Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
ஆண்களே, இந்த இரண்டு உணவையும் சேர்த்து சாப்பிட்டா உங்களின் எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்..!
இப்போதெல்லாம் நோய்களின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை விட நோய் கிருமிகளின் வீரியம் தான் இரு மடங்காக உள்ளது. இதனை எளிதாக நம்மால் சரி செய்ய முடியும். அதற்கு ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டாலே போதும்.

பொதுவாக உணவுகள் தனித்து இருக்கும் போது தர கூடிய பலனை விட அவை வேறொன்றோடு சேரும்போதும் அதன் பயன் மேலும் கூடும். அப்படிப்பட்ட உணவுகள் நம் வீட்டிலே இருந்தால் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். உண்மைதாங்க, நமது வீட்டில் இருக்க கூடிய சில உணவுகள் வேறொன்றோடு சேரும்போது பல அற்புதத்தை நமது உடலில் செய்கின்றன. வாங்க, அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மாற்றம் ஏன்..?
பெரும்பாலும் உணவுகளை வேறொரு உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் பலன் இரட்டிப்பாகி விடும். இது இயல்பான ஒன்றுதான்.
என்றாலும், எல்லா வகையான உணவுகளில் இது ஏற்படுவதில்லை. இப்படி கலவையாக சேரும்போது தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கிறது.

பூண்டும் மீனும்
நாம் சாப்பிட கூடிய மீனில் கொஞ்சம் பூண்டை பொடிசாக நறுக்கி சமைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விடும்.
இதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வருவதை தடுத்து விடலாம். மேலும், வாயு தொல்லையும் குறையும்.

யோகர்டும் வாழைப்பழமும்
இந்த கலவையில் பொட்டாசியமும், புரதச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. தசைகளின் வளர்ச்சியை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இருக்க வழி செய்கிறது.
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்.

கிரீன் டீயும் எலுமிச்சையும்
கிரீன் டீயில் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் உடலின் மெட்டபாலிசம் கூடும். அத்துடன் உடனடியாக எனர்ஜியை பெற்று தந்து சோர்வை போக்கி விடும்.
சாதரணமாக இந்த கிரீன் டீயை குடிப்பதை விட இப்படி எலுமிச்சையோடு சேர்த்து குடித்தால் 13 மடங்கு ஆற்றலை அதிகமாக எடுத்து கொள்ளும்.

ஆப்பிளும் சிவப்பு ஒயினும்
இந்த கலவை உணவை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு முக்கிய தகவலும் வெளி வந்துள்ளன. அதாவது, ஆப்பிளும் ரெட் ஒயினும் அருமையான கலவையாம்.
இதனை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்பட்டுள்ளவீக்கங்கள் குறையும். மேலும், ரத்தம் உறைதலை தடுத்து சீரான உடலை தரும்.

மாட்டிறைச்சியும் கேரட்டும்
உங்களின் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக வைக்கும் ஆற்றல் இந்த கலவைக்கு உள்ளது. இந்த இறைச்சியில் அதிக அளவு ஜின்க் உள்ளது.
எனவே, உடல் வலிமையை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இவை வைத்து கொள்ளும்.

முட்டையும் முளைக்கீரையும்
முட்டையுடன் முளைக்கீரையையும் சேர்த்து சாப்பிட்டால் இதன் பலன் இரட்டிப்பாகி விடும். குறிப்பாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலில் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். மேலும் இதய நோய்கள், புற்றுநோயில் இருந்தும் உங்களை காக்கும்.

தக்காளியும் ஆலிவும்
மற்ற வகை உணவுகளை விட இதன் கலவை துரிதமாக உடலில் வேலை செய்யுமாம். இவற்றில் உள்ள லிகோபைன் என்கிற மூல பொருள் புற்றுநோயை தடுத்து, இதய பிரச்சினைகள் இல்லாமல் வைத்து கொள்ளும். எனவே, தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து உண்ணுங்கள்.

காலை உணவாக
காலையில் ஓட்ஸுடன் ஆரஞ்சு ஜுஸை சேர்த்து சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
இந்த கலவை கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்து செரிமான கோளாறு ஏற்படாதவறு பார்த்து கொள்கிறது.

சக்கரைவள்ளி கிழங்கும் மிளகாயும்
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வெறுமையாக சாப்பிடுவதை விட மிளகாய் சேர்த்தது சமைத்து சாப்பிட்டால் அருமையான தீர்வு கிடைக்கும்.
இவற்றில் பீட்டா கேரட்டின், வைட்டமின் எ நிறைந்துள்ளதால் நல்ல சுவையை கூட்டி எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறதாம்.



Click it and Unblock the Notifications
