Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
மாம்பழம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா? மாம்பழத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா?
கோடைகாலம் பல சோதனைகளை கொடுத்தாலும் அதிலிருக்கும் ஒரே ஆறுதல் மாம்பழம்தான். பல மாதங்கள் காத்திருந்து இந்த பருவகால பழத்தை சாப்பிடுவது உண்மையில் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
கோடைகாலம் வந்துவிட்டது, அப்படியென்றால் மாம்பழத்தின் சீசன் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். கோடைகாலம் பல சோதனைகளை கொடுத்தாலும் அதிலிருக்கும் ஒரே ஆறுதல் மாம்பழம்தான். பல மாதங்கள் காத்திருந்து இந்த பருவகால பழத்தை சாப்பிடுவது உண்மையில் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் அதேசமயம் அதனால் நமது ஆரோக்கியம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பூக்கும் தாவரமான மங்கிஃபெரா சேர்ந்த மாம்பழங்கள் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. இந்த பழத்தை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும், அதைத் தொடர்ந்து சீனாவும் தாய்லாந்தும் உள்ளன. பழங்களின் ராஜா அதன் சர்க்கரை உறுப்புக்கு பெயர் பெற்றது மட்டுமல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஆரோக்கியமாகவும் உள்ளது. அதன் ஆடம்பரமான வெப்பமண்டல சுவையுடன், மாம்பழங்களும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால் இதில் சில ஆபத்துக்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மாம்பழம் பாதுகாப்பானதா?
அவர்கள் விரும்பும் அளவுக்கு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். தினமும் மாம்பழம் சாப்பிடுவது எடையை அதிகரிக்கும் என்ற பயத்தில் நிறையபேர் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி மாம்பழம் கொழுப்பு இல்லாதது, உப்பு இல்லாதது மற்றும் கோடைகாலத்திற்கான சிறந்த பழங்களாக இதனை பரிந்துரைக்கின்றனர். அதற்காக அதனை தினமும் சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல.

மாம்பழம் எடையை அதிகரிக்குமா?
எதையும் அதிகமாக சாப்பிடுவது எடையை அதிகரிக்கும். இந்த விதிமுறை மாம்பழத்திற்கும் பொருந்தும். நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட கலோரி அளவை அதிகமாக சாப்பிடும்போது அது உங்கள் எடையை கண்டிப்பாக அதிகரிக்கும். எனவே மாம்பழம் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்பது தவறான கருத்து ஆனால் அதன் சாப்பிடும் அளவை கட்டுப்படுத்துவதே முக்கியமானது. உண்மையில் குறிப்பிட்ட கலோரி அளவில் சாப்பிட்டால் மாம்பழம் உங்கள் எடையை குறைக்க உதவும்.

மாம்பழத்தின் ஊட்டச்சத்துக்கள்
மாம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, இரும்பு, தாமிரம் மற்றும் ஏராளமான பொட்டாசியம் ஆகியவை உடலுக்கு மிகச் சிறந்தவை. இது ஒரு எரிசக்தி உணவாகும், மேலும் உங்கள் உடலுக்கு தேவையான சர்க்கரையை வழங்கி நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். இருப்பினும், மாம்பழத்தை அதிகமாக உட்கொள்வது உங்கள் வயிற்றை வீக்கப்படுத்தி செரிமானத்திற்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் உங்கள் கலோரி வரம்பை சரிபார்க்க வேண்டியது அவசியம். அதிகளவு மாம்பழத்தால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை மேற்கிண்டு பார்க்கலாம்.

மலச்சிக்கல்
மாம்பழம் என்பது அதிக நார்ச்சத்து நிறைந்த பழமாகும், இது நமது செரிமான அமைப்புக்கு நல்லது, ஆனால் நீங்கள் அதை மிதமான மதிப்பில் சாப்பிட்டால் மட்டுமே. இந்த பழத்தை நீங்கள் அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், அது உங்களுக்கு கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தரும். அதிகப்படியான மாம்பழத்தை சாப்பிடுவதன் மிகப்பெரிய தீமைகளில் இதுவும் ஒன்றாகும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்
மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது, மேலும் இது அதிக சர்க்கரை உணவாகவும் கருதப்படுகிறது, மேலும் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் மாம்பழம் அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். மாம்பழம் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிரமங்களை அதிகரிக்கும்.

தொண்டைச் சிக்கல்
இந்த பழம் அதிக வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலங்களைக் கொண்டுள்ளது. எனவே ஒரு நாளைக்கு பல மாம்பழங்களை சாப்பிடுவது உங்களுக்கு தொண்டைப் புண் மற்றும் தொண்டை தொற்று ஏற்படலாம். எனவே உங்களுக்கு தொண்டை புண் அல்லது தொண்டை தொற்று இருந்தால் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

மூட்டுவலி
அதிக மாம்பழம் மற்றும் மாம்பழச்சாறு அல்லது சிரப் சாப்பிடுவது உங்களுக்கு மூட்டுவலி வலியை ஏற்படுத்தும் மற்றும் நீங்கள் கீல்வாதம் அல்லது ஏதேனும் யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications