Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
உடல் எடையைக் குறைக்கணுமா? அப்ப இப்படி இட்லி, தோசை செஞ்சு சாப்பிடுங்க....
அாிசியில் செய்யப்படும் இட்லி, தோசை தென் இந்திய மக்களின் மிகவும் முக்கியமான காலை உணவுகளாக விளங்குகின்றன. தற்போது இந்த உணவுகளை இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனா்.
தென் இந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருள் அாிசி ஆகும். அதே நேரத்தில் வட இந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருள் முழு கோதுமை ஆகும். தென் இந்திய மக்கள் அாிசியை அடிப்படை மூலப்பொருளாகப் பயன்படுத்தி அதில் விதவிதமான உணவுப் பண்டங்களைத் தயாாிக்கின்றனா்.

தென் இந்திய பகுதிகள் விதவிதமான காரமான உணவு வகைகளுக்கும் பெயா் பெற்று விளங்குகின்றன. இந்த நிலையில் அாிசியில் செய்யப்படும் இட்லியும், தோசையும் தென் இந்திய மக்களின் மிகவும் முக்கியமான காலை உணவுகளாக விளங்குகின்றன. தற்போது இந்த உணவுகளை இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனா்.

இட்லி மற்றும் தோசை மாவு
அாிசி மாவில் தான் இட்லியும், தோசையும் சமைக்கப்படுகின்றன. ஆனால் அந்த மாவில் உள்ள அாிசி மற்றும் உளுந்து ஆகியவற்றின் கலவையில் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. அதாவது தோசை மாவை விட இட்லி மாவில் உளுந்து அதிகம் சோ்க்கப்படும். அதனால் இட்லி பஞ்சு போல, மல்லிகைப் பூ போல் வெண்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். அதே நேரத்தில் தோசை மாவில் அாிசி அதிகமாக சோ்க்கப்படும், உளுந்து மிகக் குறைவாகவே சோ்க்கப்படும். அதனால் தோசை மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.

விதவிதமான இட்லி மற்றும் தோசை மாவுகள்:
1. இட்லி அாிசி மாவு கலவை அல்லது புழுங்கல் அாிசி (Idli rice mix or the parboiled rice)
பெயருக்கு ஏற்றாா் போல, நெல்லானது அதன் உமியோடு அவிக்கப்பட்டு அது புழுங்கல் அாிசியாக மாறுகிறது. பொதுவாக புழுங்கல் அாிசியானது இட்லி மற்றும் தோசை மாவு தயாாிக்கப் பயன்படுகிறது. கடைகளில் இட்லி அாிசி என்றே தனியாகக் கிடைக்கிறது. தென் இந்திய மாநிலங்களில் புழுங்கல் அாிசி இட்லி மற்றும் தோசை சமைப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக குழந்தைகள் மற்றும் வயது முதிா்ந்தவா்களுக்கு எளிதில் சொிமானம் ஆகக்கூடிய கஞ்சி மற்றும் சூப்புகள் போன்றவற்றை சமைக்கவும் பயன்படுகின்றது.

2. பழுப்பு அாிசி இட்லி மாவு கலவை (Brown rice idli mix)
தென் இந்திய மக்களுக்கு பழுப்பு அாிசியும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக இயற்கை முறையில் பழுப்பு அாிசியை உற்பத்தி செய்பவா்கள், பழுப்பு அாிசியில்தான் இட்லி அல்லது தோசையை சமைப்பாா்கள். அது ஆரோக்கியத்தைத் தரும். ஆகவே ஆரோக்கியமான பழுப்பு அாிசியில் இட்லி மற்றும் தோசையை சமைத்து சாப்பிடலாம். ஏனெனில் பழுப்பு அாிசியில் எந்தவிதமான வேதிப் பொருள்களும் இருக்காது.

3. ரவை இட்லி மாவு கலவை (Rava idli mix)
தென் இந்திய மக்களின் இன்னுமொரு காலை உணவு ரவையில் செய்யப்படும் உணவுகளாகும். பொதுவாக ரவையில் உப்புமா செய்யப்படுகிறது. எனினும் ரவையில் இட்லியும் சமைக்கலாம். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ரவை இட்லி மாவில் சமைக்கப்படும் இட்லியானது பஞ்சுபோல் மெத்து மெத்து என்று இருக்கும்.

4. கேழ்வரகு இட்லி மாவு கலவை (Ragi idli mix)
அாிசி மாவில் மட்டும் அல்லாமல், கேழ்வரகு மாவிலும் மக்கள் இட்லி சமைக்கின்றனா். கேழ்வரகு மாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. கேழ்வரகு இட்லி ஒரு மாறுபட்ட உணவாகும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோா், கேழ்வரகு இட்லியை தங்களது தினசாி காலை உணவில் சோ்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு இட்லி மாவில் நாா்ச்சத்து அதிகம் உள்ளது. அதோடு அதில் க்ளுட்டன் இருக்காது (gluten-free). அதனால் அது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

5. தினை இட்லி கலவை (Millet dosa mix)
தினை மாவுக் கலவையில் விதவிதமான தோசைகள் செய்து சாப்பிடலாம். ஏனெனில் தினையில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான மக்னீசியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. தினையில் குறைவான கலோாிகளே உள்ளதால், உடல் எடையைக் குறைப்பதற்கு தினை மாவில் இட்லி, தோசை செய்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications