For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

சுத்திகரிக்கப்பட்ட மற்றும் மினரல் வாட்டரை கூடு படுத்தி குடி்பபது சாதாரண தண்ணீர் குடிப்பதை விட கேடு விளைவிக்குமா என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

|

குளிர்காலமும் மழைக்காலமும் வந்துவிட்டால் போதும் காய்ச்சல், ஜலதோஷம், தலைபாரம், உடம்பு வலி, ஆஸ்துமா பிரச்சினை, தலைவலி என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

drink boil mineral water

அந்த சமயங்களில் தண்ணீர் தாகம் அதிகமாகவே எடுக்கும். என்ன சுத்தமான தண்ணீர் குடித்தாலும் திருப்தியாகவே இருக்காது. அந்த சமயத்தில் வேறு வழியின்றி நம்முடைய நாவும் வெந்நீரைத் தேடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர், மழைக்காலம்

குளிர், மழைக்காலம்

குளிர் மற்றும் மழைக்காலங்களில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தொண்டையில் வறட்சி அதிகமாகிக் கொண்டே போகும். அதுபோன்ற சமயங்களில் தாகத்துக்கு சுடு தண்ணீர் குடிப்பதா? சாதாரண தண்ணீர் குடிப்பதா அல்லது இவற்றால் தொற்று வரலாம் என சந்தேகித்து மினரல் வாட்டர் குடிப்பதா என நாம் குழம்புவதுண்டு. அதுபற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

MOST READ: நெஞ்சில் தேங்கியிருக்கிற நாள்பட்ட சளியை உடனடியாக வெளியேற்ற பாட்டி வைத்தியங்கள் இதோ...

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா?

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா?

நம்முடைய உடலுக்குத் தேவையான மினரல்கள், தாது உப்புகள், சுத்திகரிக்கப்பட்ட உப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்ட மினரல் வாட்டரை நாம் சுட வைத்துக் குடித்தோமானால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். அப்போ உண்மை தான் என்ன?

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்

பொதுவாக நாம் வெளியில் தண்ணீர் வாங்கித் தான் குடித்துக் கொண்டிருக்கும். அவ்வாறு வாங்கும்போது சில குறிப்பிட்ட பிராண்டுகளைத் தவிர மற்றவையெல்லாம் ஆர்.ஓ. ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீர் தான். இதை சிலர் நம்முடைய வீடுகளிலேயே சில ஆயிரங்கள் செலவு செய்து பொருத்திக் கொள்கிறோம். அதாவது நாம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தான் குடிப்பதற்கானப் பயன்படுத்தி வருகிறோம்.

சத்துக்கள் வெளியேறுமா?

சத்துக்கள் வெளியேறுமா?

இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருக்கின்ற அளவுக்கு அதிகமான பாஸ்பரஸ் போன்ற உப்புகள் சுத்திகரிக்கப் படுகிற பொழுது வெளியேறிவிடும். அதைத் தவிர மற்றபடி எந்தவித சத்துக்களும் வெளியேறாது. பாஸ்பரஸ் வெளியேறியதும் இதுவும் குடிப்பதற்கு ஏற்ற சாதாரண குடிநீர் போன்றது தான். அதனால் சாதாரண நீரை சுட வைப்பது போன்றே இந்த நீரையும் சுட வைக்கலாம். இதனால் எந்தவித சத்துக்களும் வெளியேறாது.

MOST READ: ரத்ததானத்தால் தொடரும் எய்ட்ஸ் பிரச்சினை... யார் ரத்ததானம் செய்யலாம்? யார் செய்யக்கூடாது?

பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள்

தண்ணீரை மீண்டும் மீண்டும் சுட வைக்கலாமா என்ற கேள்வி கூட சிலரும் எழும். அப்படியும் குடிக்கலாம். அதனால் தண்ணீரில் உள்ள எந்த ஊட்டச்சத்து வெளியேறாது.

பொதுவாக நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் என்பது ஒரு வெளி ஊடகம் போன்றது. இதன் மீது வெப்பம், காற்று ஆகியவை படுகின்ற பொழுது அவை தண்ணீரை பாதிக்கத் தொடங்கும். தண்ணீரில் காற்றும் வெப்பமும் பாக்டீரியாக்களை உருவாக்கத் தொடங்கிவிடும். இது சாதாரண தண்ணீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மினரல் வாட்டர் ஆகிய எல்லாவற்றுக்குமே பொருந்தும்.

எவ்வளவு நேரத்தில்

எவ்வளவு நேரத்தில்

வாட்டர் கேனையோ அல்லது மினரல் வாட்டர் பாட்டில்களையோ ஒருமுறை திறந்து விட்டீர்கள் என்றால் அதை 24 மணி நேரத்துக்குள்ளாக பயன்படுத்தி விட வேண்டியது நல்லது. இல்லையென்றால் இதில் பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்கிவிடும். அதற்காகத் தான் மினரல் வாட்டர் பாட்டில்களைக் கூட மறுமுறை குடித்துவிட்டு தூக்கிவீசி விட வேண்டும் அதை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்வார்கள்.

MOST READ: பஸ்ஸில் போகும்போது பிஸ்கட் சாப்பிடக்கூடாது... ஏன்னு தெரியுமா?

மேலைநாடுகளில்

மேலைநாடுகளில்

பொதுவாக தண்ணீர் சுத்திகரிப்பு முறை என்பது மேலை நாடுகளுக்கும் நம் நாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மேலைநாடுகளில் சுத்தமான அருவிகளில் இருந்து கிடைக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து, அதன்பின் அதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுப்புக்களான மினரல்களை தேவையான விகிதத்தில் கலந்து பயன்படுத்துகிறார்கள். அதுதான் உண்மையில் மினரல் வாட்டர்.

அப்படி கிடைக்கிற மினரல் வாட்டரை காய்ச்சிக் குடிக்கக் கூடாது. அப்படி காய்ச்சினால் அதில் சேர்க்கப்பட்ட மினரல்கள் பயனின்றி வெளியேறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

is it harmful to drink boil mineral water?

here we are talking about purified water and mineral water are boiled is harmful than odrinary water.
Story first published: Monday, January 7, 2019, 15:22 [IST]
Desktop Bottom Promotion