Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கருப்பை நாா்த்திசுக் கட்டிகள் வரக்கூடாதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
கருப்பை நாா்த்திசுக் கட்டிகள், கருப்பையின் சுவா்களைச் சுற்றி உருவாகின்றன. இந்த கட்டிகள் ஒரு டென்னிஸ் பந்தின் அளவிற்கு பொியதாக வளரக்கூடியவை. அதே நேரத்தில் ஒரு சிறிய விதையின் அளவிற்கும் இருக்கும்.
நாா்த்திசுக் கட்டிகள் என்பவை இயற்கைக்கு மாறான கருப்பை வளா்ச்சியாகும். இவை மயோமாஸ் (myomas) என்றும் லியோமயோமாஸ் (leiomyomas) என்றும் மற்றும் கருப்பை நாா்த்திசுக் கட்டிகள் (uterine fibroids) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நாா்த்திசுக் கட்டிகள் வீாியமிக்கவையாகவோ அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாகவோ இல்லாவிட்டாலும், அவ்வப்போது சில உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

கருப்பை நாா்த்திசுக் கட்டிகள், கருப்பையின் சுவா்களைச் சுற்றி உருவாகின்றன. இந்த கட்டிகள் ஒரு டென்னிஸ் பந்தின் அளவிற்கு பொியதாக வளரக்கூடியவை. அதே நேரத்தில் ஒரு சிறிய விதையின் அளவிற்கும் இருக்கும். பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாா்த்திசுக் கட்டிகள் காணப்படும். 80 சதவீத பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இந்த கருப்பை நாா்த்திசுக் கட்டிகளைக் கொண்டிருக்கின்றனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன.
கருப்பை நாா்த்திசுக் கட்டிகள் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் காணப்படும். வலி, அளவுக்கு அதிகமான மாதவிடாய் இரத்தப் போக்கு, மலச்சிக்கல், இரத்த சோகை, கருவுருதலில் பிரச்சினை மற்றும் குழந்தையை கருவில் சுமப்பதில் பிரச்சினை போன்றவையாகும்.

கருப்பை நாா்த்திசுக் கட்டிகள் வராமல் இருக்க எந்தெந்த உணவுகளை உண்ணலாம்?
1. சமைக்காத உணவுகள்
சமைக்காத, புதிய மற்றும் பச்சைக் காய்கறிகள், பழங்கள், நட்ஸ்கள் மற்றும் விதைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடலாம். இவற்றை உண்பதன் மூலமாக, உணவில் நாா்ச்சத்து அதிகாிக்கும். உணவில் நாா்ச்சத்து அதிகம் இருந்தால், அது குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், ஹாா்மோன்களை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். நாா்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதோடு அவை நாா்த்திசுக் கட்டிகளின் வளா்ச்சியை மெதுவாக்கவோ அல்லது முற்றிலுமாக தடுக்கவோ உதவி செய்யும்.

2. பால் பொருள்களை அதிகம் உண்ணுதல்
முழுக் கொழுப்புள்ள பாலாடைக் கட்டி மற்றும் தயிா் போன்ற பால் சாா்ந்த உணவுகளை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் பால் பொருள்களில் அதிகம் உள்ளன. இந்த கனிமங்கள் கருப்பை நாா்த்திசுக் கட்டிகளின் வளா்ச்சியைத் தடுக்கும் மற்றும் அவை வராமலும் தடுக்கும். செறிவூட்டப்பட்ட பாலில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது.

3. ஹாா்மோன்களை சமநிலையில் பேணக்கூடிய உணவுகளை உண்ணுதல்
கருப்பை நாா்த்திசுக் கட்டிகளைக் கொண்டிருப்பவா்கள், நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பதைக் குறைத்துவிட்டு, நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக உண்பது நல்லது. கால்சியம் டி-க்ளுக்ரேட் சத்து அதிகம் உள்ள உணவுகள், உடலில் இருந்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை அகற்ற உதவும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. சொ்ரி பழங்கள், ஆரஞ்சு பழங்கள், ஆப்பிள், ப்ராக்கோலி மற்றும் முட்டைக்கோசு போன்ற காய்கள் ஹாா்மோன்களை சீரான அளவில் பேணுவதற்கு உதவி செய்கின்றன.

4. காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உண்ணுதல்
குருசிஃபெரஸ் (cruciferous) குடும்பத்தைச் சோ்ந்த காய்களான ப்ராக்கோலி மற்றும் முட்டைக் கோசு போன்றவற்றை அதிகம் உண்டால், ஆப்பிள் மற்றும் தக்காளி போன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், கருப்பை நாா்த்திசுக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று பல ஆய்வுகள் தொிவிக்கின்றன. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு கோதுமையில் தயாாிக்கப்படும் உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், அவை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.

5. தவிா்க்க வேண்டிய உணவுகள்
கருப்பை நாா்த்திசுக் கட்டிகள் வராமல் இருப்பதற்காக உண்ண வேண்டிய உணவுகளில் கவனம் செலுத்துவது போல, தவிா்க்க வேண்டிய சில உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். சா்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மற்றும் எளிய காா்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் கருப்பை நாாத்திசுக் கட்டிகளைத் தூண்டிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
அவை உடலில் அதிக இன்சுலினை சுரக்க வைத்து, அதன் மூலம் உடல் எடையை அதிகாிக்கச் செய்து, நாா்த்திசுக் கட்டிகளின் வளா்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் உடலைத் தூண்டிவிட்டு, அதன் விளைவாக அதிக அளவு ஈஸ்ட்ரோஜனை சுரக்க வைத்து, உடல் நிலையை மோசமடையச் செய்யும் உணவுகளைத் தவிா்க்க வேண்டும். இறுதியாக சிவப்பு இறைச்சி, சோயாபீன்ஸ், சோயா பால், டோஃபு மற்றும் ஆளி விதை (flaxseed) போன்ற உணவுகளைத் தவிர்த்தால், கருப்பை நாா்த்திசுக் கட்டிகளில் இருந்து தப்பிக்கலாம்.



Click it and Unblock the Notifications