Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
பிரட் வாங்கும் போது நம்மில் பலர் செய்யும் பொதுவான தவறுகள்!
பிரட் வாங்குவதற்கு நாம் சூப்பர் மார்கெட்டுகள் அல்லது கடைகளுக்கு செல்லும் போது, அங்கு முதலில் நாம் அதன் லேபிளைப் பார்ப்போம். அப்படி பார்க்கும் பலர் கவனிக்கும் முதன்மையான விஷயம் தேதி தான்.
பிரட் என்பது நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாகும். அதோடு இது சாண்ட்விச் முதல் க்ரூட்டன்கள் வரை ஏராளமான உணவுகளை தயாரிக்கப் பயன்படும் பல்துறை உணவுப் பொருளாகும். மேலும் இது காலை, மதியம் அல்லது இரவு என எந்த வேளையிலும் சாப்பிட ஏற்றது. பிரட்டுகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை முழு கோதுமை பிரட், பிடா பிரட், ஃபோகாசியா, பிரையோச் போன்றவை.

இதன் பல்துறை மற்றும் பயன்பாட்டின் காரணமாக, பிரட் நமக்கு அன்றாட தேவைகளுள் ஒன்றாகிவிட்டது. எவ்வாறாயினும், பிரட் வாங்குவதற்கு நாம் சூப்பர் மார்கெட்டுகள் அல்லது கடைகளுக்கு செல்லும் போது, அங்கு முதலில் நாம் அதன் லேபிளைப் பார்ப்போம். அப்படி பார்க்கும் பலர் கவனிக்கும் முதன்மையான விஷயம் தேதி தான். ஆனால் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், சரியான பிரட் வாங்க முயற்சி செய்ய வேண்டும். கீழே பிரட் வாங்கும் போது தவிர்க்க வேண்டிய 7 தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அதைப் பார்ப்போம்.

தவறு #1
பிரட் வாங்கும் போது, அதில் கோதுமை என்று பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால், நாம் அது ஆரோக்கியமானது, நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்று நினைப்போம். ஆனால் அந்த பிரட்டை வாங்கும் முன், அந்த பிரட் பாக்கெட்டின் பின் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களைக் கட்டாயம் கவனிக்கவும். அதில் முழு கோதுமை மாவு அல்லது 100% முழு கோதுமை மாவு என குறிப்பிட்டிருந்தால், அது உண்மையில் ஆரோக்கியமானது.

தவறு #2
பெரும்பாலும், பிரட் மாவில் சர்க்கரை சேர்க்கப்படுவதால் தான், அது ஈரப்பதத்துடனும், இனிப்பாகவும் இருக்கிறது. இருப்பினும், இது உங்கள் தினசரி சர்க்கரை நுகர்வை அதிகரிக்கக்கூடும். எனவே ரொட்டியில் கூடுதல் சர்க்கரை இல்லை என்பதை உறுதிப்படுத்த லேபிளை சரிபார்க்கவும். மேலும் கார்ன் சிரப், கரும்பு சாறு மற்றும் தேன் போன்ற பொருட்கள் உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.

தவறு #3
தற்போது பல பிரட் பிராண்டுகள், தங்களின் பிரட் முற்றிலும் இயற்கையானது என்று கூறினாலும், அது உண்மையல்ல. அந்த பிராண்டுகள் இன்னும் மைதா, சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகளை சேர்க்கத் தான் செய்கின்றன. எனவே சிறந்த வழி என்றால் பிரட் லேபிளில் "ஆர்கானிக்" என்ற வார்த்தையைத் தேடுவது. மேலும், லேபிளின் பின்புறம் முழு கோதுமை மாவு மற்றும் சர்க்கரை இல்லை என்று பட்டியலில் குறிப்பிட்டிருந்தால், அது ஆரோக்கியமானது என்பதை நிரூபிக்கும்.

தவறு #4
முழு தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட் என இரண்டுமே ஒருவரை எளிதில் குழப்பமடையச் செய்யலாம். இரண்டுமே கோதுமையால் தயாரிக்கப்படுபவை தான். இருப்பினும், அதில் முழு தானிய பிரட்டில், அரிசி, பார்லி போன்ற தானியங்கள் இருக்கும். மேலும் முழு கோதுமை பிரட், ஒரு வகையான முழு தானிய பிரட் தான்.

தவறு #5
நல்ல பிரஷ்ஷான பிரட் தான் சிறந்த பிரட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நீண்ட காலம் பிரட் பிரஷ்ஷாக இருக்க பெரும்பாலும் பிரட்டுகளில் பாதுகாப்பு பொருட்கள் சேர்க்கப்படுகிறது. உங்களால் முடிந்தால், கூடுதல் பாதுகாப்பு பொருட்கள் கலந்த பிரட்டைத் தவிர்த்திடுங்கள்.

தவறு #6
பிரட்டின் சிறந்த நன்மைகளில் ஒன்று, அதன் நார்ச்சத்து தான். ஆனால் ஒரு பிரட் எவ்வளவு பதப்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு நார்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. எனவே முழு தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட் என எதை வாங்கும் போது, அதில் 3-4 கிராம் நார்ச்சத்து உள்ளதா என்பதை கண்காணியுங்கள்.

தவறு #7
பிரட் தயாரிக்கும் போது, அதில் சேர்க்கும் முக்கியமான பொருட்களுள் ஒன்று உப்பு. ஆனால் சில பிராண்ட்டுகள், பிரட்டின் சுவையை அதிகரிக்க அல்லது பாதுகாப்பிற்காக அதிக உப்பு சேர்க்கின்றன. எனவே பிரட் வாங்கும் போது, அதன் லேபிளில் 150 மி.கி.க்கு குறைவான சோடியம் உள்ளதா என்பதை பார்த்து, அப்படிப்பட்ட பிரட்டை வாங்குங்கள்.



Click it and Unblock the Notifications