Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஆண்களின் கருவளம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள்!
விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை ஆண்கள் அதிகம் உட்கொண்டு வருவதன் மூலம், கருத்தரிப்பதில் சந்திக்கும் பிரச்சனையை சரிசெய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Fruits To Increase Male Fertility: இன்றைய காலகட்டத்தில் நிறைய திருமணமான தம்பதிகள் குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஒரு தம்பதியால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லையென்றால், அதற்கு பெண்ணின் உடலில் பிரச்சனை இருக்கலாம் அல்லது ஆணின் உடலில் பிரச்சனை இருக்கலாம்.

அதுவும் தற்போது நிறைய ஆண்கள் விந்தணு குறைபாட்டை சந்திக்கிறார்கள். விந்தணு குறைபாடானது ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன. ஆனால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை எளிய உணவு மாற்றங்கள் அல்லது கருவளத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.
ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக, தரமாக, நல்ல அமைப்பில் இல்லாமல் இருந்தால், அந்த ஆண்களால் தனது துணையை கருத்தரிக்க வைக்க முடியாமல் போகும். இந்நிலையில் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை ஆண்கள் அதிகம் உட்கொண்டு வருவதன் மூலம், இப்பிரச்சனையை சரிசெய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் ஒருசில பழங்கள் ஆண்களின் கருவளத்தை மேம்படுத்த உதவுகின்றன. இப்போது அந்த பழங்களைக் காண்போம்.

பெர்ரி
பெர்ரி பழங்களில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளான க்யூயர்சிடின் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்றவை காணப்படுகின்றன. இவை விந்தணுக்களின் ஆரோக்கியம், தரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகின்றன. எனவே தினமும் ஒரு கையளவு ஏதாவது பெர்ரி பழங்களை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

மாதுளை
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இதனால் மாதுளையை ஆண்கள் சாப்பிடும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, பாலியல் ஆசை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு தினமும் ஒரு மாதுளையை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவில் உட்கொள்ளலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் புரோமிலைன் என்னும் நொதி காணப்படுகிறது. இது தான் ஆண்குறியில் ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வாழைப்பழத்தில் வைட்டமின்களான ஏ, பி1 மற்றும் சி போன்றவை உள்ளது. இவை விந்தணு உற்பத்திக்கு இன்றியமையாத சத்துக்களாகும். எனவே ஆண்கள் தங்களின் கருவளம் சிறப்பாக இருக்க, தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி-யானது உடலில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, செல் சேதத்தைத் தடுப்பது மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே விந்தணு குறைபாட்டை சந்திக்கும் ஆண்கள் தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட நற்பலன் கிடைக்கும்.

கிவி
புளிப்புச் சுவையைக் கொண்ட கிவி பழத்தில் மற்ற பழங்களை விட அதிகளவில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளன. இந்த இரண்டு வைட்டமின்களுமே ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தையும் தரத்தையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆகவே கருவுறுதலில் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் கிவி பழத்தை அடிக்கடி சாப்பிட, ஒரு நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

கொய்யாப்பழம்
விலை குறைவில் கிடைக்கும் கொய்யாப்பழத்தில் கணிசமான அளவில் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இது விந்தணுக்களின் இயக்கம், எண்ணிக்கை மற்றும் அமைப்பு போன்றவற்றை மேம்படுத்த உதவி புரிகின்றன. எனவே விந்தணு தொடர்பான பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட விரைவில் அப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் போன்றவை காணப்படுகின்றன. இவை ஆண்களின் விந்தணு தரத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இந்த விதைகள் டெஸ்டோஸ்டிரோன் அளவு, விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அமைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே மலட்டுத்தன்மை பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் பூசணி விதைகளை தினசரி உணவில் சேர்க்க நல்ல பலனைக் காணலாம்.

வால்நட்ஸ்
மூளை போன்ற தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. 21 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் தினமும் 75 கிராம் வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் அமைப்பு, எண்ணிக்கை மற்றும் இயக்கம் போன்றவை சிறப்பாக இருக்கும்.

தக்காளி
தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளன. இந்த லைகோபைன் விந்தணுக்களின் இயக்கம், அமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தக்காளி ஜூஸை விந்தணு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் தினசரி உணவில் சேர்த்து வர நல்ல பலன் கிடைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications