படும் கேரள மட்டை அரிசி ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டது.

மேலும் இது வெள்ளை அரிசியை விட மிகவும் ஆரோக்கியமானது மற்றும் தனித்துவமான சுவையைக் கொண்டது. இந்த கேரள மட்டை அரிசியை ரோஸ் மட்டை அரிசி, பாலக்கடன் மட்டை அரிசி, கேரளா சிவப்பு அரிசி அல்லது சிவப்பு புழுங்கல் அரிசி என்றும் அழைப்பார்கள்.
இந்த மட்டை அரிசியை வெறுமனே சமைத்தும் சாப்பிடலாம் அல்லது இட்லி, இடியாப்பம், முறுக்கு போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தலாம். சரி, கேரளா மட்டை அரிசியை தினமும் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஏராளமான சத்துக்கள்
மற்ற அரிசியுடன் ஒப்பிடுகையில் கேரளா மட்டை அரிசியில் ஏராளமான அளவில் சத்துக்கள் உள்ளன மற்றும் இதன் வெளிப்புறத்தில் உள்ள சிவப்பு நிற அடுக்கு பெரிகார்ப் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெரிகார்ப் மற்ற அரிசியில் பாலிஷ் செய்து நீக்கப்படுகிறது. ஆனால் இந்த வெளிப்புற அடுக்கில் தான் சத்துக்களே நிறைந்துள்ளன. முக்கியமாக மட்ட அரிசியில் நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. கூடுதலாக மட்ட அரிசியில் க்ளுட்டன் இல்லை. இதனால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மக்னீசியம் அதிகம் உண்டு
கேரளா மட்ட அரிசியில் மக்னீசியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. உடலில் மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வரத்தூண்டும். உதாரணமாக, 1/2 கப் மட்ட அரிசியில் 42 கிராம் மக்னீசியம் உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் குறையும்
கேரளா மட்டை அரிசியை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயம் குறையும். ஏனெனில் மட்டை அரிசி இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதைத் தடுப்பதோடு, அடைப்புக்களையும் போக்கும். கூடுதலாக் மட்டை அரிசி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
சர்க்கரை நோயின் அபாயம் குறையும்
டைப்-2 சர்க்கரை நோயைக் கொண்டவர்களுக்கு, அதை சமாளிக்க டைப்-2 சர்க்கரை நோய் உதவி புரியும். இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளன. அதுவும் டைப்-2 சர்க்ககரை நோயால் தான் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது வாழ்க்கை தரத்தை பாதிக்கும். இந்த டைப்-2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கேரள மட்டை அரிசி உதவி புரிவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
செரிமானம் சிறப்பாக இருக்கும்
கேரள மட்டை அரிசி நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. ஒருவர் தினமும் போதுமான அளவு நார்ச்சத்தை பெற்று வந்தால், செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதோடு, வயிறும் நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் மற்றும் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
கேரள மட்டை அரிசியில் கிளைசீமிக் இன்டென்ஸ் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இவை இரண்டும் இரத்த அழுத்தத்தை மறைமுகமாக குறைக்க உதவுகிறது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளன. மட்டை அரிசியை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
எலும்புகள் வலுவாக இருக்கும்
வெள்ளை அரிசியை விட கேரள மட்டை அரிசியில் கால்சியம் அதிகம் உள்ளன. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்தாகும். எனவே தினமும் உணவில் கேரள மட்டை அரிசியை சேர்க்கும் போது, அது எலும்புகள் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications