Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க தொப்பை போடாது
சாப்பிடும் போது பேசக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
பெரியவர்கள் நாம் சாப்பிடுகின்ற பொழுது பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நாமோ அதை ஒருபோதும் கேட்டதே இல்லை. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது என்றால் நம்புவீர்களா?

ஆனால் அது உண்மை. இதுபோல் இதற்குள் இன்னும் சில விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. அப்படி சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

ரசித்து சாப்பிட
சாப்பாடு சாப்பிடுகின்ற பொழுது, நாம் சாப்பிடும் உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சாப்பாட்டின் ருசி நமக்குள் சென்று சேருகின்றது என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்குப் பின்னால் சில விஞ்ஞான அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. அதைப் பற்றி பார்க்கலாம்.

முக அமைப்பு
நம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் உணவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டாம். நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.

வகைப்பாடுகள்
தொண்டைப் பகுதியை மட்டும் மருத்துவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அதன்படி,
முகத்தோடு இணைந்த தொண்டை
வாயோடு இணைந்த தொண்டை
குரல்வளையோடு இணைந்த தொண்டை
என்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

உணவு உள்ளே செல்லுதல்
வாய்ப்பகுதியில் இருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டதட்ட நாம் ரயிலில் போகும்போது போடப்படுகிற லெவல் கிராஸிங்கைப் போன்றது.

எப்படி புரிந்து கொள்வது
அதென்ன ரயில்வே கிராஸிங் மாதிரி என்று கேட்கிறீர்களா? சுவாசப் பாதையை ரோடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உணவுப் பாதை என்பது ரயில்வே தண்டவாளம் போல. நம்முடைய சாதாரண ரோடைப் போலத்தான் நம்முடைய சுவாசக்குழாய்ப் பகுதியும் எப்போதும் திறந்தே இருக்கும். காற்றும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.
ஆனால் உணவுப் பாதை ரெயில்வே பாதையைப் போன்று எப்போதாவது தான் திறக்கும். பின்பு மூடப்படும். அதாவது நாம் உணவு உள்ளே செலுத்தும் போது சுவாசப் பாதை உணவுப் பாதையைத் திஜறந்து வழிவிடும். உணவு உள்ளே சென்ற பின்பு மீண்டும் அது திறக்கும். மூடும். இதுதான் நாம் சாப்பிடும் போது உடலில் நடக்கும்.

காற்றும் உணவும்
அதேசமயம் உணவு சிறிதேனும் காற்று உள்ளே செல்லும் சுவாசப் பாதைக்குள் சென்று விட்டால் அது பேராபத்து. அதை வெளியேற்றுவதற்கான நம் சுவாசக்குழாய் எடுக்கும் முயற்சி தான் புரையேறுவது என்று சொல்லுவோம். இதை வாட்ச்டர்க் மெக்கானிசம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.

மற்ற சமயங்களில்
சாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற சமய்ஙகளில் கூட புரையேறும். நாம் நன்றாக அசந்து தூங்குகின்ற பொழுது நம்மையே அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடும். நாம் துங்குகிறோம் என்று சுவாசக்குழாய் பொறுமையாக இருக்காது. அதை வெளியே தள்ள முயற்சித்து புரையேறச் செய்யும். இப்படி சுவாசக் குழாய்க்கும் உணவுக் குழாய்க்கும் இப்படி நேரடித் தொடர்பு இருப்பதால் தான் நாம் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்.



Click it and Unblock the Notifications