Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
கல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு அவ்வப்போது கல்லீரலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற வேண்டும்.
பொதுவாக உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமான விஷயம். அதிலும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு என்பது சவால் நிறைந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய உறுப்பு. இது உடலில் நூற்றுக்கணக்கான முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. அதில் ஒன்று தான் கொழுப்பைக் கரைத்து உடலை ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் வைத்துக் கொள்வது.

கல்லீரலின் முதன்மையான வேலையே உடலின் மற்ற உறுப்புக்களுக்கு இரத்தம் செல்லும் முன் செரிமான பாதையில் இருந்து வரும் இரத்தத்தை வடிகட்டுவதாகும். அதோடு கல்லீரல் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உடைத்தெறித்து வெளியேற்றுவதும் கூட. கல்லீரல் பித்தப்பையில் பித்தநீரை சுரந்து சேமிக்கவும், செரிமானத்தின் போது சிறு குடலில் உள்ள கொழுப்புக்களை உடைத்தெறிந்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

கல்லீரல்
உடலிலேயே கல்லீரல் தான் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்பு. ஆகவே இதை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு அவ்வப்போது கல்லீரலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற வேண்டும். கல்லீரலை ஒருவர் சுத்தம் செய்வதால், அது உடல் எடையையும் குறைக்க உதவும்.
இப்போது கல்லீரலை சுத்தம் செய்து, நோய்கள் தாக்காமல் பாதுகாக்க உதவும் உணவுகளைக் காண்போம். இந்த உணவுகளை உட்கொண்டால், கல்லீரல் சுத்தமாவதோடு, உடல் எடையும் குறையும்.

ஆப்பிள்
ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் இருந்து கொலஸ்ட்ரால் மற்றும் நச்சுக்களை நீக்க உதவி புரிந்து, கல்லீரலுக்கு நன்மை புரியும். அதோடு, ஆப்பிளில் உள்ள இதர உட்பொருட்கள், செரிமான பாதைகளில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வெளியேற்றி, சுத்தம் செய்யவும் உதவுகிறது.

பீட்ரூட் மற்றும் கேரட்
கல்லீரலை சுத்தம் செய்யும் சிறப்பான எளிய வழிகளுள் ஒன்று தான் பீட்ரூட் மற்றும் கேரட்டை சாப்பிடுவது. இவற்றில் தாவர வகை ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, மேம்படுத்தவும் செய்யும்.

பப்பாளி
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், உணவுகளை முறையாக செரிமானம் செய்து, உடலின் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மேலும் பப்பாளி உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும். அதோடு, பப்பாளியின் விதைகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், கல்லீரல் சிரோசிஸை குணப்படுத்த உதவும்.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் கல்லீரலை இயற்கையாக சுத்தம் செய்யும் உணவுகளுள் ஒன்று. முட்டைக்கோஸின் குளுக்கோசினோலேட்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஐசோதியோசயனேட்டுகள், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும் நச்சுத்தன்மையற்ற நொதிகளை உருவாக்குகின்றன. இந்த உட்பொருட்கள் குறிப்பிட்ட புற்றுநோய்களான சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து பாதுகாப்பளிக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை உடலை சுத்தம் செய்யும் மற்றும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் மிகச் சிறப்பான உணவுப் பொருள். பல மாயங்களை உடலில் நிகழ்த்தும் எலுமிச்சையில் வைட்டமின் சி, ப்ளேவோனாய்டுகள், மாலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற செரிமானத்திற்கு தேவையான அனைத்து சத்தும் நிறைந்துள்ளது. கூடுதலாக, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தொண்டை மற்றும் சுவாச பிரச்சனைகளை சரிசெய்யவும் எலுமிச்சை உதவும்.



Click it and Unblock the Notifications