Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
உடம்புல இரத்தம் கம்மியா இருக்கா? அப்ப இந்த 6 பழங்களை மட்டும் கொஞ்சம் அதிகமா வாங்கி சாப்பிடுங்க...
Fruits For Hemoglobin: நீங்கள் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? உங்கள் முகம் திடீரென்று வெளுத்து போய் தெரிகிறதா? அப்படியானால் உங்கள் உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களின் காணப்படும் ஒரு புரோட்டீன் ஆகும். இரத்த செல்களின் செயல்பாடு ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், உடல் செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்படும்.

ஒருவருக்கு ஹீமோகுளோபின் பல காரணங்களால் குறையலாம். அதில் இரத்த சோகை இருந்தால் அல்லது சில கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் இருந்தால் ஏற்படலாம். ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், அதன் விளைவாக ஒருவர் உடல் சோர்வு, பலவீனம், மஞ்சள் காமாலை அல்லது அடிக்கடி தலைவலி ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பல்வேறு உணவுகள் பெரிதும் உதவி புரியும். அதுவும் நீங்கள் பழப் பிரியர் என்றால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பழங்களை அதிகம் உட்கொண்டு வந்தால், விரைவில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். இப்போது ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. மாதுளை
இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் மற்றொரு சிறப்பான பழம் தான் மாதுளை. மாதுளையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை வளமான அளவில் உள்ளன. மேலும் இப்பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் உடலில் இரும்புச்சத்தை அதிகரித்து இரத்த செல்களின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், தினமும் மாதுளையை சாப்பிடுங்கள். இதனால் விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. வாழைப்பழம்
ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இந்த பழத்தை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம், இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி தூண்டப்படுகிறது. மேலும் வாழைப்பழத்தில் இரும்புச்சத்துடன், ஃபோலிக் அமிலமும் உள்ளது. இதுவும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க இன்றியமையாத ஒரு சத்தாகும்.
3. ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று கூறுவார்கள். ஏனெனில் ஆப்பிளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முக்கியமாக ஆப்பிளில் இரும்புச்சத்துடன், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே உடலில் இரத்தம் சிறப்பான அளவில் இருக்க விரும்பினால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
4. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின் சி இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சி, உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த செல்களை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், அதை அதிகரிக்க வெறும் இரும்புச்சத்து உணவுகளை மட்டும் உட்கொள்ளாமல், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் சி ஆரஞ்சு, கிரேப் புரூட், பெர்ரி பழங்கள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகின்றன.
5. பீச்
பீச் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே இரும்புச்சத்து குறைபாடு அல்லது உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு பீச் பழத்தை உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
6. பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. இந்த பேரிச்சம் பழத்தை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அது உடலை வலுவாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே இரத்த சோகை அல்லது இரத்தம் குறைவாக இருப்பவர்கள், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











