Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
காபி குடிக்கும் போது இந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை...!
பலருக்கு காபி வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பானமாகும், காபி ஒரு பானம் என்பதை விட அது ஒரு எமோஷனாகும். பலரும் தங்கள் காலைப்பொழுதை காபியுடன் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
காபியில் சில ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதை குடிக்கும் நேரமும், அதனுடன் சாப்பிடும் பொருட்களும் அதனால் ஏற்படும் நன்மைகளைப் பாதிக்கலாம். காபி சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பாதிக்கலாம், இது சில உணவுகளின் விளைவுகளை குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். எனவே நீங்கள் காபி குடிக்கும் போது அதனுடன் சில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்
காபி இயற்கையாகவே அமிலத்தன்மை வாய்ந்தது, எனவே எந்த சிட்ரஸ் பழங்களுடனும் அதை உட்கொள்வது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) போன்ற செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். காபி மற்றும் சிட்ரஸ் பழங்களை ஒன்றாக உட்கொள்வது வயிற்றின் புறணியை எரிச்சலடையச் செய்து, இந்த நோயின் அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும்.
சிவப்பு இறைச்சி
காபி குடிப்பது குடலில் உள்ள ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. குறிப்பாக இரும்புச்சத்து உறிஞ்சுதலைப் பாதிக்கலாம். சிவப்பு இறைச்சி ஹீம் இரும்பின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும், அதாவது உங்கள் மாமிசத்துடன் காபி குடிப்பது அதன் ஆரோக்கிய நன்மைகளைக் குறைக்கும். இரத்த ஓட்டம், ஹார்மோன் உற்பத்தி மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றை ஆதரிப்பது உட்பட இரும்புச்சத்து உடலில் பல முக்கியமான வேலைகளைச் செய்கிறது.
வறுத்த உணவுகள்
நம்மில் பலரும் காபி குடிக்கும் போது அதனுடன் பஜ்ஜி, வடை, மிக்சர் மற்றும் பக்கோடா போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். வறுத்த உணவுகள் மற்றும் காபி நுகர்வை அதிகரிப்பது டிஸ்லிபிடெமியாவின் அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது, இந்த நிலை ஏற்பட்டால் இரத்த ஓட்டத்தில் கொழுப்பு அளவு அசாதாரணமாக அதிகரிக்கும்.
வறுத்த உணவுகள் உங்கள் கெட்ட கொழுப்பை உயர்த்துகின்றன, இது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் என்றும் அழைக்கப்படுகிறது, இது நமது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இது உடலில் இருக்கும் நல்ல கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
வலுவூட்டப்பட்ட தானியங்கள்
வலுவூட்டப்பட்ட தானியங்கள் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தானியங்களாகும். காலை உணவு தானியங்கள் பொதுவாக துத்தநாகத்தால் செறிவூட்டப்பட்டுள்ளன. இருப்பினும், காபி துத்தநாகத்தை உறிஞ்சுவதில் குறுக்கிடலாம், இதனால் அதன் நன்மைகள் குறைகிறது.
அதிக சோடியமுள்ள உணவுகள்
ஆய்வுகளின் படி, அதிக சோடியம் உட்கொள்ளல் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது. காபியில் இரத்த அழுத்தத்தின் அளவை நேரடியாக பாதிக்கும் சில கலவைகள் உள்ளன. எனவே, அதிக சோடியம் நிறைந்த உணவுகளுடன் காபி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நாளடைவில் இது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
பனீர்
பலர் காபியை பனீரால் செய்யப்பட்ட தின்பண்டங்களுடன் இணைக்க விரும்புகிறார்கள், ஆனால் காபியின் காஃபின் கால்சியத்தை உறிஞ்சும் உடலின் திறனை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்யும் என்பது பலருக்கு தெரியாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

