Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 14 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 15 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
3 லோக்சபா, 7 சட்டசபை இடைத்தேர்தல்- விறுவிறு வாக்கு எண்ணிக்கை -பாஜக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி டென்ஷன்!
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பலவீனமான எலும்புகளை வலுவாக்க வேண்டுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க...
நமது உடலுக்கு நல்ல வடிவமைப்பை எலும்புகள் கொடுக்கின்றன. இத்தகைய எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இந்த எலும்புகள் வயது அதிகரிக்கும் போது அதன் வலிமையை இழந்து, பல்வேறு எலும்பு தொடர்பான சிக்கல்களை சந்திக்க வைக்கின்றன. சொல்லப்போனால் இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மூட்டு பிரச்சனைகள் உள்ளன. இந்த மூட்டு பிரச்சனைகளுக்கு வயது ஒரு காரணமாக இருந்தாலும், போதுமான ஊட்டச்சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் இருப்பதும் தான்.
ஆகவே எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள, அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். குறிப்பாக எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும். இதில் கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதுவும் கோடையில் பழங்களை தான் அதிகம் சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். கீழே பலவீனமான எலும்புகளை பலப்படுத்த உதவும் சில பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய இரண்டும் உள்ளன. எனவே இப்பழம் எலும்புகளின் வலிமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆரஞ்சு பழத்தை ஒருவர் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழம் செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த மக்னீசியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்கும்.

அன்னாசி
அன்னாசி பழம் உடலுக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியத்தை நேரடியாக வழங்காவிட்டாலும், இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், உடலில் அமில அளவை நடுநிலையாக்குகிறது மற்றும் கால்சியம் இழப்பைத் தடுக்கிறது. மேலும் அன்னாசியில் வைட்டமின் ஏ நல்ல வளமான அளவில் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஏராளமான ஆராக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஏனெனில் இப்பழத்தில் கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை எலும்பு கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது.

பப்பாளி
இந்த வெப்பமண்டல பழத்தில் கால்சியம் அதிகமாக உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 20 மிகி கால்சியம் கிடைக்கிறது. ஆகவே இப்பழத்தை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்கலாம்.

கிவி
கிவி பழத்திலும் கால்சியம் அதிகம் உள்ளது. ஒரு கிவி பழத்தில் கிட்டத்தட்ட 60 மிகி கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கவும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமலும் தடுக்கிறது. எனவே இப்பழத்தை கண்டால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

ஆப்பிள்
ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அதனால் தான் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உங்கள் எலும்புகளை வலுவாக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.