For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்

|

முட்டை என்பது உலகில் பெரும்பாலானோர் விரும்பும் ஒரு உணவுப்பொருளாகும். முட்டை சுவையான உணவாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. தினமும் காலையில் இரண்டு முட்டைகளுடன் அந்த நாளை தொடங்குவது உங்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும். முட்டை ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதனை குறிப்பிட்ட அளவிற்குதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நல்ல முட்டையாக பார்த்து வாங்குவது கொஞ்சம் கடினமானது. முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிதவை சோதனை

மிதவை சோதனை

முட்டை சாப்பிடுவதற்கு ஏற்றதா, ப்ரெஷ்ன முட்டைதானா என்பதை கண்டறியும் எளிய வழி மிதவை சோதனையாகும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மென்மையாக போடவும். முட்டை அடிமட்டத்தை அடைந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றது. ஆனால் மூழ்காமல் ஒரே ஓரத்தில் மிதந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றதல்ல. அந்த முட்டையை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு காரணம் நாள்பட்ட முட்டைகள் ஓடுகளில் காற்று எளிதில் புகுந்து விடும். ஆனால் புதிய முட்டைகளில் காற்று உள்ளே செல்ல அதிக நேரம் எடுப்பதால் அது உடனடியாக மூழ்கிவிடும். இந்த சோதனை நூறு சதவீதம் சரியானதாக இருக்கும்.

ஒளி சோதனை

ஒளி சோதனை

முட்டையை வெளிச்சத்திற்கு எதிராக வைக்கவும். உதாரணத்திற்கு மெழுகுவர்த்திக்கு நேராக வைக்கவும். முட்டையின் வட்டமான பகுதியில் காற்று பைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த காற்றுப்பை 3.175 மிமீ-க்கு குறைவாக இருந்தால் அந்த முட்டை ப்ரஷானது மற்றும் சாப்பிட ஏற்றது. ஒருவேளை அதைவிட பெரியதாக இருந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றதல்ல.

வாசனை

வாசனை

முட்டையை சாப்பிட ஏற்றதா என்பதை கண்டறிய செய்யப்பட்ட மிகவும் பழமையான சோதனை இதுவாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முட்டையின் மீது சல்பர் வாசனை வருகிறதா என்பதை முகர்ந்து பார்க்க வேண்டும். ஒருவேளை அதில் எந்த வாசனையும் வரவில்லை என்றால் நீங்கள் அதனை சாப்பிடலாம். வாசனை வராமலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை உடைத்து முகர்ந்து பார்க்கவும். ஒருவேளை அதில் விரும்பத்தகாத வாசனை வந்தால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.

MOST READ: ஆண்களே! உங்களுக்கு வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பழத்துல ஒன்னையாவது சாப்பிடுங்க...!

உலுக்கல் சோதனை

உலுக்கல் சோதனை

முட்டையை நன்றாக குலுக்குவது கூட முட்டை நல்ல முட்டையா இல்லையா என்பதை அறிய உதவும். முட்டையை உங்கள் காது அருகில் வைத்துக்கொண்டு நன்கு குலுக்கவும். முட்டைக்குள் ஏதெனும் நகர்வது போன்ற சத்தத்தை கேட்டால் அந்த முட்டை புதிய முட்டை அல்ல. அதனை தவிர்த்து விடுவது நல்லது, ஏனெனில் புதிய முட்டையில் நீங்கள் எந்த சத்தத்தையும் கேட்க இயலாது.

பார்த்து ஆராய்ச்சி செய்வது

பார்த்து ஆராய்ச்சி செய்வது

கெட்ட முட்டைகளில் நீங்கள் சில அடையாளங்களை பார்க்கலாம். முட்டையின் ஓட்டில் ஏதாவது விரிசல் இருந்தாலோ அல்லது பவுடர் இருந்தாலோ அந்த முட்டை நல்லதல்ல . ஏனெனில் விரிசல்கள் இருக்கும் முட்டைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. அந்த முட்டையை உடைத்து உள்ளே ஓட்டில் பார்க்கவும். ஓட்டில் பச்சை, நீலம், கருப்பு போன்ற நிறத்தில் ஏதவது இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி எதாவது இருந்தால் அந்த முட்டையை தவிர்த்து விடவும்.

தட்டு சோதனை

தட்டு சோதனை

முட்டை புதியதுதானா என்பதை கண்டறிய மற்றொரு சிறந்த வழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை கண்ணுக்கு நேராக வைத்து பார்க்கவும். பழைய முட்டையின் மஞ்சள் கருவானது உடனடியாகி பரவி விடும், ஆனால் புதிய முட்டையின் கரு அசையாமல் அப்படியே இருக்கும். முட்டையின் தரத்தை அறிய எளிய மற்றும் சிறந்த வழி இதுவாகும்.

MOST READ: உங்கள் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளாக இருக்கும் தெரியுமா?

எப்படி பாதுகாக்க வேண்டும்?

எப்படி பாதுகாக்க வேண்டும்?

குளிர்சாதன பெட்டியின் குளிர்ந்த வெப்பநிலை பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கும். குளிர்சாதன பெட்டியின் மேல் அடுக்கில் இல்லாமல், முட்டைகளை நடுத்தர பெட்டியில் வைக்கவும். முட்டைகளை அட்டைப்பெட்டியில் வைப்பது அவற்றுக்கு பாதுகாப்பாக இருப்பதுடன் நீண்ட நாட்களுக்கு ப்ரெஷாக வைத்திருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: egg முட்டை
English summary

Simple Ways to Find Out If Eggs are Are Good To Eat Or Not

Here are the simple ways to find out if eggs are good to eat or not.
Story first published: Wednesday, June 26, 2019, 17:46 [IST]