Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
இந்த விஷயம் தெரிஞ்சா இனிமே நீங்களும் ஒட்டகப்பால்லதான் டீ குடிப்பீங்க...!
பாரம்பரியமாக ஒட்டகப்பால் 5000 ஆண்டுகளாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நாடோடி மக்களின் உணவுகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, மேலும் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
வடிவேலு ஒரு படத்தில் ஒட்டகப் பாலில் ஏன் டீ போடவில்லை என்று டீக்கடைக்காரரை போட்டு அடிப்பார். ஆனால் ஒட்டகப்பால் பற்றிய உண்மைகள் தெரிந்தால் நாமும் அதைத்தான் பண்ணுவோம். ஏனெனில் ஒட்டகப்பால் ஒரு பூலோக அமிர்தமாகும். ஒட்டகப்பால் குடிப்பது பல வழிகளில் உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பால் குடிப்பது ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நமக்கு வழங்குகிறது என்பது பொதுவாக அறியப்பட்ட உண்மை. வயதாகும்போது பால் குடிப்பதை நிறுத்துகிறோம், ஏனென்றால் எருமை மற்றும் மாட்டுப் பாலில் உள்ள லாக்டோஸின் அளவை ஜீரணிப்பது கடினம். இந்த இரண்டு வகைப்பால்கள்தான் அதிக மக்களால் நுகரப்படுகிறது. ஒட்டகப்பால் இந்த பால்களில் இருந்து எப்படி வித்தியாசப்படுகிறது என்று பார்க்கலாம்.

ஒட்டகப்பால்
பாரம்பரியமாக ஒட்டகப்பால் 5000 ஆண்டுகளாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நாடோடி மக்களின் உணவுகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, மேலும் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இன்று ஒட்டகப்பாலின் முக்கியத்துவம் பற்றியும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றியும் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருவதால் இது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஒட்டகப்பாலின் அவசியம் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிக ஊட்டச்சத்துக்கள்
ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி எருமைப் பாலுக்கு பதிலாக தாவர அடிப்படையிலான பாலை அருந்தும்படி பரிந்துரைக்கிறார்கள். ஆனால் தாவர அடிப்படையிலான பாலில் புரதச்சத்து குறைவாக இருப்பது உண்மைதான். ஆய்வுகளின்படி, ஒட்டக பால் ஊட்டச்சத்து சிறந்தது மற்றும் மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சீரம் அல்புமின் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் லாக்டோஃபெரின், இம்யூனோகுளோபுலின்ஸ், லைசோசைம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பாதுகாப்பளிக்கும் பல பொருட்கள் உள்ளது. பசும்பாலை விட ஒட்டகப்பாலில் மூன்று மடங்கு அதிகம் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி
ஜிங்க் மற்றும் பாதுகாக்கும் புரோட்டின்கள் இதில் அதிகமுள்ளதால் ஒட்டகப்பால் பல நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுகிறது, தடிப்புத் தோல் அழற்சி போன்ற நோய்களைத் தடுப்பதன் மூலமும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள அழற்சியைக் குணமாக்கும், மேலும் காசநோயின் அறிகுறிகளையும் எளிதாக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு
ஒட்டகப்பால் பெப்டிடோக்ளிகான் புரதத்தைக் கொண்டுள்ளது, புற்றுநோயை எதிர்ப்பதற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும். உண்மையில், மெட்டாஸ்டாஸிஸைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாப்பை வழங்குவதாக அறியப்படுகிறது. புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைக்க ஒட்டக பால் பயன்படுத்தப்படுகிறது.

மென்மையான சருமம்
வைட்டமின் சி இருப்பதால் ஒட்டக பால் சருமத்திற்கு மிகவும் தேவையான ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. இது சருமத்தை பாதிக்கும் நச்சுக்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க இது உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் மீளுருவாக்கம் செய்யும் கொலாஜன் புரதத்தின் தொகுப்பையும் தூண்டுகிறது, இது செல்கள் மற்றும் இரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் சருமத்தை உறுதியாக்குகிறது. உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், வயதாவதை தாமதப்படுத்துவதற்கும் இது உதவுகிறது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை
லாக்டோஸ் என்பது பால் மற்றும் பிற பால் பொருட்களில் இயற்கையாகவே காணப்படும் சர்க்கரை ஆகும். லாக்டோஸை சிறிய சர்க்கரைகளாக உடைக்கும் லாக்டேஸ் என்ற நொதியை நம் உடல் உருவாக்குகிறது, இது ஜீரணத்திற்க்கு உதவுகிறது. சிலருக்கு இந்த நொதி போதுமான அளவு சுரக்காது, இதன் விளைவாக சர்க்கரையை உடைக்க முடியாது. லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள் பாலை எளிதில் ஜீரணிக்க முடியாது. ஒட்டகப் பாலில் லாக்டோஸின் அளவு மிகக் குறைவு, இதனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு கூட எளிதில் ஜீரணமாகும்.



Click it and Unblock the Notifications