Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஆண்களே! புரோஸ்டேட் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை ஒருசில சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம், தினமும் 30-45 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலமும் தவிர்க்கலாம்.
ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கின்றன. புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் வால்நட் அளவிலான சிறிய சுரப்பியாகும். இது தான் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. இது சிறுநீர்ப்பைக்கு கீழே மற்றும் மலக்குடலின் முன்புறத்தில் அமைந்துள்ளது. வயது அதிகரிக்கும் போது இந்த புரோஸ்டேட் சுரப்பியில் ஆண்கள் பிரச்சனையை சந்திக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் பிரச்சனையைப் பற்றி அவ்வளவாக தெரிவதில்லை.

சில வகையான புரோஸ்டேட் புற்றுநோய்கள் மெதுவாக வளரும், இன்னும் சில வேகமாக வளரும். ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால், அதை எளிதில் குணப்படுத்தலாம். புரோஸ்டேட் புற்றுநோய் தீவிர நிலையில் இருந்தால், அது சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீர் அல்லது விந்துவில் இரத்தம், எலும்பு வலி, விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும்.
ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு ஒருசில சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம், தினமும் 30-45 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலமும் தவிர்க்கலாம். இப்போது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க ஆண்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் குறித்து காண்போம். அந்த உணவுகளை தினசரி உணவில் அதிகம் சேர்த்து வந்தால், புரோஸ்டேட் புற்றுநோயைத் தவிர்க்கலாம்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலுக்கு ஸ்டாமினாவை வழங்குகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதயத்தை பாதுகாக்கிறது. கூடுதலாக, இந்த பீட்ரூட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவுகிறது.

பூசணி விதைகள்
ஜிங்க் ஆண்களின் கருவளத்தை மேம்படுத்துவதோடு, புரோஸ்டேட் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புரோஸ்டேட் சுரப்பின் வழக்கமான செயல்பாட்டிற்கு போதுமான அளவு ஜிங்க் சத்து உடலில் இருக்க வேண்டும். இந்த ஜிங்க் பூசணி விதைகளில் அதிகம் உள்ளது. இது தவிர இந்த விதைகளில் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளன.

பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. குறிப்பாக ஸ்ட்ராப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது சிறுநீர் கழிப்பது மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியாவின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

கொழுப்புள்ள மீன்கள்
கொழுப்புள்ள மீன்களான டூனா, சால்மன் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியமான சத்தாகும். கொழுப்புள்ள மீன்களில் உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளன.

முட்டைகள்
ஆண்களின் வயது அதிகரிக்கும் போது, அவர்களின் தசைகளின் அடர்த்தியும் குறையும். முட்டைகளில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளன. இந்த புரோட்டீன்கள் தசைகளின் அடர்த்தியை தக்க வைக்கும். இது தவிர இதில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இந்த புரோட்டீனில் தான் கோலைனின் மூலமாகும். இது வயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதை ஊக்குவிக்கும் மரபணுக்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

சோயா
சோயா உணவுகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. சோயாவில் காணப்படும் ஐசோஃப்ளேவோன்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சோயா பொருட்களை உணவில் அடிக்கடி சேர்ப்பதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
குறிப்பு: வயது அதிகரிக்கும் போது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் இருப்பதால், 40 வயதிற்கு மேல் ஆண்கள் வழக்கமான உடல் பரிசோதனையை செய்வதோடு, மது அருந்துவது, புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள ஆரம்பித்தால், புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications