Latest Updates
-
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள்!
ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள், அவ்வப்போது உடலை சுத்தம் செய்யும் செயலை மேற்கொள்ள வேண்டும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு காய்கறிகள், பழங்கள், சாறுகள் என்று பல உள்ளன.
உடல் சுத்தமாக இருந்தால் தான் உள்ளுறுப்புக்கள் பிரச்சனைகளின்றி ஆரோக்கியமாக செயல்பட முடியும். பொதுவாக உடலில் ஏராளமான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளின் போது உடலுக்குள் பல்வேறு வகையான நச்சுக்கள் உருவாகும். அதோடு மாசடைந்த சுற்றுச்சூழலில் நாம் வாழ்க்கையை வாழ்ந்து வருவதுடன், ஆரோக்கியமற்ற சில உணவுகளினாலும் உடலினுள் நச்சுக்கள் சேர்ந்து தேங்க ஆரம்பிக்கின்றன. ஆகவே ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள், அவ்வப்போது உடலை சுத்தம் செய்யும் செயலை மேற்கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு காய்கறிகள், பழங்கள், சாறுகள் என்று பல உள்ளன. அதில் மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக்கூடிய ஓர் எளிய வழி தான் பழங்களை உணவில் சேர்ப்பது. பழங்கள் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களின் கிடங்கு. அதோடு இதில் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் மிகவும் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
கீழே உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் பழங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்
வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களைத் தவிர, ஆப்பிளில் பைட்டோகெமிக்கல் மற்றும் பெக்டின் உள்ளது. இவை அனைத்தும் உடலை சுத்தம் செய்ய உதவுகின்றன. இதில் உள்ள பெக்டின் உடலில் உள்ள கெமிக்கல் கொண்ட உணவுச் சேர்க்கைகள் மற்றும் உலோகங்களை வெளியேற்றுகின்றன. ஆப்பிளில் உள்ள மாலிக் மற்றும் டார்டாரிக் அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது. அதுவும் ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. இதனால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.

எலுமிச்சை
சிட்ரஸ் பழமான எலுமிச்சை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் என்பது பலருக்கும் தெரியும். அனைத்து சிட்ரஸ் பழங்களிலுமே வைட்டமின் சி அதிகம் உள்ளது. எலுமிச்சை உடலை சுத்தம் செய்வதில் சிறந்தது மட்டுமின்றி, வாய்வு பிரச்சனைகளை நீக்கவும் உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.

பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஒரு கப் ப்ளாக்பெர்ரி பழத்தில் 7.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. பெர்ரி பழங்களை சாப்பிடும் போது, அது உடலில் ப்யூட்ரேட் என்னும் கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கு உதவி, எடை இழப்பிற்கு உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பெர்ரி பழங்களை சாப்பிடுவதற்கான சிறந்த வழி பெர்ரிப் பழங்களை நசுக்கி நீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பெர்ரி பழங்களை அப்படியே சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம்
அன்னாசியில் புரோமலைன் அதிகம் உள்ளது. இது புரோட்டீனை உடைத்தெறிய உதவி புரிந்து ஜீரணிக்க உதவி புரிகிறது. மேலும் இது உடலில் உள்ள அழற்சி/வீக்கத்தைக் குறைக்க உதவி, ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் உட்காயங்கள் விரைவில் குணமாகவும் செய்யும். அன்னாசிப் பழங்களை எப்போதுமே வெட்டியவுடன் சாப்பிடுவதே சிறந்தது. டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் அன்னாசியில், புரோமலைன் என்னும் நொதி இருக்காது. ஆகவே இந்த மாதிரி எப்போதும் அன்னாசி பழங்களை சாப்பிடாதீர்கள்.

பப்பாளி
பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, பிற ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பொதுவான சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக போராட உதவுகிறது. பப்பாளி பழத்தில் காணப்படும் பாப்பைன் என்ற நொதி புரோட்டீனை உடைத்தெறியவும், செரிமானத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோயைத் தடுக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பப்பாளியை எப்போதுமே வெட்டியவுடன் சாப்பிடுவதே நல்லது.

மாதுளை
மாதுளையை சாப்பிடுவதற்கான சிறந்த வழி, அதை ஜூஸ் வடிவில் சாப்பிடுவது தான். ஏனெனில் விதைகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். மாதுளையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி மாதுளை சாற்றினை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும். அதோடு, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக்க உதவும் அற்புத மருந்தாவும் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications