Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
அதிக கஷ்டப்படாம உடல் எடையைக் குறைக்கணுமா? இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...
பொதுவாக கலோரி குறைவான உணவுகள் விரைவில் பசியை உண்டாக்கிவிட்டு, அதிக உணவை உண்ணும் ஆர்வத்தைத் தூண்டிவிடும். ஆனால் சில குறைவான கலோரிகளைக் கொண்ட உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தும்.
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கும் போது, எதை உண்பது மற்றும் எதை உண்ணக்கூடாது என்று அடிக்கடி குழப்பமடைகிறீர்களா? உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள், உணவு விஷயத்தில் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அது என்னவெனில், எடையைக் குறைக்க வேண்டுமானால், கலோரி குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இந்த வகை உணவுகளை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும்.

பொதுவாக கலோரி குறைவான உணவுகள் விரைவில் பசியை உண்டாக்கிவிட்டு, அதிக உணவை உண்ணும் ஆர்வத்தைத் தூண்டிவிடும். ஆனால் சில குறைவான கலோரிகளைக் கொண்ட உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தும். கீழே ஒருவரது எடை இழப்பு நோக்கத்தை அழிக்காமல் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் சில கலோரி குறைவான உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ்
நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஓட்ஸ், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். சுமார் அரை கப் ஓட்ஸ் 148 கலோரிகளைக் கொண்டிருக்கிறது மற்றும் அவை நார்ச்சத்தால் அதிகம் நிரப்பப்பட்டுள்ளது. எனவே இதை எடை இழக்கும் முயற்சியில் உள்ள ஒருவர் சாப்பிட்டால், அது வயிறு நிறைந்த உணர்வைத் தூண்டுவதோடு, அதிகளவு உணவு உண்பதையும் கட்டுப்படுத்துகிறது.

சூப்
சூப்புகள் வயிறு நிறைந்த உணர்வைத் தூண்டும். ஆய்வுகளின் படி, உணவுக்கு முன் சூப்பைக் குடிப்பது உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்க கணிசமாக உதவுகிறது மற்றும் பசியைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, சூப்புகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது உடலின் ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.

சியா விதைகள்
சியா விதைகள் பானங்களுடன் சேர்த்து உட்கொள்ள மிகவும் அற்புதமாக இருக்கும். சியா விதைகளில் கலோரிகள் மற்றும் நார்ச்சத்து குறைவாக இருந்தாலும், ஆன்டிஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான செயல்பாட்டை தாமதமாக்க உதவி புரிந்து, பசி வேதனையைக் குறைக்க உதவுகிறது.

முட்டை
முட்டையில் புரோட்டீன்கள் அதிகளவில் உள்ளது. ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டீன் மற்றும் 72 கலோரிகள் உள்ளன. அதிக ஊட்டச்சத்துக்களை முட்டை கொண்டுள்ளதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். ஆய்வுகளின் படி, காலை வேளையில் முட்டைகளை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, பசி வேதனையைக் குறைக்கும்.

பெர்ரி
பெர்ரிக்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். ஒரு கையளவு பெர்ரி பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதுவும் 100 கிராம் ப்ளூபெர்ரி பழத்தில் சுமார் 57 கலோரிகள் மற்றும் 2.4 கிராம் புரோட்டீன்கள் உள்ளன. ங

பாப்கார்ன்
பாப்கார்ன் பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் சுவையான ஸ்நாக்ஸ். அதோடு பாப்கார்னில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது. இருப்பிகும், இதில் வெண்ணெய் அல்லது பிற கொழுப்புள்ள பொருட்களை சேர்க்கும் போது, அவற்றின் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆகவே கலோரி குறைவான ஸ்நாக்ஸ் வேண்டுமானால், வீட்டிலேயே பாப்கார்ன் செய்து சாப்பிடுங்கள்.

மீன்
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. நீங்கள் கலோரி குறைவான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவைத் தேடிக் கொண்டிருந்தால், மீன் அதற்கு சிறந்த ஒன்றாக இருக்கும். மீனில் நிறைந்துள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தான், வயிற்றை நிரப்பி, வயிறு நிறைந்த ஒரு திருப்திகரமான உணர்வைத் தருகிறது.

கிரேக்க யோகர்ட்
புரோட்டீன் அதிகம் நிறைந்த மற்றொரு ஆரோக்கியமான உணவுப் பொருள்தான் கிரேக்க யோகர்ட். இது வயிறு நிறைந்த திருப்தியைத் தருவதோடு, அதிகளவு உணவு உண்பதைக் கட்டுப்படுத்துகிறது. 100 கிராம்பு கிரேக்க யோகர்ட்டில் 59 கலோரிகள் மற்றும் பத்து கிராம் புரோட்டீன் உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதோடு, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. அதோடு இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதிலும் சிறந்தது.

பன்னீர்
சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இதில் ஆரோக்கியமான பால் கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. கொழுப்பு குறைவான காட்டேஜ் சீஸில் 28 கிராம் புரோட்டீன் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.



Click it and Unblock the Notifications