Latest Updates
-
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்!
உலக உணவு கொள்கை அறிக்கையின் படி வெறும் இத்தனை சதவீத மக்கள்தான் ஆரோக்கிய உணவை உண்கிறார்களாம்...ஷாக் ஆகாதீங்க!
தற்போதைய நவீன உலகில் உணவுமுறை என்பது வேகமாக மாறிவருகிறது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதை விட இந்தியர்கள் அதிக சிற்றுண்டிகளையம், ஆரோக்கியமற்ற உணவுகளையும் அதிகம் சாப்பிடுகிறார்கள்.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) மே 29 அன்று வெளியிட்ட 2024 ஆம் ஆண்டின் உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 38 சதவிகித இந்தியர்கள் ஆரோக்கியமான உணவுகளுக்குப் பதிலாக நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்கின்றனர்.

அவர்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே ஆரோக்கியமான உணவுகளை உண்கின்றனர், 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை இன்றைய இந்தியர்களின் உணவுப் பழக்கம் குறித்த கவலையை எழுப்புகிறது. உணவுப் பழக்கமே ஒருவரின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஏறக்குறைய பாதி மக்கள் தேவையான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினால், நோய்களின் வீதமும் அதிகரிக்கத் தொடங்கும். இது பல வழிகளில் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.
உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கை, 2024
சமீபகாலமாக, அதிகமான மக்கள், பேக் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் புதியதாக இல்லாத இறைச்சி மற்றும் நீண்ட நேரம் சமைப்பதற்கு பதிலாக உடனடியாக சமைக்கக்கூடிய உணவுகளை உண்ணத் தொடங்கியுள்ளனர். அதாவது, அதே மக்கள் போதுமான புதிய காய்கறிகள், பச்சை உணவுகள், பருப்பு வகைகள், புரதம், நார்ச்சத்து, பழங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த பிற உணவுகளை சாப்பிடுவதில்லை.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது இறுதியில் தேசிய அளவிலான நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மோசமான உணவுப் பழக்கம் காரணமாக, நாட்டின் 16.6 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குளோபல் ஃபுட் ரிப்போர்ட் கூறுகிறது.
இந்த அறிக்கையின்படி, ஒட்டுமொத்த நாட்டின் மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் மட்டுமே ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள். அதாவது காய்கறிகள், மாவுச்சத்துள்ள பிரதான உணவுகளான அரிசி, பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ்கள் அல்லது விதைகள் மற்றும் விலங்கு உணவுகள் உட்பட ஐந்து பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை உண்கிறார்கள்.
இந்த உணவுப்பழக்கம் ஆரோக்யத்திற்கு ஏன் ஆபத்தானது?
உங்கள் ஆரோக்கியம், ஊட்டச்சத்து நுகர்வு மற்றும் நோய்களைத் தடுக்க, பரிந்துரைக்கப்பட்ட ஐந்து உணவுக் குழுக்களின் விதிகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். பரிந்துரைக்கப்ட்ட ஆரோக்கிய உணவு என்பது குறைந்தது ஒரு விலங்கு சார்ந்த உணவு, ஒரு காய் அல்லது விதை, ஒரு காய்கறி, ஒரு மாவுச்சத்து நிறைந்த உணவு மற்றும் ஒரு பழமாகும்.
ஒரு நபரை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விலக்கி வைக்க தினசரி தேவைப்படும் குறைந்தபட்ச ஊட்டச்சத்து இதுவாகும். இருப்பினும், மக்கள் இந்த விதிகளை புறக்கணிக்கத் தொடங்கினால், ஆரோக்கியமான உணவுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடத் தொடங்கினால், உங்கள் ஆரோக்கியம் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும். இந்த 5 ஆரோக்கிய உணவுகள் ஏன் முக்கியமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
- இந்த உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதால் இதய நோய்கள், தைராய்டு பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.
- இந்த உணவுகளில் ஆரோக்கியமற்ற எண்ணெய், கலோரிகள், டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை அதிமுள்ளன, இது உங்கள் உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் நோய், சிறுநீரக பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
- பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை சர்க்கரை, பாதுகாப்பு பொருட்கள், செயற்கை நிறம் மற்றும் செயற்கை சுவைகள் உள்ளன, அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நச்சுத்தன்மையுடையதாக மாறும். மேலும், அதிக சர்க்கரை உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும்.
இந்தியர்களின் உணவுப் பழக்கம், ஆரோக்கியமான உணவுகளுக்கு தேவைப்படும் செலவுகள் காரணமாக, பல ஆண்டுகளாக மாறிவிட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் விலை உயர்ந்தவை என்று அது கூறுகிறது, அதேசமயம் வறுத்த, பொறிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் மிகவும் மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்கின்றன. அதனால்தான் மக்கள் ஆரோக்கியமற்ற உணவை நோக்கி நகர்கின்றனர்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
