Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
பெண்களே! உடலுறவில் ஆர்வம் குறையுதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.. படுக்கையில் சிறப்பா செயல்படுவீங்க...
பெண்கள் தங்களின் பாலியல் ஆசையை அதிகரிக்க ஒருசில உணவுகளை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாலுணர்ச்சி அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
பெண்களே! உங்களால் உங்கள் துணையுடன் பல வாரங்களாக உடலுறவு கொள்வதில் விருப்பம் இல்லையா? அப்படியானால் உங்களுக்கு செக்ஸ் ஆசை குறைந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவருக்கு செக்ஸின் மீதான ஆசை குறைய பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், டென்சன், உணவு முறை, போதுமான தூக்கம் இல்லாமை மற்றும் சில மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

திருமணமான தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டியது முக்கியம். அதில் பிரச்சனை இருந்தால், அதுவே சில சமயங்களில் திருமண பந்தத்தில் விரிசலை ஏற்படுத்திவிடும். ஆண்களை விட பெண்களுக்கு தான் பாலியல் ஆசை வேகமாக குறையும். எனவே பெண்கள் தங்களின் பாலியல் ஆசையை அதிகரிக்க ஒருசில உணவுகளை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாலுணர்ச்சி அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

நட்ஸ்
நட்ஸ்கள் பெண்களின் பாலியல் ஆசையை மட்டுமின்றி, ஆண்களின் பாலுணர்ச்சியையும் அதிகரிக்கும். நட்ஸில் உள்ள அமினோ அமிலமான எல்-அர்ஜினைன், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு அளவை கணிசமாக அதிகரித்து, பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுறவில் சிறப்பாக ஈடுபட உதவுகிறது. எனவே பாலுணர்ச்சி அதிகரிக்க வேண்டுமானால் தினமும் ஒரு கையளவு முந்திரி, வால்நட்ஸ் மற்றும் பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுங்கள்.

அவகேடோ
அவகேடோ பழம் நல்ல சுவையான பழம் மட்டுமின்றி, பெண்களுக்கு பாலுணர்ச்சியை அதிகரிக்க உதவும் அற்புதமான பழமும் கூட. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் பெண்களின் பாலுணர்ச்சியை மேம்படுத்தி, உடலுறவின் போது சிறப்பாக செயல்படத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. எனவே படுக்கையில் சிறப்பாக செயல்பட விரும்பினால் ஒரு டம்ளர் அவகேடோ மில்க் ஷேக்கைக் குடியுங்கள்.

டார்க் சாக்லேட்
பெண்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் தான் சாக்லேட். அதுவும் டார்க் சாக்லேட்டை உட்கொண்டால், அது உடலில் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் ஃபைனிலெதிலமைன் மற்றும் செரோடோனினை அதிகம் வெளியிடச் செய்கிறது. அதோடு டார்க் சாக்லேட்டில் ட்ரிப்டோபேன் வளமான அளவில் உள்ளது. இந்த ட்ரிப்டோபேன் தான் செரடோனினாக மாற்றப்பட்டு பாலுணர்ச்சியை மேம்படுத்தி, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி ஆரோக்கியமான காய்கறி மட்டுமின்றி, பெண்களின் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் அற்புதமான காய்கறியும் கூட. இதில் உள்ள வைட்டமின் சி, பெண்களின் பாலுணர்ச்சியை அதிகரிப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கின்றன. எனவே செக்ஸில் ஆர்வம் குறைந்த பெண்கள் ப்ராக்கோலியை சாப்பிட, அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அத்திப்பழம்
உடலுறவில் ஆர்வம் குறைந்த பெண்கள், உலர்ந்த அத்திப்பழத்தை தினசரி உணவில் சேர்த்து வந்தால், பாலுணர்ச்சி அதிகரித்து, படுக்கையில் துணையுடன் சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் இந்த பழத்தில் பாலுணர்ச்சியை மேம்படுத்தும் அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் இது கருவளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக இந்த அத்திப்பழத்தை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

வெந்தயம்
வெந்தயம் உடலில் ஹார்மோன் சமநிலையை உருவாக்குவதன் மூலமும், பாலுணர்ச்சியை அதிகரிப்பதன் மூலமும் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது மாதவிடாய் கால பிடிப்புகளில் இந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இருப்பினும், அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது இரத்த சர்க்கரை அளவை குறைத்துவிடும் மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலை உண்டாக்கும்.

குங்குமப்பூ
குங்குமப்பூ சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் ஒரு பொருளாக மட்டுமே நிறைய பேருக்கு தெரியும். ஆனால் குங்குமப்பூ பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் ஒரு அற்புதமான பொருளாக குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதற்கு குங்குமப்பூவை துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் பால் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











