நீங்க திடீர்-ன்னு குண்டாக இதுதான் முக்கிய காரணம் தெரியுமா?

உடலில் லெப்டின் அளவுகளை அதிகரிப்பதற்கான சிறந்த வழி, லெப்டின் உணர்திறனை அதிகரிக்கும் உணவுகளை உண்பது தான்.

கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, மூளையிடம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்பதையும் சொல்லும் என்பது தெரியுமா? என்ன நம்ப முடியவில்லையா? ஆம், அப்படிப்பட்ட ஹார்மோன் தான் 'லெப்டின்'.

Amazing Food Sources To Increase Leptin Levels

இந்த லெப்டின் ஹார்மோனானது உடலுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் இந்த அத்தியாவசிய ஹார்மோன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. உங்களுக்கு இந்த லெப்டின் ஹார்மோன் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெப்டின் என்றால் என்ன?

லெப்டின் என்றால் என்ன?

லெப்டின் (leptin) என்பது கொழுப்புத் திசுவால் சுரக்கப்பட்டுப் பசியைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய ஹார்மோன் ஆகும். இது பல செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும். அதில் உடலுக்கு வேண்டிய உணவு கிடைத்து விட்டது என்பதை மூளைக்கு சொல்வது மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை தூண்டிவிடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எப்போது கொழுப்பு செல்கள் உணவுகளால் நிரப்பப்படுகிறதோடு, லெப்டின் உற்பத்தி செய்யப்பட்டு, மூளைக்குள் நுழைந்து பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, வயிறு நிறைந்துவிட்ட உணர்வைக் கொடுக்கும். ஒருவரது உடலில் லெப்டின் அளவு மிகவும் குறைவாக இருந்தால், உடலில் கொழுப்பு குறைவாக அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்புக்கள் உள்ளன.

ஆய்வுகள்...

ஆய்வுகள்...

அதிகமான லெப்டின், கொழுப்புக்களை கரைக்கத் தூண்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆய்வுகளில் முற்றிலும் மாறுபட்ட முடிவு கண்டறியப்பட்டுள்ளது. அதில் உடல் பருமன் கொண்டவர்களின் உடலில் அளவுக்கு அதிகமாக லெப்டின் சுரக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இப்படி அதிகமான லெப்டின் அளவுகளால் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளும் அதிகமாகுமாம்.

ஒருவரது உடலில் அதிகமான அளவில் லெப்டின் இருந்தால், அது லெப்டின் உணர்திறனைக் குறைத்து, அதன் விளைவாக பசி தூண்டப்பட்டு, உணவுகளின் மீது பிரியம் அதிகரித்து, உடல் பருமனை அதிகரித்துவிடும்.

உணவுகள் லெப்டினை வழங்குமா?

உணவுகள் லெப்டினை வழங்குமா?

குறிப்பிட்ட சில உணவுகளில் லெப்டின் நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட உணவுகளை உண்பதால், குடலால் லெப்டினை உறிஞ்ச முடியாது. ஆகவே இதுப்போன்ற உணவுகளை உட்கொள்வது உதவாது. லெப்டின் நிறைந்த பெரும்பாலான உணவுகள் பொதுவாக லெப்டின் உணர்திறனைத் தான் அதிகரிக்குமே தவிர, லெப்டினைக் கொண்டிருப்பதில்லை.

ஆகவே உடலில் லெப்டின் அளவுகளை அதிகரிப்பதற்கான சிறந்த வழி, லெப்டின் உணர்திறனை அதிகரிக்கும் உணவுகளை உண்பது தான். இதனால் லெப்டின் ஹார்மோன் அதிகரிக்காவிட்டாலும், லெப்டின் உணர்திறன் அதிகரித்து, உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடு சிறப்பாக தூண்டப்படும். இதன் விளைவாக பசியுணர்வு கட்டுப்படும் மற்றும் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இப்போது லெப்டின் நிறைந்த உணவுகளைக் காண்போம்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

லெப்டின் உணர்திறனை அதிகரிக்க உதவும் சிறப்பான உணவுகளுள் ஒன்று தான் புரோட்டீன் உணவுகள். புரோட்டீன் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவுவதோடு, லெப்டின் அளவுகளையும் அதிகரிக்கும். மேலும் புரோட்டீன் உணவுகளை உண்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிறைந்திருக்கும்.

கொழுப்புமிக்க மீன்

கொழுப்புமிக்க மீன்

கொழுப்புமிக்க மீனில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இவை உடலில் லெப்டின் உணர்திறனை அதிகரிக்க உதவுவதோடு, உடலின் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவிப் புரியும். இதன் விளைவாக இதயம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு சீரான அளவில் இருக்கும்.

ஜிங்க் உணவுகள்

ஜிங்க் உணவுகள்

பல ஆய்வுகளில் லெப்டின் குறைபாடு உள்ளவர்களுக்கு ஜிங்க் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் உடல் பருமன் உள்ளவர்களது உடலிலும் ஜிங்க் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உடலின் லெப்டின் உணர்திறனை அதிகரிப்பதற்கு சிறப்பான வழி மற்றும் ஜிங்க் சத்தின் அளவை அதிகரிப்பதற்கான வழி, மாட்டிறைச்சி, நட்ஸ், கடல் உணவுகள் மற்றும் பூசணிக்காய் போன்ற உணவுகளை உண்பது தான்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் கொழுப்புக்களின்றி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அதிலும் கேல், ப்ராக்கோலி, பசலைக் கீரை போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது. இவற்றில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. நார்ச்சத்து, லெப்டின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கக்கூடிய முக்கிய சத்தாகும்.

லெப்டின் உணர்திறனைக் குறைக்கும் உணவுகள்:

லெப்டின் உணர்திறனைக் குறைக்கும் உணவுகள்:

நாம் இதுவரை லெப்டின் உணர்திறனை அதிகரித்து, உடலில் ஆரோக்கியமான லெப்டின் அளவுகளைப் பராமரிக்க உதவும் உணவுகளைப் பார்த்தோம். ஆனால் குறிப்பிட்ட சில உணவுகள் லெப்டின் உணர்திறனைக் குறைக்கும் என்பது தெரியுமா?

அதுவும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் லெப்டின் உணர்திறனைப் பாதிக்கக்கூடியவைகளாகும். மேலும் இந்த உணவுகள் பல்வேறு ஆபத்தையும் உண்டாக்கக்கூடியவை. எனவே இந்த வகை உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion