Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
வேலை நேரத்தில் இந்த 9 உணவுகளை தவறி கூட சாப்பிடாதீர்கள்..! மீறினால் ?!
வேலை இல்லாமல் வேலையை தேடி அலையும் வி.ஐ.பி-க்கள் அதிகம் என்பது உண்மை தான். என்றாலும் வேலையில் உள்ள சில நபர்கள் எப்போதுமே பிசியாகவே இருப்பார்கள். அல்லது பிசியாக காட்டி கொள்வார்கள். என்னப்பா பண்ணுற? அப்படினு கேட்டா, பலரின் தற்போதைய பதில் 'பிசியாக இருக்கேன்' என்பது தான். இப்படிப்பட்ட பதில்கள் நம்மை எரிச்சல் அடைய செய்தாலும் பல சமயங்களில் இது உண்மையாகவும் உள்ளது.

நாம் சும்மா இருந்தாலோ அல்லது வேலையில் இருந்தாலோ சில விஷயங்களை செய்யவே கூடாது. முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில் நாம் உஷாராக இருத்தல் அவசியமானது. வேலை நேரங்களில் வேலையை விட பலர் நொறுக்கு தீனிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அவ்வாறு நாம் சாப்பிடும் நொறுக்கு தீனிகள் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடியதாக இருக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வேலை நேரத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் மோசமான பக்க விளைவு உண்டாகும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

வேர் கடலை
பலருக்கு இது போன்ற பருப்பு வகைகளை வேலை நேரத்தில் கொறிப்பது மிகவும் பிடிக்கும். வேர் கடலை சிறந்த உணவு தான். என்றாலும், இதனை வேலை நேரத்தில் சாப்பிட்டால் கலோரிகள் கூடி விடும். அரை கப் வேர்க்கடலையில் சுமார் 430 கலோரிகள் உள்ளது. ஆதலால், இது உடல் பருமனை அதிகரிக்கும்.

காபி
நேரம் காலம் தெரியாமல் காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. வேலை நேரத்தில் அதிக அளவு காபி குடித்தால் அது மோசமான பாதிப்பை உண்டாக்கும்.
முக்கியமாக செரிமான கோளாறு, பசியின்மை, உடல் எடை முதலிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். 1 நாளைக்கு 1 கப் காபியே அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிஸ்கட்ஸ்
தினமும் 1 பிஸ்கட் பாக்கெட்டை காலி செய்யும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், இது போன்ற உணவுகள் சுவையை தந்தாலும் உங்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், பசியின்மை போன்றவை இதனால் கிடைக்கும் பாதிப்புகள்.

மில்க்ஷேக்ஸ்
இது தற்போதைய ட்ரெண்ட் செட்டிங்காகவே உள்ளது. கையில் ஒரு மில்க்ஷேக் வைத்தே கொண்டே வேலையை பார்க்கின்றனர். ஆனால், இப்படிப்பட்ட பழக்கம் நமது உடல் நலத்தை பாதிக்கும்.
கூடவே கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் எடை, இதய பாதிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தொடக்க புள்ளியாக இருக்கும்.

சிக்கன்
ஃபாஸ்ட் ஃபூட்ஸ் உணவகங்களின் தாக்கம் தான் நம்மை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சிலர் வேலை நேரத்தில் எதையவது ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.
குறிப்பாக வறுத்த சிக்கன், சிக்கன் லாலிபாப், தந்தூரி சிக்கன் போன்றவை இவர்களின் பிரதான தேர்வாக இருக்கும். ஆனால், இதனால் கிடைக்கும் பாதிப்பே அதிகம். எனவே இது போன்ற உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

சிப்ஸ்
எப்போதுமே எதையாவது கொறித்து கொண்டே இருங்க வேண்டும் என்கிற மோசமான பழக்கம், உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்து விடும்.
இதில் சிப்ஸும் அடங்கும். இவை கொழுப்பை அதிகரித்து இதய கோளாறுகளை உண்டாக்கும். மேலும் உடல் எடையையும் இரட்டிப்பாக்கும்.

பாப்கார்ன்
வேலை நேரத்தில் பாப்கார்ன் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு ஆபத்து காத்துள்ளது என்பதே உண்மை. மைக்ரோவேவ் பாப்கார்ன்கள் மிகவும் அபாயகரமான தன்மை கொண்டவை. இதனால் புற்றுநோய் கூட உண்டாக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேக்குகள்
ஒரு சாதாரண கேக்கில் 10-12 கிராம் அளவு கொழுப்பும், 300-400 அளவு கலோரிகளும் உள்ளதாம். ஆதலால், இதை சாப்பிடுவோருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து நெருங்கி வருகிறது என்பது உறுதி. எப்போதாவது 1 பீஸ் சாப்பிடுவதில் தவறில்லை.

சாக்லேட்
தூக்கம் வர கூடாது என்பதற்காக இந்த சாக்லேட் ஆயுதத்தை பலரும் கையில் எடுத்து கொள்வார்கள். ஆனால், கோக்கோ அதிகம் நிறைந்த சாக்லேட்டுகளை தவிர மற்ற சாக்லேட்டுகள் உடலுக்கு தீங்கு தருபவை. குறிப்பாக கலர் கலராக உள்ள மிட்டாய்களை சொல்லலாம். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
எனவே, மேற்சொன்ன உணவுகளை வேலை நேரத்தில் தவிர்ப்பது உங்கள் உடலை நோய்கள் இல்லாமல் வைத்து கொள்ளும்.



Click it and Unblock the Notifications