Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
சோமாலியா நாட்டுல சமோசா சாப்பிட்டா சிறை தண்டனை தான்! காரணம் தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!
சாப்பாடு மீது அதீத காதல் எல்லோருக்கும் இருக்கும். எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய கால கட்டத்தில் எல்லோருக்குமே உள்ளது தான். நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடவது நமது அடிப்படை உரிமை, அது தான் நியாமான சுதந்திரம் கூட. ஆனால், உலக அளவில் சில நாடுகளில் இந்த உணவை சாப்பிட கூடாது, அந்த உணவை சாப்பிட கூடாது என்கிற மோசமான வரையறைகள் உள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகள் மூட நம்பிக்கையின் பெயர்களிலும், ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதன் அடிப்படையிலும் சில நாடுகளில் ஆண்டுகளாக தடை செய்யப்பட்டே உள்ளது. இதே போன்று தான் சோமாலியா நாட்டிலும் நமது இந்தியாவின் பாரம்பரிய உணவான சமோசாவும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான உண்மை காரணத்தை தெரிந்து கொண்டால் நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். ஏன் சோமாலியா நாட்டில் சமோசாவை தடை செய்துள்ளனர்? இதன் பின் இருக்கும் உண்மை காரணம் என்ன? வேறு எந்தெந்த நாடுகளில் இது போன்ற தடை செய்யப்பட்ட உணவுகள் உள்ளது... முதலிய பல சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பால்
அமெரிக்கா போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்படாத பாலை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பச்சை பாலை அங்கு விற்க கூடாது என சுமார் 22 மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தக்காளி சாஸ்
பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடும் போது டொமட்டோ சாஸ் தான். ஆனால், இந்த நிலை தான் பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் அங்கு படிக்கும் போது பள்ளி குழந்தைகள் இந்த தக்காளி சாஸை பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு மூல காரணம் குழந்தைகளுக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்பதால் மட்டுமே.

குதிரை இறைச்சி
லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குதிரை இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிரையை கொல்வதும் அதன் இறைச்சியை விற்பதும், வாங்குவதும் மிக பெரிய அளவில் குற்றமாக கருதப்படுகிறது.

சுவிங் கம்
சிங்கப்பூரில் சுவிங் கம் சாப்பிடுவது ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதை விற்கவும் வாங்கவும் மிக பெரிய அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு முதல் இந்த தடை நீடித்து வருகிறது.

மாட்டிறைச்சி
சில மத சடங்கு காரணமாக இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றமாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. சில மதத்தினர் இதை வரவேற்றும், சிலர் இதை எதிர்த்தும் நீண்ட காலமாக வருகின்றனர். ஆனால், இன்று வரை மாட்டிறைச்சியை இந்தியாவில் பலர் சாப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெல்லி
சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த ஜெல்லிகளை ஐரோப்பிய யூனியனில் தடை செய்துள்ளனர். இதில் மிக மோசமான அமிலங்களை சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதன் பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் இதை தடை செய்து விட்டனர்.

சமோசா
சோமாலியா நாட்டில் சமோசா விற்பதும், சாப்பிடுவதும் மிக பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இதுவும் ஒரு மதத்தின் அடிப்படையில் தான் தடை செய்யப்பட்டுள்ளது. சோமாலியா நாட்டில் இந்த முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குறிப்பதால் இதை 2011 ஆம் ஆண்டு முதல் தடை செய்து வருகின்றனர்.

கிண்டர் ஜாய்
முட்டை வடிவில் இருக்கும் இந்த விளையாட்டு மற்றும் சாப்பிடும் பொருளை அமெரிக்காவில் தடை செய்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படுவதால் இதை தடை செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications